Tamil Leader News
முக்கியம்
தேசியப் பூங்காக்களில் பிகினி பிடிப்பு: சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் பாரிய இடைவெளி!●காவன்திஸ்ஸ துயரம்: யானையின் வயிற்றில் ஈயக் குண்டுகள்; விசாரணைகள் CID வசம்!●வீட்டுவசதி நெருக்கடியால் 14 ஆண்டுகளுக்குப் பின் ஸ்பெயினில் மாபெரும் பொது வேலைநிறுத்தம்!●நாடு திரும்புகிறார் அனோஜன் சிவராசா; சவூதியில் மரண தண்டனையிலிருந்து  பூரண விடுதலை!●1990 சுவசரிய சேவைக்கு இந்தியாவிலிருந்து மேலும் 100 நோயாளர் காவு வண்டிகள்; வருகை நேரம் 10 நிமிடங்களாகக் குறைகிறது!●நிதித்துறையில் எழுந்துள்ள புதிய அபாயங்கள் குறித்து மத்திய வங்கியிடமிருந்து விசேட எச்சரிக்கை!●6 மாதங்களில் 271 மில்லியன் நட்டம்: அரச ஊடகங்களுக்கு என்ன நேர்ந்தது?●DIGInote: 2027 வரவு-செலவுத் திட்டம் இன்று நாடாளுமன்றத்தில் - மூலதனச் செலவு 2 ட்ரில்லியன்!●2027 வரவு செலவுத் திட்டம்: இலக்கங்களின் ஸ்திரத்தன்மை மக்களின் பாக்கெட்டுக்குத் தெரியுமா?●இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●
செய்திகள்

அகதிகளுக்கான பணத்தை சூறையாடியவர்தான் இந்த ஹிஸ்புல்லா! -அலிசாஹிர் மெளலானா குற்றச்சாட்டு

T

The Leader Desk

நவம்பர் 9, 2024 • 4:49 AM

அகதிகளுக்கான பணத்தை சூறையாடியவர்தான் இந்த ஹிஸ்புல்லா! -அலிசாஹிர் மெளலானா குற்றச்சாட்டு

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • அவருக்கு வாக்குப் போட வேண்டாம் என ஏறாவூரில் அலிசாஹிர் மௌலானா தெரிவித்துள்ளார்.
  • ஏறாவூர் பிரதேசத்தில் நேற்று (08) இடம்பெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
  • நான் பேசிய விடயங்கள் இன்னும் ஹன்சாட்டில் உள்ளது.
எழுத்து அளவு:

அவருக்கு வாக்குப் போட வேண்டாம் என ஏறாவூரில் அலிசாஹிர் மௌலானா தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மரச்சின்னத்திற்கும் அக்கட்சியில் போட்டியிடுகின்ற ஹிஸ்புல்லாவுக்கும் ஏறாவூர் மக்கள் ஒரு வாக்கையேனும் போடக்கூடாது என முன்னாள் அமைச்சர் அலிசாஹிர் மௌலானா ஏறாவூர் மக்களிடம் கேட்டுக் கொண்டார்.
 
ஏறாவூர் பிரதேசத்தில் நேற்று (08) இடம்பெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
 
இக்கூட்டத்தின் போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
 
நான் ஏறாவூர் மண்ணையும் மக்களையும் நேசிப்பவன் இந்த மக்களின் இன்ப, துன்ப விடயங்களில் பங்கெடுப்பவன். இந்த மக்களுக்காக செயல்படுகின்ற என்னை தோற்கடிப்பதற்காகவே, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் மிகத் திட்டமிட்டு ஹிஸ்புல்லாவை மீண்டும் இந்தக்கட்சிக்குள் கொண்டு வந்து எனக்கு சதி செய்தார்.
 
IMG 20241109 WA0093
 
அகதிகளுக்காக வந்த பணங்களை சூறையாடியவர் தான் இந்த ஹிஸ்புல்லா, அதை நான் பாராளுமன்றத்தில் ஆணித்தரமாக பேசியிருக்கின்றேன். நான் பேசிய விடயங்கள் இன்னும் ஹன்சாட்டில் உள்ளது. விரைவில் அவற்றை ஒரு புத்தகமாக வெளியிடவுள்ளேன்.
 
ஏறாவூர் பிரதேச வாக்குகள் காத்தான்குடியை விட எண்ணிக்கையில் சற்று குறைவாக காணப்படலாம், அதேபோன்று கல்குடாவை விடவும் எண்ணிக்கையில் குறைவாகக் காணப்படலாம். எங்களுடைய வாக்குகள் இல்லாமல் எந்தக் கொம்பனும் எம். பி ஆக முடியாது.
 
ஏறாவூர் மக்களை ஏமாற்றுவதற்காக மீராகேணி, சதாம் ஹுசைன், மிச்சி நகருக்கும் மற்றும் ஏறாவூரின் ஏனைய பகுதிகளுக்கும் ஹிஸ்புல்லா வருகிறார். ஹிஸ்புல்லா ஒரு முனாஃபிக். ஏறாவூர் மக்கள் ஒரு வாக்கினையும் அவருக்கும் அவருடைய மரச்சின்னத்துக்கும் கொடுக்கக்கூடாது எனவும் அலிசாஹிர் மௌலானா தெரிவித்தார்.
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...