Tamil Leader News
முக்கியம்
தேசியப் பூங்காக்களில் பிகினி பிடிப்பு: சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் பாரிய இடைவெளி!●காவன்திஸ்ஸ துயரம்: யானையின் வயிற்றில் ஈயக் குண்டுகள்; விசாரணைகள் CID வசம்!●வீட்டுவசதி நெருக்கடியால் 14 ஆண்டுகளுக்குப் பின் ஸ்பெயினில் மாபெரும் பொது வேலைநிறுத்தம்!●நாடு திரும்புகிறார் அனோஜன் சிவராசா; சவூதியில் மரண தண்டனையிலிருந்து  பூரண விடுதலை!●1990 சுவசரிய சேவைக்கு இந்தியாவிலிருந்து மேலும் 100 நோயாளர் காவு வண்டிகள்; வருகை நேரம் 10 நிமிடங்களாகக் குறைகிறது!●நிதித்துறையில் எழுந்துள்ள புதிய அபாயங்கள் குறித்து மத்திய வங்கியிடமிருந்து விசேட எச்சரிக்கை!●6 மாதங்களில் 271 மில்லியன் நட்டம்: அரச ஊடகங்களுக்கு என்ன நேர்ந்தது?●DIGInote: 2027 வரவு-செலவுத் திட்டம் இன்று நாடாளுமன்றத்தில் - மூலதனச் செலவு 2 ட்ரில்லியன்!●2027 வரவு செலவுத் திட்டம்: இலக்கங்களின் ஸ்திரத்தன்மை மக்களின் பாக்கெட்டுக்குத் தெரியுமா?●இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●
செய்திகள்

கிராண்ட்பாஸ் கொலை: வத்தளையைச் சேர்ந்தவர் கைது! .

T

The Leader Desk

நவம்பர் 1, 2024 • 5:13 AM

கிராண்ட்பாஸ் கொலை: வத்தளையைச் சேர்ந்தவர் கைது!  .

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மயானம் ஒன்றுக்கு முன்பாக முச்சக்கரவண்டியில் சென்ற நபரை சுட்டுக் கொன்ற சம்பவத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தியவர் என சந்தேகிக்கப்படும் நபர் ஒருவரை கொழும்பு குற்றப் பிரிவினர் நேற்று (31) கைது செய்துள்ளனர்.
  • சந்தேக நபர் ஹெந்தல, வத்தளை பகுதியைச் சேர்ந்த 31 வயதுடையவரார்.
  • இதன்படி, சந்தேக நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்த வந்த காரை ஓட்டிச் சென்ற 35 வயதுடைய புளூமெண்டல் பகுதியைச் சேர்ந்த ஒருவர் கிராண்ட்பாஸ் பொலிஸாரால் கடந்த ஒக்டோபர் 28ஆம் திகதி கைது செய்யப்பட்டார்.
எழுத்து அளவு:

பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மயானம் ஒன்றுக்கு முன்பாக முச்சக்கரவண்டியில் சென்ற நபரை சுட்டுக் கொன்ற சம்பவத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தியவர் என சந்தேகிக்கப்படும் நபர் ஒருவரை கொழும்பு குற்றப் பிரிவினர் நேற்று (31) கைது செய்துள்ளனர்.

சந்தேக நபர் ஹெந்தல, வத்தளை பகுதியைச் சேர்ந்த 31 வயதுடையவரார்.

கடந்த ஒக்டோபர் மாதம் 16ஆம் திகதி கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மாதம்பிட்டிய மயானத்துக்கு முன்பாக காரில் வந்த இனந்தெரியாத சிலர் முச்சக்கர வண்டியில் சென்ற நபர் ஒருவரைக் சுட்டுக் கொன்ற சம்பவம் தொடர்பில் கிராண்ட்பாஸ் பொலிஸாரும் கொழும்பு குற்றப் பிரிவினரும் இணைந்து விசாரணைகளை ஆரம்பித்திருந்தனர்.

இதன்படி, சந்தேக நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்த வந்த காரை ஓட்டிச் சென்ற 35 வயதுடைய புளூமெண்டல் பகுதியைச் சேர்ந்த ஒருவர் கிராண்ட்பாஸ் பொலிஸாரால் கடந்த ஒக்டோபர் 28ஆம் திகதி கைது செய்யப்பட்டார்.

துப்பாக்கிச் சூடு நடத்தியதாக சந்தேகிக்கப்படும் நபர் வத்தளை பகுதியில் வைத்து இரண்டு கையடக்கத் தொலைபேசிகளுடன் நேற்று மாலை கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலதிக விசாரணைகளின் போது, ​​சந்தேக நபர் வெளிநாடுகளில் திட்டமிட்ட குற்றச் செயல்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட ஒருவருடன் தொடர்பில் இருந்ததாகவும், அந்த நபரின் வழிகாட்டலின் பேரில் இந்தக் குற்றம் இடம்பெற்றுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

கிராண்ட்பாஸ் பொலிஸார் மற்றும் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...