Tamil Leader News
முக்கியம்
தேசியப் பூங்காக்களில் பிகினி பிடிப்பு: சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் பாரிய இடைவெளி!●காவன்திஸ்ஸ துயரம்: யானையின் வயிற்றில் ஈயக் குண்டுகள்; விசாரணைகள் CID வசம்!●வீட்டுவசதி நெருக்கடியால் 14 ஆண்டுகளுக்குப் பின் ஸ்பெயினில் மாபெரும் பொது வேலைநிறுத்தம்!●நாடு திரும்புகிறார் அனோஜன் சிவராசா; சவூதியில் மரண தண்டனையிலிருந்து  பூரண விடுதலை!●1990 சுவசரிய சேவைக்கு இந்தியாவிலிருந்து மேலும் 100 நோயாளர் காவு வண்டிகள்; வருகை நேரம் 10 நிமிடங்களாகக் குறைகிறது!●நிதித்துறையில் எழுந்துள்ள புதிய அபாயங்கள் குறித்து மத்திய வங்கியிடமிருந்து விசேட எச்சரிக்கை!●6 மாதங்களில் 271 மில்லியன் நட்டம்: அரச ஊடகங்களுக்கு என்ன நேர்ந்தது?●DIGInote: 2027 வரவு-செலவுத் திட்டம் இன்று நாடாளுமன்றத்தில் - மூலதனச் செலவு 2 ட்ரில்லியன்!●2027 வரவு செலவுத் திட்டம்: இலக்கங்களின் ஸ்திரத்தன்மை மக்களின் பாக்கெட்டுக்குத் தெரியுமா?●இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●
செய்திகள்

உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான விசேட அறிவித்தல்!

T

The Leader Desk

அக்டோபர் 30, 2024 • 6:23 AM

உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான விசேட  அறிவித்தல்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • கடந்த மார்ச் மாதம் பரீட்சை நடைபெறும் திகதி தீர்மானிக்கப்பட்டதாகத் தெரிவித்த பரீட்சை ஆணையாளர், உயர்தரப் பரீட்சை தொடர்பில் சமூக வலைத்தளங்கள் ஊடாகப் பல தவறான செய்திகள் வெளியாவதாகவும் குறிப்பிட்டார்.
  • பரீட்சை திணைக்களத்தின் உத்தியோகபூர்வ அறிவிப்புகளை மாத்திரம் எப்போதும் நம்புமாறும், சமூக வலைத்தளங்கள் ஊடாக வெளியிடப்படும் செய்திகளுக்கு ஏமாற வேண்டாம் என்றும் பரீட்சை ஆணையாளர் மாணவர்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.
  • கடந்த காலங்களில் நாடு எதிர்கொண்ட பல்வேறு நெருக்கடிகள் காரணமாக மிகவும் சீரற்ற முறையில் பரீட்சைகளை நடாத்த வேண்டிய நிலை ஏற்பட்டதாகத் தெரிவித்த பரீட்சைகள் ஆணையாளர், 2025ஆம் ஆண்டின் இறுதியில் பரீட்சைகளை முறையாக நடத்த முடியும் என எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.
எழுத்து அளவு:

அட்டவணையை பரீட்சை திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திலிருந்து மாத்திரம் பதிவிறக்கம் செய்யுமாறு பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர உயர்தரப் பரீட்சார்த்திகளுக்கு அறிவித்துள்ளார். 

இது தொடர்பில் இன்றைய (30) விசேட செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்ட பரீட்சைகள் ஆணையாளர் 2024 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சையை நவம்பர் 25 ஆம் திகதி முதல் டிசம்பர் 20 ஆம் திகதி வரை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருப்பதாக தெரிவித்தார்.
 
கடந்த மார்ச் மாதம் பரீட்சை நடைபெறும் திகதி தீர்மானிக்கப்பட்டதாகத் தெரிவித்த பரீட்சை ஆணையாளர், உயர்தரப் பரீட்சை தொடர்பில் சமூக வலைத்தளங்கள் ஊடாகப் பல தவறான செய்திகள் வெளியாவதாகவும் குறிப்பிட்டார்.
 
இதனையடுத்து உயர்தரப் பரீட்சை நடைபெறும் திகதி தொடர்பில் மாணவர்கள் மத்தியில் நிச்சயமற்ற தன்மை காணப்பட்ட நிலையில் அதனை சரி செய்வதற்காக ஊடகவியலாளர் சந்திப்பை நடத்த தீர்மானிக்கப்பட்டது.
 
பரீட்சை திணைக்களத்தின் உத்தியோகபூர்வ அறிவிப்புகளை மாத்திரம் எப்போதும் நம்புமாறும், சமூக வலைத்தளங்கள் ஊடாக வெளியிடப்படும் செய்திகளுக்கு ஏமாற வேண்டாம் என்றும் பரீட்சை ஆணையாளர் மாணவர்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.
 
அதன்படி, உயர்தரப் பரீட்சைக்கான அனுமதி அட்டைகள் மிக விரைவில் பரீட்சார்த்திகளிடம் கையளிக்கப்படவுள்ளன என்றார் 
 
இதற்கிடையில், பல மாணவர்களிடமிருந்து பரீட்சைகளை ஒத்திவைக்குமாறு தனக்கும் பல்வேறு நிறுவனங்களுக்கும் கோரிக்கைகள் வந்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் தெரிவித்தார்.
 
கடந்த காலங்களில் நாடு எதிர்கொண்ட பல்வேறு நெருக்கடிகள் காரணமாக மிகவும் சீரற்ற முறையில் பரீட்சைகளை நடாத்த வேண்டிய நிலை ஏற்பட்டதாகத் தெரிவித்த பரீட்சைகள் ஆணையாளர், 2025ஆம் ஆண்டின் இறுதியில் பரீட்சைகளை முறையாக நடத்த முடியும் என எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.
 
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...