Tamil Leader News
முக்கியம்
தேசியப் பூங்காக்களில் பிகினி பிடிப்பு: சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் பாரிய இடைவெளி!●காவன்திஸ்ஸ துயரம்: யானையின் வயிற்றில் ஈயக் குண்டுகள்; விசாரணைகள் CID வசம்!●வீட்டுவசதி நெருக்கடியால் 14 ஆண்டுகளுக்குப் பின் ஸ்பெயினில் மாபெரும் பொது வேலைநிறுத்தம்!●நாடு திரும்புகிறார் அனோஜன் சிவராசா; சவூதியில் மரண தண்டனையிலிருந்து  பூரண விடுதலை!●1990 சுவசரிய சேவைக்கு இந்தியாவிலிருந்து மேலும் 100 நோயாளர் காவு வண்டிகள்; வருகை நேரம் 10 நிமிடங்களாகக் குறைகிறது!●நிதித்துறையில் எழுந்துள்ள புதிய அபாயங்கள் குறித்து மத்திய வங்கியிடமிருந்து விசேட எச்சரிக்கை!●6 மாதங்களில் 271 மில்லியன் நட்டம்: அரச ஊடகங்களுக்கு என்ன நேர்ந்தது?●DIGInote: 2027 வரவு-செலவுத் திட்டம் இன்று நாடாளுமன்றத்தில் - மூலதனச் செலவு 2 ட்ரில்லியன்!●2027 வரவு செலவுத் திட்டம்: இலக்கங்களின் ஸ்திரத்தன்மை மக்களின் பாக்கெட்டுக்குத் தெரியுமா?●இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●
செய்திகள்

கணவரைக் கொன்றது போன்று தன்னையும் கொல்லச் சதி என்கிறார் சந்திரிகா!

T

The Leader Desk

நவம்பர் 5, 2024 • 10:14 AM

கணவரைக் கொன்றது போன்று தன்னையும் கொல்லச் சதி என்கிறார் சந்திரிகா!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • தனது கணவர் விஜய குமாரதுங்கவைக் கொலை செய்தது போன்று தன்னையும் கொலை செய்வதற்குத் சதித்திட்டம் தீட்டப்படுவதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
  • குறித்த கடிதத்தில் மேலும் கூறியுள்ளதாவது, சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ஹேமசிறி கடந்த ஒக்டோபர் 31ஆம் திகதி எழுதியுள்ள கடிதத்தில் தனது பாதுகாப்பு படையின் எண்ணிக்கையை 50ல் இருந்து 30 ஆகக் குறைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
  • மற்றைய முன்னாள் ஜனாதிபதிகளுக்கு 243 மற்றும் 200 மற்றும் 109 என்ற பாதுகாப்பு குழுக்கள் வழங்கப்படுகின்றன.
  • இந்நிலையில், தனக்கு 30 பாதுகாவலர்களை மட்டுமே வழங்குவது எந்த அளவுகோலின் படி முடிவு செய்யப்பட்டது என்பது புதிராக உள்ளது.
எழுத்து அளவு:

தனது கணவர் விஜய குமாரதுங்கவைக் கொலை செய்தது போன்று தன்னையும் கொலை செய்வதற்குத் சதித்திட்டம் தீட்டப்படுவதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

தமக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு உத்தியோகத்தர்களை குறைப்பது தொடர்பில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்னவுக்கு எழுதியுள்ள கடிதத்திலேயே முன்னாள் ஜனாதிபதி இதனைக் தெரிவித்துள்ளார்.
 
குறித்த கடிதத்தில் மேலும் கூறியுள்ளதாவது, 
 
சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ஹேமசிறி கடந்த ஒக்டோபர் 31ஆம் திகதி எழுதியுள்ள கடிதத்தில் தனது பாதுகாப்பு படையின் எண்ணிக்கையை 50ல் இருந்து 30 ஆகக் குறைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
 
மற்றைய முன்னாள் ஜனாதிபதிகளுக்கு 243 மற்றும் 200 மற்றும் 109 என்ற பாதுகாப்பு குழுக்கள் வழங்கப்படுகின்றன. இந்நிலையில்,  தனக்கு 30 பாதுகாவலர்களை மட்டுமே வழங்குவது எந்த அளவுகோலின் படி முடிவு செய்யப்பட்டது என்பது புதிராக உள்ளது.
 
மேலும், ஓய்வுபெற்ற ஐந்து ஜனாதிபதிகளில் தனக்கு அதிக அச்சுறுத்தல்கள் இருப்பதாகவும் கொலை முயற்சியில் காயமடைந்த ஒரே ஜனாதிபதி தாம் தான் எனவும் முன்னாள் ஜனாதிபதி தனது கடிதத்தில் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷவிடம் 63 இராணுவ அதிகாரிகளும், 180 பொலிஸ் உத்தியோகத்தர்களும் 243 பாதுகாப்பு அதிகாரிகளும், மைத்திரிபால சிறிசேனவிடம் 109 பொலிஸ் உத்தியோகத்தர்களும், 200 பாதுகாப்பு அதிகாரிகளும் கோட்டாபய ராஜபக்க்ஷவிடம் 175 இராணுவ அதிகாரிகளும், 25 பொலிஸ் உத்தியோகத்தர்களும் உள்ளனர்.
 
மேலும், ஜனாதிபதித் தேர்தலின்போது தமக்கு உயரடுக்கு பாதுகாப்பு கிடைக்காது என ஜே.வி.பி தலைவர்கள் கூறியதாகவும் அந்தக் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
 
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...