Tamil Leader News
முக்கியம்
தேசியப் பூங்காக்களில் பிகினி பிடிப்பு: சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் பாரிய இடைவெளி!●காவன்திஸ்ஸ துயரம்: யானையின் வயிற்றில் ஈயக் குண்டுகள்; விசாரணைகள் CID வசம்!●வீட்டுவசதி நெருக்கடியால் 14 ஆண்டுகளுக்குப் பின் ஸ்பெயினில் மாபெரும் பொது வேலைநிறுத்தம்!●நாடு திரும்புகிறார் அனோஜன் சிவராசா; சவூதியில் மரண தண்டனையிலிருந்து  பூரண விடுதலை!●1990 சுவசரிய சேவைக்கு இந்தியாவிலிருந்து மேலும் 100 நோயாளர் காவு வண்டிகள்; வருகை நேரம் 10 நிமிடங்களாகக் குறைகிறது!●நிதித்துறையில் எழுந்துள்ள புதிய அபாயங்கள் குறித்து மத்திய வங்கியிடமிருந்து விசேட எச்சரிக்கை!●6 மாதங்களில் 271 மில்லியன் நட்டம்: அரச ஊடகங்களுக்கு என்ன நேர்ந்தது?●DIGInote: 2027 வரவு-செலவுத் திட்டம் இன்று நாடாளுமன்றத்தில் - மூலதனச் செலவு 2 ட்ரில்லியன்!●2027 வரவு செலவுத் திட்டம்: இலக்கங்களின் ஸ்திரத்தன்மை மக்களின் பாக்கெட்டுக்குத் தெரியுமா?●இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●
செய்திகள்

விடுதலைப் புலிகளின் சீருடை பாகங்களைத் தேடி முன்னாள் எம்பி சுஜீவ சேனசிங்கவின் வீட்டில் சோதனை!

T

The Leader Desk

நவம்பர் 5, 2024 • 6:46 AM

விடுதலைப் புலிகளின் சீருடை பாகங்களைத் தேடி முன்னாள் எம்பி சுஜீவ சேனசிங்கவின் வீட்டில் சோதனை!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • உறுப்பினர் சுஜீவ சேனசிங்கவின் கொள்ளுப்பிட்டியில் உள்ள வீடு பாணந்துறை வலான ஊழல் ஒழிப்பு பிரிவின் அதிகாரிகளால் வீடு சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
  • பணியாளர் மட்டுமே இருந்துள்ளார்.
  • விடுதலைப் புலிகள் அமைப்பினர் பயன்படுத்திய சீருடைகளின் பாகங்கள் மற்றும் வாசகங்கள் மறைத்து வைக்கப்பட்டுள்ளனவா என்பதை கண்டறியும் நோக்கிலேயே சோதனை நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
எழுத்து அளவு:

உறுப்பினர் சுஜீவ சேனசிங்கவின் கொள்ளுப்பிட்டியில் உள்ள வீடு பாணந்துறை வலான ஊழல் ஒழிப்பு பிரிவின் அதிகாரிகளால் வீடு சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

விடுதலைப் புலிகள் அமைப்பினர் பயன்படுத்திய சீருடைகளின் பாகங்கள் மற்றும் வாசகங்கள் மறைத்து வைக்கப்பட்டுள்ளனவா என்பதை கண்டறியும் நோக்கிலேயே சோதனை நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

நீதிமன்றத்தில் இருந்து பெறப்பட்ட தேடுதல் அனுதியின் அடிப்படையில், இந்த பொலிஸ் அதிகாரிகள் குழு வீட்டுக்குச் சென்று சோதனை நடத்தியது.

ஆனால் அப்போது சுஜீவ சேனசிங்க அங்கில்லை. பணியாளர் மட்டுமே இருந்துள்ளார்.

குறித்த தேடுதல் நடவடிக்கைகள் இரண்டு மணித்தியாலங்கள் மேற்கொள்ளப்பட்டு பணியாளரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.

இது தொடர்பில் சுஜீவ சேனசிங்க குருந்துவத்தை பொலிஸில் முறைப்பாடு செய்ததுடன், தான் வீட்டில் இல்லாதபோது பொலிஸ் குழு என கூறிக்கொண்டு சிலர் தனது வீட்டை சோதனையிட்டதாக தெரிவித்துள்ளார்.

அவர்கள் உண்மையாகவே பொலிஸ் அதிகாரிகளா என்பதை கண்டறியுமாறும் முறைப்பாட்டின் மூலம் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...