Tamil Leader News
முக்கியம்
தேசியப் பூங்காக்களில் பிகினி பிடிப்பு: சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் பாரிய இடைவெளி!●காவன்திஸ்ஸ துயரம்: யானையின் வயிற்றில் ஈயக் குண்டுகள்; விசாரணைகள் CID வசம்!●வீட்டுவசதி நெருக்கடியால் 14 ஆண்டுகளுக்குப் பின் ஸ்பெயினில் மாபெரும் பொது வேலைநிறுத்தம்!●நாடு திரும்புகிறார் அனோஜன் சிவராசா; சவூதியில் மரண தண்டனையிலிருந்து  பூரண விடுதலை!●1990 சுவசரிய சேவைக்கு இந்தியாவிலிருந்து மேலும் 100 நோயாளர் காவு வண்டிகள்; வருகை நேரம் 10 நிமிடங்களாகக் குறைகிறது!●நிதித்துறையில் எழுந்துள்ள புதிய அபாயங்கள் குறித்து மத்திய வங்கியிடமிருந்து விசேட எச்சரிக்கை!●6 மாதங்களில் 271 மில்லியன் நட்டம்: அரச ஊடகங்களுக்கு என்ன நேர்ந்தது?●DIGInote: 2027 வரவு-செலவுத் திட்டம் இன்று நாடாளுமன்றத்தில் - மூலதனச் செலவு 2 ட்ரில்லியன்!●2027 வரவு செலவுத் திட்டம்: இலக்கங்களின் ஸ்திரத்தன்மை மக்களின் பாக்கெட்டுக்குத் தெரியுமா?●இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●
செய்திகள்

அடுத்த வருடம் மீண்டும் ரணிலின் ஆட்சி என்கிறார் அநுராத ஜயரத்ன!

T

The Leader Desk

நவம்பர் 1, 2024 • 9:29 AM

அடுத்த வருடம் மீண்டும் ரணிலின் ஆட்சி என்கிறார் அநுராத ஜயரத்ன!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • செய்தது போன்று தற்போதைய அரசாங்கம் ஆட்சியை தொடர்ந்தால், ஒரு வருடத்திற்குள் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான எரிவாயு சிலிண்டர் சின்னம் கொண்ட குழு நாட்டின் ஆட்சியை கைப்பற்ற நேரிடும் என முன்னாள் இராஜாங்க அமைச்சர் அநுராத ஜயரத்ன தெரிவித்துள்ளார்.
  • கண்டி "கரலிய" பொது கேட்போர் கூடத்தில் நேற்று (31) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
  • இந்த நாட்டின் இருபத்தி இரண்டு மில்லியன் மக்களின் தலைவராக அநுர திஸாநாயக்க ஜனாதிபதியாக இருக்க வேண்டும் என்றாலும், அதனை அவர் மறந்து விட்டார்.
  • அப்போது 3 சதவீதத்தினருக்கு தலைமைப் பொறுப்பை வழங்கிய எதிர்க்கட்சி உறுப்பினர் போலவே இன்றும் நடந்து கொள்கிறார். கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது கண்டியில் நடைபெற்ற பேரணியில் முக்கிய விடயம் ஒன்றைக் குறிப்பிட்டேன்.
எழுத்து அளவு:

செய்தது போன்று தற்போதைய அரசாங்கம் ஆட்சியை தொடர்ந்தால், ஒரு வருடத்திற்குள் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான எரிவாயு சிலிண்டர் சின்னம் கொண்ட குழு நாட்டின் ஆட்சியை கைப்பற்ற நேரிடும் என முன்னாள் இராஜாங்க அமைச்சர் அநுராத ஜயரத்ன தெரிவித்துள்ளார்.

கண்டி "கரலிய" பொது கேட்போர் கூடத்தில் நேற்று (31) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

எட்டாவது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இந்த பேரணி இடம்பெற்றது. 

மேலும் கருத்து தெரிவித்த அனுராத ஜயரத்ன,

'' தற்போதைய அநுர திஸாநாயக்க நிர்வாகம் பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் கூட்டம், பிரிக்ஸ் உச்சி மாநாடு போன்ற முக்கியமான சர்வதேச உச்சி மாநாடுகளை தவிர்க்கும் கொள்கையை பின்பற்றுகிறது.

இதே கொள்கையை எதிர்காலத்தில் பின்பற்றினால் இந்த நாட்டின் பொருளாதார நெருக்கடியை தீர்க்க சர்வதேச சமூகத்தின் ஆதரவு கிடைப்பது சந்தேகமே.

இந்த நாட்டின் இருபத்தி இரண்டு மில்லியன் மக்களின் தலைவராக அநுர திஸாநாயக்க ஜனாதிபதியாக இருக்க வேண்டும் என்றாலும், அதனை அவர் மறந்து விட்டார். அப்போது 3 சதவீதத்தினருக்கு தலைமைப் பொறுப்பை வழங்கிய எதிர்க்கட்சி உறுப்பினர் போலவே இன்றும் நடந்து கொள்கிறார். 

கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது கண்டியில் நடைபெற்ற பேரணியில் முக்கிய விடயம் ஒன்றைக் குறிப்பிட்டேன். அதாவது,  எழுதி வைத்துக் கொள்ளுங்கள், இன்னும் ஆறு மாதங்களில் ரணில் விக்கிரமசிங்கவே இந்த நாட்டின் ஜனாதிபதியாக வருவார்'. 40 நாட்களுக்கு முன்பு செங்கடகலையில் அமர்ந்து நாங்கள் கூறிய  அந்தக் கதையை இந்த அரசு உறுதிப்படுத்துகிறது என்றார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...