Tamil Leader News
முக்கியம்
தேசியப் பூங்காக்களில் பிகினி பிடிப்பு: சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் பாரிய இடைவெளி!●காவன்திஸ்ஸ துயரம்: யானையின் வயிற்றில் ஈயக் குண்டுகள்; விசாரணைகள் CID வசம்!●வீட்டுவசதி நெருக்கடியால் 14 ஆண்டுகளுக்குப் பின் ஸ்பெயினில் மாபெரும் பொது வேலைநிறுத்தம்!●நாடு திரும்புகிறார் அனோஜன் சிவராசா; சவூதியில் மரண தண்டனையிலிருந்து  பூரண விடுதலை!●1990 சுவசரிய சேவைக்கு இந்தியாவிலிருந்து மேலும் 100 நோயாளர் காவு வண்டிகள்; வருகை நேரம் 10 நிமிடங்களாகக் குறைகிறது!●நிதித்துறையில் எழுந்துள்ள புதிய அபாயங்கள் குறித்து மத்திய வங்கியிடமிருந்து விசேட எச்சரிக்கை!●6 மாதங்களில் 271 மில்லியன் நட்டம்: அரச ஊடகங்களுக்கு என்ன நேர்ந்தது?●DIGInote: 2027 வரவு-செலவுத் திட்டம் இன்று நாடாளுமன்றத்தில் - மூலதனச் செலவு 2 ட்ரில்லியன்!●2027 வரவு செலவுத் திட்டம்: இலக்கங்களின் ஸ்திரத்தன்மை மக்களின் பாக்கெட்டுக்குத் தெரியுமா?●இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●
செய்திகள்

ஐக்கிய மக்கள் சக்தியின் அலுவலகம் தாக்கப்பட்டு தீ வைப்பு!

T

The Leader Desk

நவம்பர் 7, 2024 • 4:32 AM

ஐக்கிய மக்கள் சக்தியின் அலுவலகம் தாக்கப்பட்டு தீ வைப்பு!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • விலட்டாவ பிரதேசத்திலுள்ள கட்சி அலுவலகம் ஒன்று நேற்று முன்தினம் (05) சிலரால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.
  • இச்சம்பவத்தின் பின்னர் தாக்குதல் நடத்தப்பட்டு அலுவலகம் தீக்கிரையாக்கப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
  • இந்த அலுவலகத்தின் அமைப்பு பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, ​​தேசிய மக்கள் சக்தியைச் சேர்ந்த செயற்பாட்டாளர் ஒருவர் அங்கு வந்து அங்கிருந்த இருவரைத் தாக்கி, வெளியாட்கள் தங்கள் கிராமத்தில் அலுவலகம் கட்ட இடமில்லை என தெரிவித்துள்ளார்.
எழுத்து அளவு:

விலட்டாவ பிரதேசத்திலுள்ள  கட்சி அலுவலகம்  ஒன்று நேற்று முன்தினம் (05) சிலரால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.

 

இந்த அலுவலகத்தின் அமைப்பு பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, ​​தேசிய மக்கள் சக்தியைச் சேர்ந்த செயற்பாட்டாளர் ஒருவர் அங்கு வந்து அங்கிருந்த இருவரைத் தாக்கி, வெளியாட்கள் தங்கள் கிராமத்தில் அலுவலகம் கட்ட இடமில்லை என தெரிவித்துள்ளார்.

அப்போது அவர் தனது கையில் வாள் மற்றும் தடி வைத்திருந்ததுடன் சிலாபம் ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் கோகுலநாத் சிங்கின் பெனரையும் கிழித்து எறிந்தார்.

இந்த நபர் ஒரு கொலை தொடர்பில் கைதாகி பிணையில் விடுவிக்கப்பட்டவராவார.

இச்சம்பவத்தின் பின்னர் தாக்குதல் நடத்தப்பட்டு அலுவலகம் தீக்கிரையாக்கப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

சிலாபம் பொலிஸார் சம்பவ இடத்துக்குச் சென்று முதற்கட்ட விசாரணைகளை மேற்கொண்டனர்.

தாக்குதலுக்கு உள்ளான ஒருவர் ந வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் சிலாபம் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் தம்மிக்க ஹபுகொடவிடம் கேட்டபோது, ​​சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

இது தொடர்பாக சிலாபம் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்


,

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...