Tamil Leader News
முக்கியம்
தேசியப் பூங்காக்களில் பிகினி பிடிப்பு: சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் பாரிய இடைவெளி!●காவன்திஸ்ஸ துயரம்: யானையின் வயிற்றில் ஈயக் குண்டுகள்; விசாரணைகள் CID வசம்!●வீட்டுவசதி நெருக்கடியால் 14 ஆண்டுகளுக்குப் பின் ஸ்பெயினில் மாபெரும் பொது வேலைநிறுத்தம்!●நாடு திரும்புகிறார் அனோஜன் சிவராசா; சவூதியில் மரண தண்டனையிலிருந்து  பூரண விடுதலை!●1990 சுவசரிய சேவைக்கு இந்தியாவிலிருந்து மேலும் 100 நோயாளர் காவு வண்டிகள்; வருகை நேரம் 10 நிமிடங்களாகக் குறைகிறது!●நிதித்துறையில் எழுந்துள்ள புதிய அபாயங்கள் குறித்து மத்திய வங்கியிடமிருந்து விசேட எச்சரிக்கை!●6 மாதங்களில் 271 மில்லியன் நட்டம்: அரச ஊடகங்களுக்கு என்ன நேர்ந்தது?●DIGInote: 2027 வரவு-செலவுத் திட்டம் இன்று நாடாளுமன்றத்தில் - மூலதனச் செலவு 2 ட்ரில்லியன்!●2027 வரவு செலவுத் திட்டம்: இலக்கங்களின் ஸ்திரத்தன்மை மக்களின் பாக்கெட்டுக்குத் தெரியுமா?●இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●
செய்திகள்

அநுரகுமாரவுடன் அமர்ந்து மூன்று வேளையும் உணவு உட்கொண்டவன் நான்: இணைந்து செயற்படவும் தயார்! ஹிஸ்புல்லாஹ்

T

The Leader Desk

நவம்பர் 6, 2024 • 4:19 PM

அநுரகுமாரவுடன் அமர்ந்து மூன்று வேளையும் உணவு உட்கொண்டவன் நான்: இணைந்து செயற்படவும் தயார்! ஹிஸ்புல்லாஹ்

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • ஒரு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர் கிடைப்பதாக இருந்தால் அது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மூலமாகத்தான் கிடைக்கும். எந்தக் கட்சியில் போட்டியிட்டாலும் ஒரு முஸ்லிம் எம்.பி.
  • ஆக வேண்டுமென்றால் 45,000 க்கும் மேற்பட்ட வாக்குகளை எடுக்க வேண்டும்.
  • மட்டக்களப்பு மாவட்டத்தில் முஸ்லிம் பகுதியில் இம்முறை 90,000 வாக்குகள் அளிக்கப்படவுள்ளன.
  • அதில், 55,000 பேர் முஸ்லிம் காங்கிரஸுக்கு வாக்களித்தால் மட்டக்களப்பு மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸ் ஊடாக இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுவார்கள்.
எழுத்து அளவு:
ஒரு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர் கிடைப்பதாக இருந்தால் அது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மூலமாகத்தான் கிடைக்கும். 
 
எந்தக் கட்சியில் போட்டியிட்டாலும் ஒரு முஸ்லிம் எம்.பி. வர முடியாது என்று முன்னாள் ஆளுநரும் மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளருமான கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.
 
ஓட்டமாவடி - நாவலடி கேணிநகர் பகுதியில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
 
அவர் அங்கு தொடர்ந்தும் பேசுகையில்,
 
ஒருவர் எம்.பி. ஆக வேண்டுமென்றால் 45,000 க்கும் மேற்பட்ட வாக்குகளை எடுக்க வேண்டும்.
 
காத்தான்குடி, ஏறாவூர், வாழைச்சேனை,  ஓட்டமாவடி உள்ளிட்ட பிரதேச மக்கள் ஒன்றிணைந்தால் மாத்திரம்தான் எம்.பி.எடுக்க முடியும்.
 
மட்டக்களப்பு மாவட்டத்தில் முஸ்லிம் பகுதியில் இம்முறை 90,000 வாக்குகள் அளிக்கப்படவுள்ளன.
 
அதில், 55,000 பேர் முஸ்லிம் காங்கிரஸுக்கு வாக்களித்தால் மட்டக்களப்பு மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸ் ஊடாக இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுவார்கள்.
 
இந்தத் தேர்தலில் மேலதிகமாக ஒரு பாராளுமன்ற உறுப்பினரை பெறுவதற்காகவே நாங்கள் கூட்டம் போட்டுப் பாடுபடுகின்றோம்.
 
எங்களது கட்சிக்கு ஒரு எம்.பி. வருவதென்றால் நாங்கள் கூட்டமெல்லாம் போடத் தேவையில்லை. ஏனென்றால் எங்களது கட்சிக்கு இலகுவாக 44,000 வாக்குகள் கிடைக்கும்.
 
நாங்கள் கூட்டம் போட்டு பேசுவதெல்லாம் 55,000 க்கு மேற்பட்ட வாக்குகளை எடுத்து இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களைப் பெற்றுக் கொள்வதற்கே.
 
பாராளுமன்ற தேர்தலுக்குப் பின்னர் ஆட்சி அமைக்க  ஜனாதிபதிக்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் தேவை.
 
ஆட்சி அமைப்பதற்கு தேவை என்றால் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஜனாதிபதியுடன் இணைந்து செயற்படுவோம்.
 
ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவுடன் நான் பாராளுமன்றத்தில் 30 வருடங்களுக்கு மேலாக ஒன்றாக இருந்துள்ளேன்.
 
நான் அவருடன்தான் காலை, பகல், இரவு உணவுகளை உண்டுள்ளேன்.
 
நாங்கள் எப்போதும் ஜனாதிபதியின் கட்சிதான்.
 
நாங்கள் அரசாங்கத்துடன் இருந்து பூரண ஒத்துழைப்புக்களை வழங்கி நல்ல விடயங்களுக்கு ஆதரவு வழங்குவோம்.
 
ஜனாதிபதி ஊழல், இலஞ்சம் ஆகியவற்றை ஒழிப்பதாக கூறியுள்ளார்.
 
அத்துடன், பொருட்களின் விலைகளைக் குறைத்து, அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பதாகவும் சொல்லி இருக்கிறார். இது போன்ற பல நல்ல விடயங்களை கூறியும் உள்ளார். அதனை நாங்கள் வரவேற்கின்றோம் என்றார்.
 
 
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...