Tamil Leader News
முக்கியம்
தேசியப் பூங்காக்களில் பிகினி பிடிப்பு: சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் பாரிய இடைவெளி!●காவன்திஸ்ஸ துயரம்: யானையின் வயிற்றில் ஈயக் குண்டுகள்; விசாரணைகள் CID வசம்!●வீட்டுவசதி நெருக்கடியால் 14 ஆண்டுகளுக்குப் பின் ஸ்பெயினில் மாபெரும் பொது வேலைநிறுத்தம்!●நாடு திரும்புகிறார் அனோஜன் சிவராசா; சவூதியில் மரண தண்டனையிலிருந்து  பூரண விடுதலை!●1990 சுவசரிய சேவைக்கு இந்தியாவிலிருந்து மேலும் 100 நோயாளர் காவு வண்டிகள்; வருகை நேரம் 10 நிமிடங்களாகக் குறைகிறது!●நிதித்துறையில் எழுந்துள்ள புதிய அபாயங்கள் குறித்து மத்திய வங்கியிடமிருந்து விசேட எச்சரிக்கை!●6 மாதங்களில் 271 மில்லியன் நட்டம்: அரச ஊடகங்களுக்கு என்ன நேர்ந்தது?●DIGInote: 2027 வரவு-செலவுத் திட்டம் இன்று நாடாளுமன்றத்தில் - மூலதனச் செலவு 2 ட்ரில்லியன்!●2027 வரவு செலவுத் திட்டம்: இலக்கங்களின் ஸ்திரத்தன்மை மக்களின் பாக்கெட்டுக்குத் தெரியுமா?●இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●
செய்திகள்

நீங்கள் எதிர்பார்க்கும் மாற்றம் என்னிலிருந்து ஆரம்பிக்கட்டும்! - றிஸ்லி முஸ்தபா

T

The Leader Desk

அக்டோபர் 31, 2024 • 1:11 PM

நீங்கள் எதிர்பார்க்கும் மாற்றம் என்னிலிருந்து ஆரம்பிக்கட்டும்! - றிஸ்லி முஸ்தபா

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக திகாமடுல்ல மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளரும் கட்சியின் அம்பாறை மாவட்ட இளைஞர் அமைப்பாளருமான றிஸ்லி முஸ்தபா ஆதரித்து இளைஞர் ஒன்று கூடல் ஒன்று அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பகுதியில் நடைபெற்றது.
  • நீங்கள் என்னைத் தெரிவு செய்து பாராளுமன்றம் அனுப்புவதன் மூலமாக இந்தப் பிராந்திய அரச கட்டமைப்பு நிச்சயமாக மாற்றத்தை நோக்கி நகரும் என்று நம்புகிறேன்.
  • Rizley Musthaffa Education Aid - Social Organization இன் மூலமாக மேற்கொள்ளப்பட்ட திட்டங்களை அமுல்படுத்திய இளைஞர்களையும் றிஸ்லி முஸ்தபாவின் ஆதரவாளர்களையும் செயற்பாட்டாளர்களையும் கௌரவிக்கும் நிகழ்வாகவும் இந்த ஒன்று கூடல் இடம்பெற்றது.
எழுத்து அளவு:
தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக திகாமடுல்ல மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளரும் கட்சியின் அம்பாறை மாவட்ட இளைஞர் அமைப்பாளருமான றிஸ்லி முஸ்தபா ஆதரித்து இளைஞர் ஒன்று கூடல் ஒன்று அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பகுதியில் நடைபெற்றது.
 
Rizley Musthaffa Education Aid - Social Organization இன் மூலமாக மேற்கொள்ளப்பட்ட திட்டங்களை அமுல்படுத்திய இளைஞர்களையும்  றிஸ்லி முஸ்தபாவின் ஆதரவாளர்களையும் செயற்பாட்டாளர்களையும் கௌரவிக்கும் நிகழ்வாகவும் இந்த ஒன்று கூடல் இடம்பெற்றது.
 
இதன்போது பெரிய நீலாவணை, மருதமுனை, நற்பிட்டிமுனை, நாவிதன்வெளி, சவளக்கடை, சம்மாந்துறை, நிந்தவூர், ஒலுவில், சாய்ந்தமருது, கல்முனை, பாலமுனை, அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்று உள்ளிட்ட பொத்துவில் பகுதிகளைச் சேர்ந்த கட்சியின் அம்பாறை மாவட்ட   உறுப்பினர்கள் ஆதரவாளர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.
 
IMG 20241031 182834 800 x 533 pixel
 
இதன்போது அங்கு உரையாற்றிய றிஸ்லி முஸ்தபா
 
எமது அம்பாறை மாவட்டத்தில் உள்ள அரச ஊழியர்கள் இந்த முறை எனக்கு ஒரு சந்தர்ப்பத்தை தருவீர்கள் என்ற நம்பிக்கையுடன், நீங்கள் எதிர்பார்க்கும் மாற்றம் என்னிலிருந்து ஆரம்பிக்கட்டும். அம்பாறை மாவட்டத்திலுள்ள சகல அரச ஊழியர்களும் பொருளாதார நெருக்கடி காரணமாக பல்வேறு துன்பங்களை அனுபவித்து வருவதை நான் அறிவேன்
உண்மையில் அரச ஊழியர்கள் எமது நாட்டின், சமூகத்தின் முதுகெலும்புகள்.
 
நீங்கள் என்னைத் தெரிவு செய்து பாராளுமன்றம் அனுப்புவதன் மூலமாக இந்தப் பிராந்திய அரச கட்டமைப்பு நிச்சயமாக மாற்றத்தை நோக்கி நகரும் என்று நம்புகிறேன்.
 
எனது தந்தை முன்னாள் பிரதியமைச்சர் மர்ஹூம் மயோன் முஸ்தபாவின் பல கனவு செயற்றிட்டங்கள் என் கைவசம் உள்ளன. அவற்றை நிச்சயமாக முன்னெடுப்பேன்.
 
எனது சொந்த நிதி மூலமாக முடியுமானளவு எமது பிராந்திய பாடசாலைகளுக்கும் மாணவர்களுக்கும் உதவி உள்ளேன். அதை இடைவிடாது முன்கொண்டு செல்லவும், எமது பிராந்தியத்தில் கை நழுவிப்போன அரச காரியாலயங்களை மீண்டும் கொண்டு வரவும் என்னால் முடியும் என்று நம்புகிறேன் என்றார்.
 
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...