Tamil Leader News
முக்கியம்
தேசியப் பூங்காக்களில் பிகினி பிடிப்பு: சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் பாரிய இடைவெளி!●காவன்திஸ்ஸ துயரம்: யானையின் வயிற்றில் ஈயக் குண்டுகள்; விசாரணைகள் CID வசம்!●வீட்டுவசதி நெருக்கடியால் 14 ஆண்டுகளுக்குப் பின் ஸ்பெயினில் மாபெரும் பொது வேலைநிறுத்தம்!●நாடு திரும்புகிறார் அனோஜன் சிவராசா; சவூதியில் மரண தண்டனையிலிருந்து  பூரண விடுதலை!●1990 சுவசரிய சேவைக்கு இந்தியாவிலிருந்து மேலும் 100 நோயாளர் காவு வண்டிகள்; வருகை நேரம் 10 நிமிடங்களாகக் குறைகிறது!●நிதித்துறையில் எழுந்துள்ள புதிய அபாயங்கள் குறித்து மத்திய வங்கியிடமிருந்து விசேட எச்சரிக்கை!●6 மாதங்களில் 271 மில்லியன் நட்டம்: அரச ஊடகங்களுக்கு என்ன நேர்ந்தது?●DIGInote: 2027 வரவு-செலவுத் திட்டம் இன்று நாடாளுமன்றத்தில் - மூலதனச் செலவு 2 ட்ரில்லியன்!●2027 வரவு செலவுத் திட்டம்: இலக்கங்களின் ஸ்திரத்தன்மை மக்களின் பாக்கெட்டுக்குத் தெரியுமா?●இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●
செய்திகள்

நான் ஓய்வுபெறும் காலம் நெருங்கி வருகிறது! கண்டியில் அறிவித்தார் ரவூப் ஹக்கீம்

T

The Leader Desk

நவம்பர் 3, 2024 • 11:53 PM

நான் ஓய்வுபெறும் காலம் நெருங்கி வருகிறது! கண்டியில்  அறிவித்தார் ரவூப் ஹக்கீம்

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • ஆளுமைக்குரிய ஆற்றல் உள்ளது.
  • அவருக்கு 34 வயதுதான் ஆகிறது.
  • நான் முதன்முதலில் நாடாளுமன்றம் சென்றபோது எனது வயதும் 34 தான்.
  • தற்போது நான் ஓய்வுபெறும் காலம் நெருங்கிக் கொண்டு வருகிறது.
எழுத்து அளவு:

ஆளுமைக்குரிய ஆற்றல் உள்ளது. அவர் போன்ற இளைஞர்கள் நிச்சயம் பாராளுமன்றம் செல்ல வேண்டும் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

வேட்பாளர் பாரத் அருள்சாமியை ஆதரித்து கண்டி மஹியாவ மற்றும் குயின்ஸ் விருந்தகத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரத்தின் போது கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியவை வருமாறு,

' தனது தந்தையின் பெயரைப் பயன்படுத்தி அரசியல் செய்வதைவிட பாரத் அருள்சாமியிடம் சிறந்த ஆளுமை இருப்பதை நான் கூர்மையாக அவதானித்துவருகின்றேன்.

நல்ல திறமையான புதிய ஆளுமையை மனோ கணேசன் கண்டி மாவட்ட வேட்பாளராக தெரிவு செய்துள்ளமையை மகிழ்ச்சியளிக்கிறது. அவருக்கு 34 வயதுதான் ஆகிறது. நான் முதன்முதலில் நாடாளுமன்றம் சென்றபோது எனது வயதும் 34 தான்.

தற்போது நான் ஓய்வுபெறும் காலம் நெருங்கிக் கொண்டு வருகிறது. பாரத் போன்ற ஒருவர் இம்மாவட்டத்தில் எனக்கு பிரதியீடாக வரவேண்டும் என எதிர்பார்க்கின்றேன். ஏனெனில் அவரிடம் ஆளுமைக்குரிய அம்சங்கள் உள்ளன.

என்னை போன்ற அரசியலுக்கு பரீட்சயமானவர் போலவே பாரத் செயற்பட்டு வருகின்றார். கண்டி மாவட்டத்துக்கு சிறந்த பொக்கிஷம் கிடைத்துள்ளது. முஸ்லிம் மக்களின் அபிலாஷைகளையும் அவர் அரவணைத்து செல்லக் கூடியவர். எனவே, அவரின் வெற்றிக்கு முஸ்லிம் மக்களும் கூடுதல் பங்களிப்பை செய்ய வேண்டும்." - என்றார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

நான் ஓய்வுபெறும் காலம் நெருங்கி வருகிறது! கண்டியில் அறிவித்தார் ரவூப் ஹக்கீம் | Tamil Leader | We Lead the Nation