Tamil Leader News
முக்கியம்
தேசியப் பூங்காக்களில் பிகினி பிடிப்பு: சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் பாரிய இடைவெளி!●காவன்திஸ்ஸ துயரம்: யானையின் வயிற்றில் ஈயக் குண்டுகள்; விசாரணைகள் CID வசம்!●வீட்டுவசதி நெருக்கடியால் 14 ஆண்டுகளுக்குப் பின் ஸ்பெயினில் மாபெரும் பொது வேலைநிறுத்தம்!●நாடு திரும்புகிறார் அனோஜன் சிவராசா; சவூதியில் மரண தண்டனையிலிருந்து  பூரண விடுதலை!●1990 சுவசரிய சேவைக்கு இந்தியாவிலிருந்து மேலும் 100 நோயாளர் காவு வண்டிகள்; வருகை நேரம் 10 நிமிடங்களாகக் குறைகிறது!●நிதித்துறையில் எழுந்துள்ள புதிய அபாயங்கள் குறித்து மத்திய வங்கியிடமிருந்து விசேட எச்சரிக்கை!●6 மாதங்களில் 271 மில்லியன் நட்டம்: அரச ஊடகங்களுக்கு என்ன நேர்ந்தது?●DIGInote: 2027 வரவு-செலவுத் திட்டம் இன்று நாடாளுமன்றத்தில் - மூலதனச் செலவு 2 ட்ரில்லியன்!●2027 வரவு செலவுத் திட்டம்: இலக்கங்களின் ஸ்திரத்தன்மை மக்களின் பாக்கெட்டுக்குத் தெரியுமா?●இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●
செய்திகள்

மெகசின் சிறைச்சாலை அதிகாரிகள் இருவர் பணி இடைநிறுத்தம்!

T

The Leader Desk

நவம்பர் 5, 2024 • 6:00 AM

மெகசின் சிறைச்சாலை அதிகாரிகள் இருவர் பணி இடைநிறுத்தம்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • பணிபுரிந்த இரண்டு அதிகாரிகள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
  • அந்த சிறையின் ஆர் வார்டில் அவர் அடைக்கப்பட்டுள்ளதாக சிறை வட்டாரங்கள் தெரிவித்தன.
  • முதலில் வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர் அவசர சிகிச்சையின் காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். தொடர்ந்து மருத்துவமனையின் 14ஆவது வார்டில் உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வருகிறார்.
எழுத்து அளவு:

பணிபுரிந்த இரண்டு அதிகாரிகள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

சிறைச்சாலைத் திணைக்களத்தின் பிரதான ஜெயிலர் மற்றும் களஞ்சிய பிரிவில் கடமையாற்றிய இரு அதிகாரிகளே பணி இடைநீக்கம் செய்யப்பட்டதாக சிறைச்சாலைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மெகசீன் சிறைச்சாலையில் உள்ள பல கைதிகளுடன் நடந்து கொண்ட முறை தொட்பில் விசாரணைக்கு  உட்படுத்தப்பட்டே இரண்டு அதிகாரிகளும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

முதற்கட்ட விசாரணைக்கு உட்பட்டு பணித்  தடை விதிக்கப்பட்டுள்ளதாக சிறைத்துறை தெரிவித்துள்ளது. 

இதேவேளை, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவின் மனைவி வெலிக்கடை பெண்கள் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

அந்த சிறையின் ஆர் வார்டில் அவர் அடைக்கப்பட்டுள்ளதாக சிறை வட்டாரங்கள் தெரிவித்தன.

மிரிஹானவில் உள்ள அவரது வீட்டில் இலக்கத்தகடு இல்லாத வாகனம் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் முன்னாள் சிறைச்சாலை இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவும் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

முதலில் வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர் அவசர சிகிச்சையின் காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். 

தொடர்ந்து மருத்துவமனையின் 14ஆவது வார்டில் உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வருகிறார். சிறைச்சாலை அதிகாரிகளின் பாதுகாப்பில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக சிறைச்சாலை திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது. 

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...