Tamil Leader News
முக்கியம்
தேசியப் பூங்காக்களில் பிகினி பிடிப்பு: சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் பாரிய இடைவெளி!●காவன்திஸ்ஸ துயரம்: யானையின் வயிற்றில் ஈயக் குண்டுகள்; விசாரணைகள் CID வசம்!●வீட்டுவசதி நெருக்கடியால் 14 ஆண்டுகளுக்குப் பின் ஸ்பெயினில் மாபெரும் பொது வேலைநிறுத்தம்!●நாடு திரும்புகிறார் அனோஜன் சிவராசா; சவூதியில் மரண தண்டனையிலிருந்து  பூரண விடுதலை!●1990 சுவசரிய சேவைக்கு இந்தியாவிலிருந்து மேலும் 100 நோயாளர் காவு வண்டிகள்; வருகை நேரம் 10 நிமிடங்களாகக் குறைகிறது!●நிதித்துறையில் எழுந்துள்ள புதிய அபாயங்கள் குறித்து மத்திய வங்கியிடமிருந்து விசேட எச்சரிக்கை!●6 மாதங்களில் 271 மில்லியன் நட்டம்: அரச ஊடகங்களுக்கு என்ன நேர்ந்தது?●DIGInote: 2027 வரவு-செலவுத் திட்டம் இன்று நாடாளுமன்றத்தில் - மூலதனச் செலவு 2 ட்ரில்லியன்!●2027 வரவு செலவுத் திட்டம்: இலக்கங்களின் ஸ்திரத்தன்மை மக்களின் பாக்கெட்டுக்குத் தெரியுமா?●இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●
செய்திகள்

மக்களை ஏமாற்றியது போதும், தேர்தல் வாக்குறுதிகளை முறையாக நிறைவேற்றுங்கள்! - சஜித் பிரேமதாச

T

The Leader Desk

அக்டோபர் 31, 2024 • 10:37 AM

மக்களை ஏமாற்றியது போதும், தேர்தல் வாக்குறுதிகளை முறையாக நிறைவேற்றுங்கள்! - சஜித் பிரேமதாச

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டதன் பின்னர், வாக்குறுதியளிக்கப்பட்ட சலுகைகளை ஒட்டுமொத்த நாட்டு மக்களும் எதிர்பார்த்தனர்.
  • மின் கட்டணத்தை 66% குறைப்போம் என்றனர்.
  • ஜனாதிபதி கூறியது போல் மின் கட்டணத்தை 66% குறைத்து, பொருட்களின் விலையை குறைத்து, வரியை முடியுமானால் குறைக்குமாறு நான் அவருக்கு சவால் விடுகின்றேன்.
  • இவற்றை செய்வதற்கு பாராளுமன்றத்தில் பெரும்பான்மை தேவையில்லை.
எழுத்து அளவு:

ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டதன் பின்னர், வாக்குறுதியளிக்கப்பட்ட சலுகைகளை ஒட்டுமொத்த நாட்டு மக்களும் எதிர்பார்த்தனர். ஆனால் எதுவும் இதுவரை நிறைவேற்றப்படவில்லை. மின் கட்டணத்தை 66% குறைப்போம் என்றனர். பொருட்களின் விலைகளை குறைப்போம் என்றனர். கடவுச்சீட்டு வரிசைக்கான தீர்வுகளை தருவதாக சொன்னார்கள். இதுவரை நடக்கவில்லை. மக்களை ஏமாற்றியுள்ளனர் என சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

ஜனாதிபதி கூறியது போல் மின் கட்டணத்தை 66% குறைத்து, பொருட்களின் விலையை குறைத்து, வரியை முடியுமானால் குறைக்குமாறு நான் அவருக்கு சவால் விடுகின்றேன். மக்களை ஏமாற்றும் அரசாங்கமாக இந்த அரசாங்கம் நடந்து கொள்ளக் கூடாது என சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

மத்திய கொழும்பில் நேற்று நடைபெற்ற மக்கள் சந்திப்பொன்றில் வைத்து உரையாற்றும் போதே தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.

அழுத்தங்களுக்கு மத்தியில் வாழ்ந்து வரும் பெரும்பான்மையான மக்களுக்கு தருவதாக கூறிய சலுகைகளை இன்னமும் வழங்கவில்லை. இவற்றை செய்வதற்கு பாராளுமன்றத்தில் பெரும்பான்மை தேவையில்லை. இந்த பிரச்சினைகளை தீர்க்க முடியாத காரணத்தினால் அரசாங்கம் திணறி வருகிறது. மறுபுறம் மக்கள் அழுத்தங்களை சந்தித்து வருகின்றனர் என சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

தேர்தல் மேடையில் கூறப்பட்ட வரி குறைப்பு எதுவும் நடந்தபாடில்லை. இந்த வரிகளை குறைக்க சர்வதேச நாணய நிதியம் இணங்கவில்லை. சர்வதேச நாணய நிதியத்தின் மீளாய்வு கூட பிற்போடப்பட்டுள்ளது என சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

சர்வதேச நாணய நிதியத்தின் தாளங்களுக்கு ஆடமாட்டேன் என்று சொன்னவர்கள், இன்று சர்வதேச நாணய நிதியத்தின் தாளத்துக்கு ஆடும் பொம்மையாக மாறியிருக்கிறார்கள். ஐக்கிய மக்கள் சக்தி அமைக்கும் அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி, வரிச் சுமையுடன் கூடிய பொருட்களின் விலைகளையும் மின்சாரக் கட்டணங்களையும் குறைக்கும். தாம் புதிய சர்வதேச நாணய நிதிய உடன்படிக்கையை எட்டுவோம். எனவே இந்த வாயாடிகளுக்கு ஏமாற வேண்டாம் என சஜித் பிரேமதாச மேலும்
தெரிவித்தார்

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

மக்களை ஏமாற்றியது போதும், தேர்தல் வாக்குறுதிகளை முறையாக நிறைவேற்றுங்கள்! - சஜித் பிரேமதாச | Tamil Leader | We Lead the Nation