Tamil Leader News
முக்கியம்
தேசியப் பூங்காக்களில் பிகினி பிடிப்பு: சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் பாரிய இடைவெளி!●காவன்திஸ்ஸ துயரம்: யானையின் வயிற்றில் ஈயக் குண்டுகள்; விசாரணைகள் CID வசம்!●வீட்டுவசதி நெருக்கடியால் 14 ஆண்டுகளுக்குப் பின் ஸ்பெயினில் மாபெரும் பொது வேலைநிறுத்தம்!●நாடு திரும்புகிறார் அனோஜன் சிவராசா; சவூதியில் மரண தண்டனையிலிருந்து  பூரண விடுதலை!●1990 சுவசரிய சேவைக்கு இந்தியாவிலிருந்து மேலும் 100 நோயாளர் காவு வண்டிகள்; வருகை நேரம் 10 நிமிடங்களாகக் குறைகிறது!●நிதித்துறையில் எழுந்துள்ள புதிய அபாயங்கள் குறித்து மத்திய வங்கியிடமிருந்து விசேட எச்சரிக்கை!●6 மாதங்களில் 271 மில்லியன் நட்டம்: அரச ஊடகங்களுக்கு என்ன நேர்ந்தது?●DIGInote: 2027 வரவு-செலவுத் திட்டம் இன்று நாடாளுமன்றத்தில் - மூலதனச் செலவு 2 ட்ரில்லியன்!●2027 வரவு செலவுத் திட்டம்: இலக்கங்களின் ஸ்திரத்தன்மை மக்களின் பாக்கெட்டுக்குத் தெரியுமா?●இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●
செய்திகள்

குளியாபிட்டி தலைமையக பிரதான பொலிஸ் பரிசோதகர் விளக்கமறியலில்!

T

The Leader Desk

நவம்பர் 9, 2024 • 5:14 AM

குளியாபிட்டி தலைமையக பிரதான பொலிஸ் பரிசோதகர் விளக்கமறியலில்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • தொடர்பில் குளியாபிட்டி தலைமையக பிரதான பொலிஸ் பரிசோதகர் எதிர்வரும் 22ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
  • இது தொடர்பான முறைப்பாடு தொடர்பில் விசாரணை செய்வதற்காக குறித்த நபரும் குறித்த பெண்ணும் பிரதேச பெண்கள் மற்றும் சிறுவர் பணியகத்துக்கு அழைக்கப்பட்டனர்.
  • குளியாப்பிட்டி மேலதிக மாவட்ட நீதிபதி தினிந்து சமரசிங்கவே இந்த உத்தரவு பிறப்பித்துள்ளார்.
எழுத்து அளவு:

தொடர்பில் குளியாபிட்டி தலைமையக பிரதானபொலிஸ் பரிசோதகர் எதிர்வரும் 22ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

குளியாப்பிட்டி மேலதிக மாவட்ட நீதிபதி தினிந்து சமரசிங்கவே இந்த உத்தரவு பிறப்பித்துள்ளார்.
 
தனது கணவருடன் ஏற்பட்ட குடும்பத் தகராறு தொடர்பில் அவரது மனைவி குளியாப்பிட்டிய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரிடம் அண்மையில் முறைப்பாடு செய்திருந்தார்.
 
அதன்படி, சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் இது தொடர்பான முறைப்பாட்டை பிரதேச பெண்கள் மற்றும் சிறுவர் பணியகத்துக்கு அனுப்பி வைத்தார்.
 
இது தொடர்பான முறைப்பாடு தொடர்பில் விசாரணை செய்வதற்காக குறித்த நபரும் குறித்த பெண்ணும் பிரதேச பெண்கள் மற்றும் சிறுவர் பணியகத்துக்கு அழைக்கப்பட்டனர்.
 
அதன் பின்னர் குறித்த பெண், விசாரணைகள் உரிய முறையில் மேற்கொள்ளப்படவில்லை என குற்றஞ்சாட்டி குளியாபிட்டி தலைமையக பிரதான பொலிஸ் பரிசோதகருக்கு அறிவித்துள்ளார்.
 
அதன்படி செயற்பட்ட குளியாபிட்டிய தலைமையக பிரதான பரிசோதகர் பிரதேச பெண்கள் மற்றும் சிறுவர் பணியகத்திற்கு வந்து குறித்த பெண்ணின் கணவரை தாக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
அந்த பிரிவின் உயர் அதிகாரிகள் தாக்குதலை தடுத்து, சம்பவம் குறித்து முறைப்பாடளித்துள்ளனர். தாக்குதலுக்கு உள்ளான நபர் குருணாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
 
சம்பவம் தொடர்பில் குளியாபிட்டிய நீதிமன்றில் பொலிஸார் உண்மைகளை அறிக்கை செய்திருந்தனர். 
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

குளியாபிட்டி தலைமையக பிரதான பொலிஸ் பரிசோதகர் விளக்கமறியலில்! | Tamil Leader | We Lead the Nation