Tamil Leader News
முக்கியம்
தேசியப் பூங்காக்களில் பிகினி பிடிப்பு: சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் பாரிய இடைவெளி!●காவன்திஸ்ஸ துயரம்: யானையின் வயிற்றில் ஈயக் குண்டுகள்; விசாரணைகள் CID வசம்!●வீட்டுவசதி நெருக்கடியால் 14 ஆண்டுகளுக்குப் பின் ஸ்பெயினில் மாபெரும் பொது வேலைநிறுத்தம்!●நாடு திரும்புகிறார் அனோஜன் சிவராசா; சவூதியில் மரண தண்டனையிலிருந்து  பூரண விடுதலை!●1990 சுவசரிய சேவைக்கு இந்தியாவிலிருந்து மேலும் 100 நோயாளர் காவு வண்டிகள்; வருகை நேரம் 10 நிமிடங்களாகக் குறைகிறது!●நிதித்துறையில் எழுந்துள்ள புதிய அபாயங்கள் குறித்து மத்திய வங்கியிடமிருந்து விசேட எச்சரிக்கை!●6 மாதங்களில் 271 மில்லியன் நட்டம்: அரச ஊடகங்களுக்கு என்ன நேர்ந்தது?●DIGInote: 2027 வரவு-செலவுத் திட்டம் இன்று நாடாளுமன்றத்தில் - மூலதனச் செலவு 2 ட்ரில்லியன்!●2027 வரவு செலவுத் திட்டம்: இலக்கங்களின் ஸ்திரத்தன்மை மக்களின் பாக்கெட்டுக்குத் தெரியுமா?●இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●
செய்திகள்

தமிழ் தேசியத்தை புறக்கணிப்பவர்களை தமிழர்கள் புறக்கணிக்க வேண்டும்

T

The Leader Desk

நவம்பர் 2, 2024 • 10:43 AM

தமிழ் தேசியத்தை புறக்கணிப்பவர்களை தமிழர்கள் புறக்கணிக்க வேண்டும்

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • கட்சிகள் , சுயேட்சை குழுக்களையும் தமிழ் மக்கள் நிராகரிக்க வேண்டும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடும் சசிகலா ரவிராஜ் கோரிக்கை விடுத்துள்ளார். யாழ் .
  • எனது கணவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்த வேளையே படுகொலை செய்யப்பட்டார். கடந்த 2020ஆம் ஆண்டில் தமிழரசு கட்சி சார்ப்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பில் தான் போட்டியிட்டேன்.
  • அப்போது தான் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து எனக்கு அழைப்பு வந்தது.
  • உங்கள் அபிலாசைகளை நிறைவேற்றுவேன் எனவும் , எனது கணவரின் விருப்பத்தினை நிறைவேற்றுவேன் எனவே சங்கு சின்னத்திற்கு வாக்களித்து அதில் எனது இலக்கமான 07ஆம் இலக்கத்திற்கு உங்கள் விருப்பு வாக்கினை அழிக்க வேண்டும் என மேலும் தெரிவித்தார்.
எழுத்து அளவு:

கட்சிகள் , சுயேட்சை குழுக்களையும் தமிழ் மக்கள் நிராகரிக்க வேண்டும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடும் சசிகலா ரவிராஜ் கோரிக்கை விடுத்துள்ளார். 

யாழ் . ஊடக சமயத்தில் இன்றைய தினம் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். 

மேலும் தெரிவிக்கையில், 

  தேசிய தலைவரினால் உருவாக்கப்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பில் உள்ள மூன்று கட்சிகளின் கூட்டில் தான் நான் இணைந்துள்ளேன். எனது கணவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்த வேளையே படுகொலை செய்யப்பட்டார். 

கடந்த 2020ஆம் ஆண்டில் தமிழரசு கட்சி சார்ப்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பில் தான் போட்டியிட்டேன். அதன் அடிப்படையில் இந்த முறை தேர்தலிலும் தமிழரசு கட்சி ஆசனம் வழங்கும் என எதிர்பார்த்து இருந்தேன். எனக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது.  

பெண்களுக்கு முன் மாதிரியாக இருக்க வேண்டிய நான் தோற்று போனவளாக இந்த தேர்தலில் இருந்து விலகி இருக்க விரும்பவில்லை. அப்போது தான் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து எனக்கு அழைப்பு வந்தது. அதனை ஏற்றுக் கொண்டேன். 

பெண்களுக்காக உங்கள் முன் நிற்கும் என்னை தெரிவு செய்ய வேண்டும். பெண்கள் மிக ஆழமாக சிந்தித்து வாக்களிக்க வேண்டும். 

இந்த தேர்தலில் பல கட்சிகள் பல சுயேட்சைகள் போட்டியிடுகின்றனர். அதனால் மக்கள் மத்தியில் குழப்பம் இருக்கிறது . அதில் ஐந்து கட்சிகள் ஒற்றுமையாக இணைந்து சங்கு சின்னத்தில் போட்டியிடுகின்றன. 

எல்லா கட்சிகளையும் ஒன்றிணைக்க ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு இரு கரங்களையும் நீட்டி தயாராகவே இருக்கிறது. 

தமிழ் தேசியத்தை புறக்கணிக்கும் கட்சிகள் , சுயேட்சை குழுக்களையும் தமிழ் மக்கள் நிராகரிக்க வேண்டும். 

எனவே ஒற்றுமையாக இருக்கும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் சங்கு சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும். உங்கள் அபிலாசைகளை நிறைவேற்றுவேன் எனவும் , எனது கணவரின் விருப்பத்தினை நிறைவேற்றுவேன் எனவே சங்கு சின்னத்திற்கு வாக்களித்து அதில் எனது இலக்கமான 07ஆம் இலக்கத்திற்கு உங்கள் விருப்பு வாக்கினை அழிக்க வேண்டும் என மேலும் தெரிவித்தார் 

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...