Tamil Leader News
முக்கியம்
தேசியப் பூங்காக்களில் பிகினி பிடிப்பு: சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் பாரிய இடைவெளி!●காவன்திஸ்ஸ துயரம்: யானையின் வயிற்றில் ஈயக் குண்டுகள்; விசாரணைகள் CID வசம்!●வீட்டுவசதி நெருக்கடியால் 14 ஆண்டுகளுக்குப் பின் ஸ்பெயினில் மாபெரும் பொது வேலைநிறுத்தம்!●நாடு திரும்புகிறார் அனோஜன் சிவராசா; சவூதியில் மரண தண்டனையிலிருந்து  பூரண விடுதலை!●1990 சுவசரிய சேவைக்கு இந்தியாவிலிருந்து மேலும் 100 நோயாளர் காவு வண்டிகள்; வருகை நேரம் 10 நிமிடங்களாகக் குறைகிறது!●நிதித்துறையில் எழுந்துள்ள புதிய அபாயங்கள் குறித்து மத்திய வங்கியிடமிருந்து விசேட எச்சரிக்கை!●6 மாதங்களில் 271 மில்லியன் நட்டம்: அரச ஊடகங்களுக்கு என்ன நேர்ந்தது?●DIGInote: 2027 வரவு-செலவுத் திட்டம் இன்று நாடாளுமன்றத்தில் - மூலதனச் செலவு 2 ட்ரில்லியன்!●2027 வரவு செலவுத் திட்டம்: இலக்கங்களின் ஸ்திரத்தன்மை மக்களின் பாக்கெட்டுக்குத் தெரியுமா?●இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●
செய்திகள்

சொத்துக்காக பொறியியலாளரைக் கொன்று சடலத்தை தடாகத்தில் வீசிய முன்னாள் உதவிப் பணிப்பாளர் கைது!

T

The Leader Desk

நவம்பர் 4, 2024 • 1:52 AM

சொத்துக்காக பொறியியலாளரைக் கொன்று சடலத்தை தடாகத்தில் வீசிய முன்னாள் உதவிப் பணிப்பாளர் கைது!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • ஆம் ஆண்டு ஒக்டோபர் 23 ஆம் திகதி பிங்கிரிய பகுதியில் வசித்து வந்த ஐக்கிய நாடுகளின் இயந்திரவியல் பொறியியலாளர் சமன் விஜேசிறி கொல்லப்பட்டு அவரது உடல் தடாகம் ஒன்றில வீசப்பட்டிருந்த்யது.
  • கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதையடுத்து, குறித்த சொத்துக்களை அனுபவிக்கும் நபர்களைத் தேடும் நடவடிக்கை சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவுக்கு வழங்கப்பட்டது.
எழுத்து அளவு:

பொறியியலாளர் ஒருவரைக் கொன்று அவரது சொத்துக்களை போலியான பத்திரம் மூலம் கையகப்படுத்தி விற்பனை செய்த குற்றச்சாட்டின் பேரில் முதலீட்டுச் சபையின் முன்னாள் உதவிப் பணிப்பாளர் மற்றும் வர்த்தகர் ஒருவரை சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவினர் கைது செய்துள்ளனர்

ஜா -எல பிரதேசத்தை சேர்ந்த நிஹால் தேவப்பிரிய (62) மற்றும் வென்னப்புவைச் சேர்ந்த கொலிஞ்சாட ஜெராட் லிங்கந்த ஆகியோரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
 
2018 ஆம் ஆண்டு ஒக்டோபர் 23 ஆம் திகதி பிங்கிரிய பகுதியில் வசித்து வந்த ஐக்கிய நாடுகளின் இயந்திரவியல் பொறியியலாளர் சமன் விஜேசிறி கொல்லப்பட்டு அவரது உடல்  தடாகம் ஒன்றில வீசப்பட்டிருந்த்யது.
 
பின்னர் குடிவரவு அதிகாரி ஒருவரின் உதவியுடன்  சந்தேக  நபரான சமன் விஜேசிறி நாட்டை விட்டு வெளியேறியதாக விமான நிலைய கணனி அமைப்பில் தரவுகள் காணப்பட்டன. 
 
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கொலை மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவினரின் நீண்ட விசாரணையின் பின்னர் இந்த திட்டமிட்ட கொலை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
 
கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதையடுத்து, குறித்த சொத்துக்களை அனுபவிக்கும் நபர்களைத் தேடும் நடவடிக்கை சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவுக்கு வழங்கப்பட்டது.
 
சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவின் பணிப்பாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் லக்சிறி கீதலின் அறிவுறுத்தலின் பேரில், பிரதம இன்ஸ்பெக்டர் சம்பத் ராஜகருணா, சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவின் பிரிவு 2 இன் புலனாய்வுத் தளபதி உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினர்  இது தொடர்பீன விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
 
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

சொத்துக்காக பொறியியலாளரைக் கொன்று சடலத்தை தடாகத்தில் வீசிய முன்னாள் உதவிப் பணிப்பாளர் கைது! | Tamil Leader | We Lead the Nation