Tamil Leader News
முக்கியம்
தேசியப் பூங்காக்களில் பிகினி பிடிப்பு: சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் பாரிய இடைவெளி!●காவன்திஸ்ஸ துயரம்: யானையின் வயிற்றில் ஈயக் குண்டுகள்; விசாரணைகள் CID வசம்!●வீட்டுவசதி நெருக்கடியால் 14 ஆண்டுகளுக்குப் பின் ஸ்பெயினில் மாபெரும் பொது வேலைநிறுத்தம்!●நாடு திரும்புகிறார் அனோஜன் சிவராசா; சவூதியில் மரண தண்டனையிலிருந்து  பூரண விடுதலை!●1990 சுவசரிய சேவைக்கு இந்தியாவிலிருந்து மேலும் 100 நோயாளர் காவு வண்டிகள்; வருகை நேரம் 10 நிமிடங்களாகக் குறைகிறது!●நிதித்துறையில் எழுந்துள்ள புதிய அபாயங்கள் குறித்து மத்திய வங்கியிடமிருந்து விசேட எச்சரிக்கை!●6 மாதங்களில் 271 மில்லியன் நட்டம்: அரச ஊடகங்களுக்கு என்ன நேர்ந்தது?●DIGInote: 2027 வரவு-செலவுத் திட்டம் இன்று நாடாளுமன்றத்தில் - மூலதனச் செலவு 2 ட்ரில்லியன்!●2027 வரவு செலவுத் திட்டம்: இலக்கங்களின் ஸ்திரத்தன்மை மக்களின் பாக்கெட்டுக்குத் தெரியுமா?●இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●
செய்திகள்

அநுரவின் தேர்தல் வாக்குறுதிகள் புஸ்வாணமாகி விட்டன! - சஜித் பிரேமதாச

T

The Leader Desk

அக்டோபர் 30, 2024 • 9:42 AM

அநுரவின் தேர்தல் வாக்குறுதிகள் புஸ்வாணமாகி விட்டன! - சஜித் பிரேமதாச

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • ஜனாதிபதி தேர்தலின் போது வழங்கிய எதிர்பார்ப்புகளை நிறைவேற்றத் தவறிவிட்டார்.
  • இவ்வளவு மந்தமான, வீழ்ச்சி கண்டுள்ள பொருளாதாரத்தைக் கொண்ட நாடு நான்கு வருடங்களில் கடனை அடைக்க முடியாது.
  • இப்படியே தொடர்ந்தால், 2028 இன்னும் கடினமாக மாறி இதைவிடவும் வங்குரோத்தடைவோம்.
எழுத்து அளவு:

ஜனாதிபதி தேர்தலின் போது வழங்கிய எதிர்பார்ப்புகளை நிறைவேற்றத் தவறிவிட்டார். VAT வரி, நேரடி மற்றும் மறைமுக வரிகளைப் குறைப்போம் என்றார், ஆனால் IMF பேச்சுவார்த்தைகள் கூட தோல்வியடைந்து வரிகளை குறைக்க முடியாதுபோயுள்ளன.

 ஐக்கிய மக்கள் சக்தி, பொதுத் தேர்தலுக்கு முன்னரே எதிர்க்கட்சியில் இருந்து கொண்டு சர்வதேச நாணய நிதியத்துடன் உடன்பாட்டை எட்டியது. 
 
எனவே, நேரடி வரி மற்றும் மறைமுக வரிகளை எம்மால் குறைக்க முடியும். VAT  வரி, உழைக்கும் போது செலுத்தும் வரி முதலியவற்றைக் குறைக்க அரசாங்கத்தால் முடியாவிட்டாலும், ஐக்கிய மக்கள் சக்திக்கு இந்த வரிகளை குறைக்கும் இயலுமை காணப்படுகிறது. பாராளுமன்ற அதிகாரம் எமக்கு கிடைக்கும் பட்சத்தில் முன்னாள் ஜனாதிபதியினால் கைச்சாத்திடப்பட்ட மக்கள் விரோத சர்வதேச நாணய நிதிய ஒப்பந்தம் இரத்துச் செய்யப்பட்டு, மக்கள் சார் உடன்படிக்கையை மேற்கொள்வோம் என சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
 
மத்திய கொழும்பு தேர்தல் தொகுதியில் நேற்று நடந்த மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். 
 
2033 ஆம் ஆண்டிலிருந்து கடனை செலுத்த  சர்வதேச நாணய நிதியம் இணக்கம் தெரிவித்த போதிலும், கடனை 2028 முதல் அதாவது 4 ஆண்டுகளில் செலுத்துவதற்கான இணக்கப்பாட்டை முன்னாள் ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் விருப்பம் தெரிவித்தது. இவ்வளவு மந்தமான, வீழ்ச்சி கண்டுள்ள பொருளாதாரத்தைக் கொண்ட நாடு நான்கு வருடங்களில் கடனை அடைக்க முடியாது. நான்கு வருடங்களில் கடனை அடைப்பதற்கு விரைவான பொருளாதார வளர்ச்சி அவசியம் என சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
 
இப்படியே தொடர்ந்தால், 2028 இன்னும் கடினமாக மாறி இதைவிடவும் வங்குரோத்தடைவோம். வரிச்சுமையைக் குறைக்கும் புதிய சர்வதேச நாணய நிதிய உடன்படிக்கையை எட்ட முடியும் என்பதால், அதற்கான சந்தர்ப்பமும் ஏதுவான வேலைத்திட்டமும் எம்மிடம் காணப்படுவதால் பாராளுமன்ற பெரும்பான்மையை ஐக்கிய மக்கள் சக்திக்கு வழங்குமாறு சஜித் பிரேமதாச வேண்டுகோள் விடுத்தார். 
 
இன்று, வரிசையில் நிற்கும் காலம் மீண்டும் உருவாக்கப்பட்டுள்ளது. பொருட்களின் விலை அதிகரித்து, பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்ப்பட்டு, தேங்காய்க்கும் கூட தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளன. மக்கள் மத்தியில் அதிருப்தியின் அழுத்தம் அதிகரித்துள்ளது. இந்த பாதையை வெற்றிப் பாதையாக மாற்றியமைக்க ஐக்கிய மக்கள் சக்தி தயாராக இருக்கிறது என்று சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
 
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

அநுரவின் தேர்தல் வாக்குறுதிகள் புஸ்வாணமாகி விட்டன! - சஜித் பிரேமதாச | Tamil Leader | We Lead the Nation