Tamil Leader News
முக்கியம்
தேசியப் பூங்காக்களில் பிகினி பிடிப்பு: சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் பாரிய இடைவெளி!●காவன்திஸ்ஸ துயரம்: யானையின் வயிற்றில் ஈயக் குண்டுகள்; விசாரணைகள் CID வசம்!●வீட்டுவசதி நெருக்கடியால் 14 ஆண்டுகளுக்குப் பின் ஸ்பெயினில் மாபெரும் பொது வேலைநிறுத்தம்!●நாடு திரும்புகிறார் அனோஜன் சிவராசா; சவூதியில் மரண தண்டனையிலிருந்து  பூரண விடுதலை!●1990 சுவசரிய சேவைக்கு இந்தியாவிலிருந்து மேலும் 100 நோயாளர் காவு வண்டிகள்; வருகை நேரம் 10 நிமிடங்களாகக் குறைகிறது!●நிதித்துறையில் எழுந்துள்ள புதிய அபாயங்கள் குறித்து மத்திய வங்கியிடமிருந்து விசேட எச்சரிக்கை!●6 மாதங்களில் 271 மில்லியன் நட்டம்: அரச ஊடகங்களுக்கு என்ன நேர்ந்தது?●DIGInote: 2027 வரவு-செலவுத் திட்டம் இன்று நாடாளுமன்றத்தில் - மூலதனச் செலவு 2 ட்ரில்லியன்!●2027 வரவு செலவுத் திட்டம்: இலக்கங்களின் ஸ்திரத்தன்மை மக்களின் பாக்கெட்டுக்குத் தெரியுமா?●இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●
செய்திகள்

கல்முனை மாநகர சபைக்கு எதிராக மேல் நீதிமன்றில் வழக்குத் தாக்கல்!

T

The Leader Desk

அக்டோபர் 30, 2024 • 4:28 AM

கல்முனை மாநகர சபைக்கு எதிராக மேல் நீதிமன்றில் வழக்குத் தாக்கல்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • மனித உரிமை மீறல் வழக்கினை இலங்கை நீதிக்கான மய்யம் கல்முனை மேல் நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (29) தாக்கல் செய்துள்ளதாக நீதிக்கான மய்யத்தின் தலைவர் சட்டமுதுமாணி ஷஃபி எச்.
  • மாநகர சபை கட்டளைச் சட்டத்தின் 46 மற்றும் 47 ஆவது பிரிவின்படி, வீதிகளை நிர்மாணிப்பதும் பராமரிப்பதும் மாநகர சபையின் அடிப்படைப் பொறுப்பு களாகும்.
  • இந்த அடிப்படை கடமைகளை நிறைவேற்றத் தவறுவது, மாநகர சபையின் சேவைத் தன்மையை கடுமையான கேள்விக்குட்படுத்துகிறது.
எழுத்து அளவு:
மனித உரிமை மீறல் வழக்கினை இலங்கை நீதிக்கான மய்யம் கல்முனை மேல் நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (29)   தாக்கல் செய்துள்ளதாக நீதிக்கான மய்யத்தின் தலைவர் சட்டமுதுமாணி ஷஃபி எச். இஸ்மாயில் தெரிவித்தார்.
 
இது தொடர்பில் அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,
 
கல்முனை மாநகர சபை பகுதியில் புதிய நீர் இணைப்புக்காக மாநகர சபையின் அனுமதி பெற்று தோண்டப்பட்டுள்ள கொங்கிரீட் வீதிகள் இன்னும் செப்பனிடப்படாததால் மக்கள் பல்வேறு அசெளகரியங்களுக்குள்ளாகி வருகின்றமையை எமது மய்யம் சுட்டிக்காட்டி நடவடிக்கை எடுக்குமாறு கல்முனை மாநகர சபை ஆணையாளருக்கு கோரிக்கை கடிதம் ஒன்றை அனுப்பி வைத்திருந்தது.
 
இதற்கு கல்முனை மாநகர சபை நிர்வாகத்தினரால் பொறுப்பற்ற கண்துடைப்பான பதில் எமக்கு வழங்கப்பட்டது. இதனை எமது மய்யம் ஏற்றுக் கொள்ளாததால் இன்று மாநகர சபைக்கு எதிராக இவ்வழக்கை தாக்கல் செய்துள்ளோம்.
 
இவ்வழக்குக்கு மய்யத்தின் பொதுச் செயலாளர் கலாநிதி றியாத் ஏ.மஜீத், பிரதித் தலைவர் யூ.கே.எம்.றின்சான் ஆகியோரும் ஆஜராகியிருந்தனர்.
 
புதிய நீர் மின் இணைப்பை பெறும் விண்ணப்பதாரர்கள் கல்முனை மாநகர சபைக்கு ஏற்கனவே புதிய நீர் இணைப்புக்காக தோண்டப்படும் வீதியை செப்பனிடுவதற்கான கட்டணத்தை செலுத்திய பின்னரே நீர் இணைப்புக்காக அனுமதியை பெற்றுக் கொள்கின்றனர். 
 
ஆனால் கல்முனை மாநகர சபை ஆட.புல எல்லைக்குள் நீர் இணைப்பு வேலைகள் முடிவடைந்த பின்னரும் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் தோண்டப்பட்ட வீதிகள் மாநகர சபையினால் செப்பனிடப்படாமல் நெடுங்காலமாக காணப்படுகிறது.
 
இது மாநகர சபை கட்டளை சட்டத்தை மீறும் ஒரு செயற்பாடாகும். மாநகர சபை கட்டளைச் சட்டத்தின் 46 மற்றும் 47 ஆவது பிரிவின்படி, வீதிகளை நிர்மாணிப்பதும் பராமரிப்பதும் மாநகர சபையின் அடிப்படைப் பொறுப்பு களாகும். இந்த அடிப்படை கடமைகளை நிறைவேற்றத் தவறுவது, மாநகர சபையின் சேவைத் தன்மையை கடுமையான கேள்விக்குட்படுத்துகிறது.
 
ஒரு குறிப்பிட்ட சேவையை வழங்கவென நிதி அறவிடப்பட்டு பின்னர் சேவையை வழங்காதிருப்பது ஒரு நிதி மோசடியாகும். மக்களிடம் அறவிடப்பட்ட நிதிக்கு என்ன நடந்துள்ளது? என சந்தேகம் எழுகின்றது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
 
நீதிக்கான மய்யம் மாநகர சபை ஆணையாளருக்கு அனுப்பி வைத்த கடிதத்தில் தோண்டப்பட்ட வீதிகளை செப்பனிடும் பணியை ஆரம்பிக்குமாறு வேண்டுகோள் விடுத்ததோடு, மாநகர சபை நடவடிக்கை எடுக்காது போனால் மாநகர சபைக்கு எதிராக ஒரு சட்ட நடவடிக்கை எடுப்போம் என்று அன்றே தெரிவித்திருந்தோம்.
 
அரசு நிறுவனம் ஒன்றுக்கு மாகாண மேல் நீதிமன்றத்தில் மனித உரிமை மீறல் வழக்கு தாக்கல் செய்யப் பட்டுள்ளதானது இதுவே வரலாற்றில் முதற்தடவையாகும்
 
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...