Tamil Leader News
முக்கியம்
தேசியப் பூங்காக்களில் பிகினி பிடிப்பு: சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் பாரிய இடைவெளி!●காவன்திஸ்ஸ துயரம்: யானையின் வயிற்றில் ஈயக் குண்டுகள்; விசாரணைகள் CID வசம்!●வீட்டுவசதி நெருக்கடியால் 14 ஆண்டுகளுக்குப் பின் ஸ்பெயினில் மாபெரும் பொது வேலைநிறுத்தம்!●நாடு திரும்புகிறார் அனோஜன் சிவராசா; சவூதியில் மரண தண்டனையிலிருந்து  பூரண விடுதலை!●1990 சுவசரிய சேவைக்கு இந்தியாவிலிருந்து மேலும் 100 நோயாளர் காவு வண்டிகள்; வருகை நேரம் 10 நிமிடங்களாகக் குறைகிறது!●நிதித்துறையில் எழுந்துள்ள புதிய அபாயங்கள் குறித்து மத்திய வங்கியிடமிருந்து விசேட எச்சரிக்கை!●6 மாதங்களில் 271 மில்லியன் நட்டம்: அரச ஊடகங்களுக்கு என்ன நேர்ந்தது?●DIGInote: 2027 வரவு-செலவுத் திட்டம் இன்று நாடாளுமன்றத்தில் - மூலதனச் செலவு 2 ட்ரில்லியன்!●2027 வரவு செலவுத் திட்டம்: இலக்கங்களின் ஸ்திரத்தன்மை மக்களின் பாக்கெட்டுக்குத் தெரியுமா?●இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●
செய்திகள்

அரசாங்கம் சில விடயங்களில் தடுமாறுவதைக் காண முடிகிறது என்கிறார் முபாறக் முப்தி!

T

The Leader Desk

நவம்பர் 4, 2024 • 11:36 AM

அரசாங்கம் சில விடயங்களில் தடுமாறுவதைக் காண முடிகிறது என்கிறார் முபாறக் முப்தி!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • புதிய ஜனாதிபதியின் கீழ் வந்துள்ளது.
  • அம்பாறை மாவட்டம் கல்முனை பகுதியில் நடைபெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் இன்று (04) கலந்து கொண்டு மேற்கண்டவாறு குறிப்பிட்டார் மேலும் அவர் தெரிவிக்கையில்_ எது எப்படி இருப்பினும் அரசாங்கம் சில விடயங்களில் தடுமாறுவதை காண முடிகிறது.
  • ஆனால் எடுத்த உடனே அரசாங்கத்தை நாங்கள் விமர்சிக்க முடியாது.இன்னும் பல காலம் அவர்களுக்கு கொடுக்கப்பட வேண்டும்.
எழுத்து அளவு:
புதிய ஜனாதிபதியின் கீழ் வந்துள்ளது. அந்தப் புதிய அரசாங்கத்தை நாங்கள் வரவேற்க வேண்டும். அநுரகுமார திசாநாயக்க ஒரு ஜனாதிபதியாகவோ அல்லது பிரதமராகவோ இருக்காதவர். ஆனாலும் பாராளுமன்றத்தில் நீண்ட காலம் எம்.பியாக இருந்த அனுபவம் உள்ளவர். அவர் நாட்டை திறம்பட கட்டியெழுப்புவார் என நம்புகிறோம் என‌ உல‌மா க‌ட்சித் த‌லைவ‌ர் முபாற‌க் அப்துல் ம‌ஜீத் முப்தி தெரிவித்துள்ளார்.
 
அம்பாறை மாவட்டம் கல்முனை பகுதியில் நடைபெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் இன்று (04)  கலந்து கொண்டு மேற்கண்டவாறு குறிப்பிட்டார்
 
மேலும் அவர் தெரிவிக்கையில்_
 
எது எப்படி இருப்பினும் அரசாங்கம் சில விடயங்களில் தடுமாறுவதை காண முடிகிறது. ஆனால் எடுத்த உடனே அரசாங்கத்தை நாங்கள் விமர்சிக்க முடியாது.இன்னும் பல காலம் அவர்களுக்கு கொடுக்கப்பட வேண்டும்.
 
அதன் பின்னர் தான் நாங்கள் பல முடிவுகளை எடுக்க முடியும்.இந்தச் சூழலில் ஜனாதிபதி முறையான திட்டமிடலில் நாட்டை கட்டியெழுப்ப வேண்டும் என்ற ஆதங்கம் எங்களிடம் உள்ளது.
 
அண்மையில் முட்டை பிரச்சினை ஏற்பட்டிருந்தது. மீண்டும் பாஸ்போர்ட் பிரச்சினை ஏற்பட்டது. இவ்வாறு சில பிரச்சினைகள் எழுகின்றபோது எமக்கு கவலையாக உள்ளது. அவ்வாறான பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும்.அத்துடன் ஜனாதிபதியின் கட்சியினர் முஸ்லிம்களின் தனியார் சட்ட நிலைமை பற்றி ஆங்காங்கே பேசி வருகின்றார்கள்.எனவே ஜனாதிபதி இவ்வாறான பிரச்சிகைளை இனங்கண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கின்றோம் என்றார்.
 
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...