Tamil Leader News
முக்கியம்
தேசியப் பூங்காக்களில் பிகினி பிடிப்பு: சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் பாரிய இடைவெளி!●காவன்திஸ்ஸ துயரம்: யானையின் வயிற்றில் ஈயக் குண்டுகள்; விசாரணைகள் CID வசம்!●வீட்டுவசதி நெருக்கடியால் 14 ஆண்டுகளுக்குப் பின் ஸ்பெயினில் மாபெரும் பொது வேலைநிறுத்தம்!●நாடு திரும்புகிறார் அனோஜன் சிவராசா; சவூதியில் மரண தண்டனையிலிருந்து  பூரண விடுதலை!●1990 சுவசரிய சேவைக்கு இந்தியாவிலிருந்து மேலும் 100 நோயாளர் காவு வண்டிகள்; வருகை நேரம் 10 நிமிடங்களாகக் குறைகிறது!●நிதித்துறையில் எழுந்துள்ள புதிய அபாயங்கள் குறித்து மத்திய வங்கியிடமிருந்து விசேட எச்சரிக்கை!●6 மாதங்களில் 271 மில்லியன் நட்டம்: அரச ஊடகங்களுக்கு என்ன நேர்ந்தது?●DIGInote: 2027 வரவு-செலவுத் திட்டம் இன்று நாடாளுமன்றத்தில் - மூலதனச் செலவு 2 ட்ரில்லியன்!●2027 வரவு செலவுத் திட்டம்: இலக்கங்களின் ஸ்திரத்தன்மை மக்களின் பாக்கெட்டுக்குத் தெரியுமா?●இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●
செய்திகள்

பேலியகொட அமிலவின் இரு சகாக்கள் போதைப்பொருளுடன் கைது!

T

The Leader Desk

நவம்பர் 10, 2024 • 6:10 AM

பேலியகொட அமிலவின் இரு சகாக்கள் போதைப்பொருளுடன் கைது!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • கடத்தல்காரரான பேலியகொட அமில என்பவருக்கு சொந்தமானது என கூறப்படும் சுமார் பத்து இலட்சம் ரூபா பெறுமதியான ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக விசேட அதிரடிப்படை தெரிவித்துள்ளது.
  • பேலியகொட பிரதேசத்தைச் சேர்ந்த 30 மற்றும் 31) வந்துடைய இருவரே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
  • வீதியில் முச்சக்கர வண்டியொன்றை நிறுத்தி சோதனையிட்ட போது, ​​52 கிராம் 340 மில்லிகிராம் போதைப்பொருள் ஐஸ் மற்றும் கையடக்கத் தொலைபேசி என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
எழுத்து அளவு:

கடத்தல்காரரான பேலியகொட அமில என்பவருக்கு சொந்தமானது என கூறப்படும் சுமார் பத்து இலட்சம் ரூபா பெறுமதியான ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக விசேட அதிரடிப்படை தெரிவித்துள்ளது.

பேலியகொட பிரதேசத்தைச் சேர்ந்த 30 மற்றும் 31) வந்துடைய இருவரே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நுகேகொட, கங்கொடவில நீதிமன்றுக்கு அருகில் உள்ள கம்சபா சந்தியில் விசேட அதிரடிப்படையின் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத்தடுப்பு பிரிவினர் இந்த சுற்றிவளைப்பை மேற்கொண்டனர்.

வீதியில் முச்சக்கர வண்டியொன்றை நிறுத்தி சோதனையிட்ட போது, ​​52 கிராம் 340 மில்லிகிராம் போதைப்பொருள் ஐஸ் மற்றும் கையடக்கத் தொலைபேசி என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

பின்னர், முச்சக்கர வண்டி மற்றும் இருவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளின் போது, ​​இந்த இரண்டு சந்தேக நபர்களும் பாரியளவிலான போதைப்பொருள் கடத்தல்காரரான பேலியகொட அமில என்பவருக்குச் சொந்தமான போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரும் மேலதிக விசாரணைகளுக்காக மிரிஹான பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...