Tamil Leader News
முக்கியம்
தேசியப் பூங்காக்களில் பிகினி பிடிப்பு: சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் பாரிய இடைவெளி!●காவன்திஸ்ஸ துயரம்: யானையின் வயிற்றில் ஈயக் குண்டுகள்; விசாரணைகள் CID வசம்!●வீட்டுவசதி நெருக்கடியால் 14 ஆண்டுகளுக்குப் பின் ஸ்பெயினில் மாபெரும் பொது வேலைநிறுத்தம்!●நாடு திரும்புகிறார் அனோஜன் சிவராசா; சவூதியில் மரண தண்டனையிலிருந்து  பூரண விடுதலை!●1990 சுவசரிய சேவைக்கு இந்தியாவிலிருந்து மேலும் 100 நோயாளர் காவு வண்டிகள்; வருகை நேரம் 10 நிமிடங்களாகக் குறைகிறது!●நிதித்துறையில் எழுந்துள்ள புதிய அபாயங்கள் குறித்து மத்திய வங்கியிடமிருந்து விசேட எச்சரிக்கை!●6 மாதங்களில் 271 மில்லியன் நட்டம்: அரச ஊடகங்களுக்கு என்ன நேர்ந்தது?●DIGInote: 2027 வரவு-செலவுத் திட்டம் இன்று நாடாளுமன்றத்தில் - மூலதனச் செலவு 2 ட்ரில்லியன்!●2027 வரவு செலவுத் திட்டம்: இலக்கங்களின் ஸ்திரத்தன்மை மக்களின் பாக்கெட்டுக்குத் தெரியுமா?●இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●
செய்திகள்

முன்னாள் எம்பி ஸ்ரீரங்காவின் மனு தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

T

The Leader Desk

நவம்பர் 8, 2024 • 5:34 AM

முன்னாள் எம்பி ஸ்ரீரங்காவின் மனு தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • ஜே.ஸ்ரீரங்காவை கைது செய்வதை தடுக்க விதிக்கப்பட்ட இடைக்கால தடை உத்தரவை எதிர்வரும் 12ஆம் திகதி வரை நீடிக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று (07) உத்தரவிட்டது.
  • இந்த வழக்கு தொடர்பான அழைப்பாணைகள் பிரதிவாதிகளுக்கு கிடைக்கவில்லை என சட்டமா அதிபர் நீதிமன்றத்துக்கு அறிவித்தார்.
  • இதன்படி, எதிர்மனுதாரர்களுக்கு அழைப்பாணை அனுப்ப நடவடிக்கை எடுக்குமாறு மனுதாரரின் சட்டத்தரணிகளுக்கு தெரிவித்த நீதிமன்றம், உண்மைகளை உறுதிப்படுத்தும் வகையில் மனுவை எதிர்வரும் 12ஆம் திகதி விசாரணைக்கு எடுக்க உத்தரவிட்டது.
எழுத்து அளவு:

ஜே.ஸ்ரீரங்காவை கைது செய்வதை தடுக்க விதிக்கப்பட்ட இடைக்கால தடை உத்தரவை எதிர்வரும் 12ஆம் திகதி வரை நீடிக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று (07) உத்தரவிட்டது.

மன்னார் மேல் நீதிமன்ற நீதிபதியை அவமதிக்கும் வகையில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்ட சம்பவம் தொடர்பிலேயே இந்த தடை உத்தரவு பிறக்கப்பட்டுள்ளது.
 
இந்த மனு மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நீதியரசர் நிஸங்க பந்துல கருணாரத்ன முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
 
இந்த வழக்கு தொடர்பான அழைப்பாணைகள் பிரதிவாதிகளுக்கு கிடைக்கவில்லை என சட்டமா அதிபர் நீதிமன்றத்துக்கு அறிவித்தார்.
 
இதன்படி, எதிர்மனுதாரர்களுக்கு அழைப்பாணை அனுப்ப நடவடிக்கை எடுக்குமாறு மனுதாரரின் சட்டத்தரணிகளுக்கு தெரிவித்த நீதிமன்றம், உண்மைகளை உறுதிப்படுத்தும் வகையில் மனுவை எதிர்வரும் 12ஆம் திகதி விசாரணைக்கு எடுக்க உத்தரவிட்டது.
 
இந்த மனுவில் பிரதிவாதிகளாக பொலிஸ் மா அதிபர், பதில் பொலிஸ் மா அதிபர் மற்றும் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகள் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...