Tamil Leader News
முக்கியம்
தேசியப் பூங்காக்களில் பிகினி பிடிப்பு: சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் பாரிய இடைவெளி!●காவன்திஸ்ஸ துயரம்: யானையின் வயிற்றில் ஈயக் குண்டுகள்; விசாரணைகள் CID வசம்!●வீட்டுவசதி நெருக்கடியால் 14 ஆண்டுகளுக்குப் பின் ஸ்பெயினில் மாபெரும் பொது வேலைநிறுத்தம்!●நாடு திரும்புகிறார் அனோஜன் சிவராசா; சவூதியில் மரண தண்டனையிலிருந்து  பூரண விடுதலை!●1990 சுவசரிய சேவைக்கு இந்தியாவிலிருந்து மேலும் 100 நோயாளர் காவு வண்டிகள்; வருகை நேரம் 10 நிமிடங்களாகக் குறைகிறது!●நிதித்துறையில் எழுந்துள்ள புதிய அபாயங்கள் குறித்து மத்திய வங்கியிடமிருந்து விசேட எச்சரிக்கை!●6 மாதங்களில் 271 மில்லியன் நட்டம்: அரச ஊடகங்களுக்கு என்ன நேர்ந்தது?●DIGInote: 2027 வரவு-செலவுத் திட்டம் இன்று நாடாளுமன்றத்தில் - மூலதனச் செலவு 2 ட்ரில்லியன்!●2027 வரவு செலவுத் திட்டம்: இலக்கங்களின் ஸ்திரத்தன்மை மக்களின் பாக்கெட்டுக்குத் தெரியுமா?●இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●
செய்திகள்

இந்த நாட்டில் அதிகம் பொய் கூறும் நம்பிக்கையீனமான ஓர் அரசியல்வாதி என்றால் அது ஹிஸ்புல்லாஹ்தான்! - அமீர் அலி

T

The Leader Desk

அக்டோபர் 29, 2024 • 1:40 PM

இந்த நாட்டில் அதிகம் பொய் கூறும் நம்பிக்கையீனமான ஓர் அரசியல்வாதி என்றால் அது ஹிஸ்புல்லாஹ்தான்! - அமீர் அலி

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • கூட்டணியில் தேர்தல் கேட்க வேண்டும் என்று கடும் பிரயத்தனத்தை எடுத்துக் கொண்டார்.
  • அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், மட்டக்களப்பு மாவட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் துடித்தாலும் 22,000க்கு மேற்பட்ட வாக்குகளை பெற முடியாது.
  • அவராலே பாராளுமன்றம் செல்ல முடியாத நிலை உள்ளபோது அவரது கட்சியிலிருந்து அவருடன் இன்னொருவரையும் பாராளுமன்றம் செல்லும் வாய்ப்பு இருப்பதாக கணக்குக் காட்டுகின்ற விடயம் அவர் மக்களை முட்டாளாக்கப் பார்க்கிறாரா?
எழுத்து அளவு:
கூட்டணியில் தேர்தல் கேட்க வேண்டும் என்று கடும் பிரயத்தனத்தை எடுத்துக் கொண்டார்.
 
தான் முஸ்லிம் காங்கிரஸில் போட்டியிட்டால் தோற்றுப்போய் விடுவேன் என்று ஒப்பாரி வைத்துத் திரிந்த ஹிஸ்புல்லாஹ் தற்போது பொய்க் கணக்குகளை கூறி, தான் வெற்றி பெறப் போவதாக சொல்லித் திரிகிறார் என்று ஐக்கிய மக்கள் கூட்டணியின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர் எம்.எம்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.
 
அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
 
மட்டக்களப்பு மாவட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் துடித்தாலும் 22,000க்கு மேற்பட்ட வாக்குகளை பெற முடியாது.
 
ஹிஸ்புல்லாஹ்வின் சாம்ராஜ்யம் காத்தான்குடியில் சரிந்து விட்டது. அது இந்த மாவட்டத்தில் இருக்கும் எல்லோருக்கும் தெரிவும்.
 
கல்குடாவில் ஒரு பிரதான வேட்பாளரை களமிறக்கிவிட்டு அவரையும் சேர்த்துக் கொண்டு அவருக்கும் வாக்குச் சேர்க்கின்றேன் என்ற போர்வையில் ஹிஸ்புல்லாஹ் வீடு,வீடாக, வீதி,வீதியாக திரிகின்றார்.
 
ஹிஸ்புல்லாஹ்வைப் பற்றி நான் சொல்லத் தேவையில்லை அவரது கட்சித் தலைவர் சொல்லி இருக்கிறார் அவர் ஒரு உலகப் புகழ்பூத்த அண்டப்புளுகன் என்று.
 
அவராலே பாராளுமன்றம் செல்ல முடியாத நிலை உள்ளபோது அவரது கட்சியிலிருந்து அவருடன் இன்னொருவரையும் பாராளுமன்றம் செல்லும் வாய்ப்பு இருப்பதாக கணக்குக் காட்டுகின்ற விடயம் அவர் மக்களை முட்டாளாக்கப் பார்க்கிறாரா? இல்லை அவர் இன்னும் பொய், புரட்டு சொல்லுவதிலிருந்து திருந்திக் கொள்ளவில்லையா? எனும் கேள்வி என்னிடத்தில் இருக்கிறது.
 
அவர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இணைந்ததே இலகுவில் எம்.பி ஆக வேண்டும் என்பதற்காகவே. ஆனால் துரதிஷ்டவசமாக அலிசாஹிர் மௌலானா இல்லாமல் போனதன் பின்னர் அவருக்கு உளறல் எடுத்துவிட்டது.
 
இந்த நாட்டில் அதிகம் பொய் சொல்லும் நம்பிக்கையீனமான ஒரு அரசியல்வாதி என்றால் அது ஹிஸ்புல்லாஹ்தான் என்று அமீர் அலி தெரிவித்தார்.
 
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...