Tamil Leader News
முக்கியம்
தேசியப் பூங்காக்களில் பிகினி பிடிப்பு: சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் பாரிய இடைவெளி!●காவன்திஸ்ஸ துயரம்: யானையின் வயிற்றில் ஈயக் குண்டுகள்; விசாரணைகள் CID வசம்!●வீட்டுவசதி நெருக்கடியால் 14 ஆண்டுகளுக்குப் பின் ஸ்பெயினில் மாபெரும் பொது வேலைநிறுத்தம்!●நாடு திரும்புகிறார் அனோஜன் சிவராசா; சவூதியில் மரண தண்டனையிலிருந்து  பூரண விடுதலை!●1990 சுவசரிய சேவைக்கு இந்தியாவிலிருந்து மேலும் 100 நோயாளர் காவு வண்டிகள்; வருகை நேரம் 10 நிமிடங்களாகக் குறைகிறது!●நிதித்துறையில் எழுந்துள்ள புதிய அபாயங்கள் குறித்து மத்திய வங்கியிடமிருந்து விசேட எச்சரிக்கை!●6 மாதங்களில் 271 மில்லியன் நட்டம்: அரச ஊடகங்களுக்கு என்ன நேர்ந்தது?●DIGInote: 2027 வரவு-செலவுத் திட்டம் இன்று நாடாளுமன்றத்தில் - மூலதனச் செலவு 2 ட்ரில்லியன்!●2027 வரவு செலவுத் திட்டம்: இலக்கங்களின் ஸ்திரத்தன்மை மக்களின் பாக்கெட்டுக்குத் தெரியுமா?●இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●
செய்திகள்

அற்ப அரசியல் செய்தால் நாடு மேலும் ஆபத்தில் வீழ்ந்து விடும்! -ரணில் விக்கிரமசிங்க

T

The Leader Desk

நவம்பர் 4, 2024 • 1:01 AM

அற்ப அரசியல் செய்தால் நாடு மேலும் ஆபத்தில் வீழ்ந்து விடும்! -ரணில் விக்கிரமசிங்க

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • பொருளாதார நெருக்கடி பற்றிப் பேசாமல், அற்ப அரசியல் செய்தால் நாடு மேலும் ஆபத்தில் வீழ்ந்து விடும் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
  • பேராதனைக்குப் பின்னர் கொழும்பு பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டது.
  • அனுமதிப்பத்திரம் இல்லாத ஒரு குழுவினருக்கு நாடாளுமன்ற அதிகாரம் வழங்கப்படுமானால் நாடு எங்கு கொண்டு போகும் என்று நினைத்துக்கூட பார்க்க முடியாது எனவும் முன்னாள் ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.
எழுத்து அளவு:

பொருளாதார நெருக்கடி பற்றிப் பேசாமல், அற்ப அரசியல் செய்தால் நாடு மேலும் ஆபத்தில் வீழ்ந்து விடும் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

அனுமதிப்பத்திரம் இல்லாத ஒரு குழுவினருக்கு நாடாளுமன்ற அதிகாரம் வழங்கப்படுமானால் நாடு எங்கு கொண்டு போகும் என்று நினைத்துக்கூட பார்க்க முடியாது எனவும் முன்னாள் ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.

கொழும்பு டொரிங்டன் ஆர்கேட் வளாகத்தில் நடைபெற்ற இளைஞர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் உரையாற்றிய முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க

“இலங்கையைச் சேர்ந்த பல இளைஞர்களுக்கு இலங்கையில் கல்வி கற்கக்கூடிய வலுவான பல்கலைக்கழக அமைப்பை நாங்கள் உருவாக்கியுள்ளோம். முதல் இலங்கைப் பல்கலைக்கழகம் இலங்கையில் இருந்தது. அதன் பிறகு வித்யோதயா, வித்யாலங்காரா பல்கலைக்கழகங்கள் ஆரம்பிக்கப்பட்டன. பின்னர் அந்தப் பல்கலைக்கழகங்கள் களனி மற்றும் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகங்களாக மாறியது.

பேராதனைக்குப் பின்னர் கொழும்பு பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டது. மொரட்டுவை, ருகுணு, யாழ்ப்பாணம் மற்றும் கிழக்குப் பல்கலைக்கழகங்கள் நிறுவப்பட்டன. வடமேற்கு, சப்ரகமுவ, ஊவா வெல்லஸ்ஸ, அக்னிதிக, வன்னி மற்றும் ரஜரட்ட பல்கலைக்கழகங்கள் அதன் பின்னரே நிறுவப்பட்டன.

அதன் பிறகு, சேர் ஜோன் கொத்தலாவல பல்கலைக்கழகமும் நிறுவப்பட்டது. கூடுதலாக, பட்டங்களை வழங்கும் தேசிய கல்வி நிறுவனம் நிறுவப்பட்டது.

கடந்த அரசாங்கங்கள் என்ன செய்தன என்ற கேள்விக்கு இதுவே நல்ல பதில். இவ்வாறான பல்கலைக்கழகங்கள் இலங்கையில் தொடர்ந்தும் உருவாக்கப்பட வேண்டும் என்றார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...