Tamil Leader News
முக்கியம்
தேசியப் பூங்காக்களில் பிகினி பிடிப்பு: சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் பாரிய இடைவெளி!●காவன்திஸ்ஸ துயரம்: யானையின் வயிற்றில் ஈயக் குண்டுகள்; விசாரணைகள் CID வசம்!●வீட்டுவசதி நெருக்கடியால் 14 ஆண்டுகளுக்குப் பின் ஸ்பெயினில் மாபெரும் பொது வேலைநிறுத்தம்!●நாடு திரும்புகிறார் அனோஜன் சிவராசா; சவூதியில் மரண தண்டனையிலிருந்து  பூரண விடுதலை!●1990 சுவசரிய சேவைக்கு இந்தியாவிலிருந்து மேலும் 100 நோயாளர் காவு வண்டிகள்; வருகை நேரம் 10 நிமிடங்களாகக் குறைகிறது!●நிதித்துறையில் எழுந்துள்ள புதிய அபாயங்கள் குறித்து மத்திய வங்கியிடமிருந்து விசேட எச்சரிக்கை!●6 மாதங்களில் 271 மில்லியன் நட்டம்: அரச ஊடகங்களுக்கு என்ன நேர்ந்தது?●DIGInote: 2027 வரவு-செலவுத் திட்டம் இன்று நாடாளுமன்றத்தில் - மூலதனச் செலவு 2 ட்ரில்லியன்!●2027 வரவு செலவுத் திட்டம்: இலக்கங்களின் ஸ்திரத்தன்மை மக்களின் பாக்கெட்டுக்குத் தெரியுமா?●இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●
செய்திகள்

விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி; கைதான தந்தை, மகன் தொடர்பில் வெளியான தகவல்கள்!

T

The Leader Desk

அக்டோபர் 30, 2024 • 3:51 AM

விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி; கைதான தந்தை, மகன் தொடர்பில் வெளியான தகவல்கள்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • விமான நிலையத்தில் குண்டுத் தாக்குதல் நடத்தப்படும் என பொய்யான தகவலை வழங்கிய சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் இருவரை நீர்கொழும்பு பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
  • வாரியபொல பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய நபரும் அவரது தந்தையும் கைது செய்யப்பட்டுள்ளதாக நீர்கொழும்பு பிரிவின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
  • அண்மையில் (27) கட்டுநாயக்க பண்டாரநாயக்க விமான நிலையத்துக்கு தொலைபேசி மூலம் அழைப்பு விடுக்கப்பட்டதுடன், விமான நிலையத்தில் வெடிகுண்டு வெடிக்கும் என விமான நிறுவனத்தின் முகாமையாளருக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • விசாரணையில், அது பொய்யானது என்றும், வெடிகுண்டு பீதியை ஏற்படுத்தியதும் தெரிய வந்தது.
எழுத்து அளவு:

விமான நிலையத்தில் குண்டுத் தாக்குதல் நடத்தப்படும் என பொய்யான தகவலை வழங்கிய சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் இருவரை நீர்கொழும்பு பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.

வாரியபொல பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய நபரும் அவரது தந்தையும் கைது செய்யப்பட்டுள்ளதாக நீர்கொழும்பு பிரிவின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
 
30 வயதுடைய சந்தேக நபர் மனநோயால் பாதிக்கப்பட்டவர். அவரது தந்தை இந்திய திரைப்படங்களைப் பார்த்து ஈர்க்கப்பட்டதாகவும் பொலிஸ் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
 
அண்மையில் (27) கட்டுநாயக்க பண்டாரநாயக்க விமான நிலையத்துக்கு தொலைபேசி மூலம் அழைப்பு விடுக்கப்பட்டதுடன், விமான நிலையத்தில் வெடிகுண்டு வெடிக்கும் என விமான நிறுவனத்தின் முகாமையாளருக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
விசாரணையில், அது பொய்யானது என்றும், வெடிகுண்டு  பீதியை ஏற்படுத்தியதும் தெரிய வந்தது.
 
எவ்வாறாயினும், அழைப்பை வழங்கிய நபரைக் கண்டுபிடிக்க நடத்தப்பட்ட  விசாரணைகளின்படி, சந்தேகத்தின் பேரில் தந்தை மற்றும் மகன் கைது செய்யப்பட்டுள்ளனர். குழப்பத்தை ஏற்படுத்தி வேடிக்கை பார்க்கும் நோக்கில் இதனைச் செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
 
எவ்வாறாயினும், 30 வயதுடைய சந்தேக நபர் சில மனநலக் கோளாறுகளால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் எனினும் மேலதிக விசாரணைகளுக்காக மனநல மருத்துவரிடம் பரிந்துரைக்கப்படவுள்ளதாக நீர்கொழும்பு பொலிஸார் தெரிவித்தனர்.
 
நீர்கொழும்பு பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் எரிக் பெரேராவின் பணிப்புரையின் பேரில், நீர்கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...