Tamil Leader News
முக்கியம்
தேசியப் பூங்காக்களில் பிகினி பிடிப்பு: சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் பாரிய இடைவெளி!●காவன்திஸ்ஸ துயரம்: யானையின் வயிற்றில் ஈயக் குண்டுகள்; விசாரணைகள் CID வசம்!●வீட்டுவசதி நெருக்கடியால் 14 ஆண்டுகளுக்குப் பின் ஸ்பெயினில் மாபெரும் பொது வேலைநிறுத்தம்!●நாடு திரும்புகிறார் அனோஜன் சிவராசா; சவூதியில் மரண தண்டனையிலிருந்து  பூரண விடுதலை!●1990 சுவசரிய சேவைக்கு இந்தியாவிலிருந்து மேலும் 100 நோயாளர் காவு வண்டிகள்; வருகை நேரம் 10 நிமிடங்களாகக் குறைகிறது!●நிதித்துறையில் எழுந்துள்ள புதிய அபாயங்கள் குறித்து மத்திய வங்கியிடமிருந்து விசேட எச்சரிக்கை!●6 மாதங்களில் 271 மில்லியன் நட்டம்: அரச ஊடகங்களுக்கு என்ன நேர்ந்தது?●DIGInote: 2027 வரவு-செலவுத் திட்டம் இன்று நாடாளுமன்றத்தில் - மூலதனச் செலவு 2 ட்ரில்லியன்!●2027 வரவு செலவுத் திட்டம்: இலக்கங்களின் ஸ்திரத்தன்மை மக்களின் பாக்கெட்டுக்குத் தெரியுமா?●இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●
செய்திகள்

முஸ்லிம்களை பிழையாக வழி நடத்தும் ஒரு மகா பொய்யனே ஹிஸ்புல்லாஹ் என்கிறார் அமீர் அலி!

T

The Leader Desk

நவம்பர் 8, 2024 • 4:11 AM

முஸ்லிம்களை பிழையாக வழி நடத்தும் ஒரு மகா பொய்யனே ஹிஸ்புல்லாஹ் என்கிறார் அமீர் அலி!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • ஆக வேண்டும் என்பதற்காக எதையும் செய்யக் கூடிய ஒருவர் என முன்னாள் இராஜாங்க அமைச்சரும் ஐக்கிய மக்கள் கூட்டணியின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.
  • தேர்தலில் 42 ஆயிரம் எடுப்போம் 52 ஆயிரம் எடுப்போம் என்று ஹிஸ்புல்லாஹ் கூறித் திரிகிறார்.
  • அவரால் இந்தத் தேர்தலில் 22 ஆயிரத்தை தாண்ட முடியாது.
எழுத்து அளவு:
ஆக வேண்டும் என்பதற்காக எதையும் செய்யக் கூடிய ஒருவர் என முன்னாள் இராஜாங்க அமைச்சரும் ஐக்கிய மக்கள் கூட்டணியின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.
 
அவர் நொந்து நூலாகிப் போன நேரத்தில் அவரை மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட வைத்து வெற்றி பெற வைத்தோம்.
 
வெற்றி பெற்றதன் பின்னர் எங்களுக்குத் தெரியாமலே மஹிந்த ராஜபக்க்ஷவிடம் சென்று அமைச்சைப் பெற்றுக் கொண்டார்.
 
கோட்டாபய ஜனாதிபதி தேர்தல் கேட்டபோது சஜித் பிரமதாசவுக்கு  முஸ்லிம் சமூகத்தால் அளிக்கப்படவிருந்த வாக்குகளை குறைப்பதற்காக பசில் ராஜபக்க்ஷவின் கொந்தராத்து மூலம் ஜனாதிபதியை தீர்மானிக்கும் ஜனாதிபதி வேட்பாளர் என்று தேர்தலில் போட்டியிட்டு சதி செய்தார்.
 
அவர், மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம்களை பிழையாக வழி நடத்துகின்ற, பொய்த் தகவல் சொல்லுகின்ற ஒரு மகா பொய்யன். இதை நான் சொல்லவில்லை. அவரது தலைவரே சொல்லி இருக்கிறார்.
 
அவர் ஒரு மகா நடிகன், அண்டப்புளுகன் என்றெல்லாம் அவரது தலைவர் சொல்லி இருக்கின்றார்.
 
தேர்தலில் 42 ஆயிரம் எடுப்போம் 52 ஆயிரம் எடுப்போம் என்று ஹிஸ்புல்லாஹ் கூறித் திரிகிறார். அவரால் இந்தத் தேர்தலில் 22 ஆயிரத்தை தாண்ட முடியாது.
 
அவர் கடந்த காலத்தில்  பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டபோது ஒப்பந்த அடிப்படையில் இரண்டு வருடங்கள் கல்குடாவுக்கு வழங்குவதாக கூறி ஏமாற்றியவர்.
 
இந்த விடயத்தில் காத்தான்குடி மக்களும் ஹிஸ்புல்லாஹ் அநியாயம் செய்து விட்டார் என்று அன்று முதல் இன்று வரை குற்றம் சுமத்துகின்றனர்.
 
இனியும் கல்குடா, ஏறாவூர், காத்தான்குடி சமூகம் உங்களது வார்த்தைகளை நம்பிக்கை கொள்ளும் என்றா? நீங்கள் எதிர்பார்கிறீர்கள்? என்று ஹிஸ்புல்லாஹ்விடம் அமீர் அலி கேள்வி எழுப்பியுள்ளார்.
 
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

முஸ்லிம்களை பிழையாக வழி நடத்தும் ஒரு மகா பொய்யனே ஹிஸ்புல்லாஹ் என்கிறார் அமீர் அலி! | Tamil Leader | We Lead the Nation