Tamil Leader News
முக்கியம்
தேசியப் பூங்காக்களில் பிகினி பிடிப்பு: சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் பாரிய இடைவெளி!●காவன்திஸ்ஸ துயரம்: யானையின் வயிற்றில் ஈயக் குண்டுகள்; விசாரணைகள் CID வசம்!●வீட்டுவசதி நெருக்கடியால் 14 ஆண்டுகளுக்குப் பின் ஸ்பெயினில் மாபெரும் பொது வேலைநிறுத்தம்!●நாடு திரும்புகிறார் அனோஜன் சிவராசா; சவூதியில் மரண தண்டனையிலிருந்து  பூரண விடுதலை!●1990 சுவசரிய சேவைக்கு இந்தியாவிலிருந்து மேலும் 100 நோயாளர் காவு வண்டிகள்; வருகை நேரம் 10 நிமிடங்களாகக் குறைகிறது!●நிதித்துறையில் எழுந்துள்ள புதிய அபாயங்கள் குறித்து மத்திய வங்கியிடமிருந்து விசேட எச்சரிக்கை!●6 மாதங்களில் 271 மில்லியன் நட்டம்: அரச ஊடகங்களுக்கு என்ன நேர்ந்தது?●DIGInote: 2027 வரவு-செலவுத் திட்டம் இன்று நாடாளுமன்றத்தில் - மூலதனச் செலவு 2 ட்ரில்லியன்!●2027 வரவு செலவுத் திட்டம்: இலக்கங்களின் ஸ்திரத்தன்மை மக்களின் பாக்கெட்டுக்குத் தெரியுமா?●இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●
செய்திகள்

அரச ஊழியர்களின் சம்பள உயர்வு தொடர்பில் வெளியான தகவல்!

T

The Leader Desk

அக்டோபர் 29, 2024 • 8:39 AM

அரச ஊழியர்களின் சம்பள உயர்வு தொடர்பில் வெளியான தகவல்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • அதிகரிப்பதற்கு நிதி ஒதுக்கப்படவில்லை என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
  • இன்று (29) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்ட அமைச்சர், கடந்த அரசாங்கம் இந்த விடயத்தில் பணம் உள்ளதா என்பதை கூட அவதானிக்கவில்லை என தெரிவித்தார்.
  • அதாவது ஜனவரி மாதம் முதல் அரச ஊழியர்களின் சம்பளத்தை 10,000 ரூபாவினால் அதிகரிக்க அரசாங்கம் தீர்மானம் எடுத்துள்ளது.
  • ஏப்ரல் வரையிலான நிலுவைத் தொகை அக்டோபர் மாதம் முதல் வழங்கப்படும் என்றனர். நிலுவைத் தொகையை வழங்குவது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.
எழுத்து அளவு:

அதிகரிப்பதற்கு நிதி ஒதுக்கப்படவில்லை என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

இன்று (29) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்ட அமைச்சர், கடந்த அரசாங்கம் இந்த விடயத்தில் பணம் உள்ளதா என்பதை கூட அவதானிக்கவில்லை என தெரிவித்தார்.
 
ஜனவரி மாதம் முதல் உதய ஆர்.செனவிரத்னவின் குழு அறிக்கையின்படி சம்பளத்தை அதிகரிப்பதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. பணம் கிடைக்கிறதா இல்லையா என்பதைக் கூட அவர்கள் கவனிக்கவில்லை. அமைச்சரவையில் முடிவெடுக்க முடியும் ஆனால் அதனை நடைமுறைப்படுத்த வேண்டுமே. .
 
அதாவது ஜனவரி மாதம் முதல் அரச ஊழியர்களின் சம்பளத்தை 10,000 ரூபாவினால் அதிகரிக்க அரசாங்கம் தீர்மானம் எடுத்துள்ளது. ஏப்ரல் வரையிலான நிலுவைத் தொகை அக்டோபர் மாதம் முதல் வழங்கப்படும் என்றனர். 
 
நிலுவைத் தொகையை வழங்குவது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. இதற்கிடையில், 2024 ஆம் ஆண்டு வரவு - செலவுத் திட்ட முன்மொழிவுகளின்படி, பொது சேவை வாழ்க்கைச் செலவு கொடுப்பனவுகள் மற்றும் விதவை மற்றும் அனாதை ஓய்வூதிய பங்களிப்புகளை சேகரிப்பதில் திருத்தம் செய்து ஜனவரி 10, 2024 அன்று ஒரு சுற்றறிக்கை வெளியிடப்பட்டது.
 
ஜனவரி முதல் மார்ச் 2025 வரை மாதத்துக்கு 5000 ரூபா வீதம் 2024 ஜனவரி முதல் மார்ச் வரையிலான வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவு நிலுவைத் தொகையை வழங்குவது என்பது சுற்றறிக்கையில் தெளிவாக உள்ளது.
 
அப்போது நாட்டுக்கு ஒரு அப்பட்டமான பொய் கூறப்பட்டது. உங்களை ஒருபோதும் ஏமாற்ற மாட்டோம், எனவே, 2025ஆம் ஆண்டு முதல் அரச சேவைக்கு சம்பள உயர்வு வழங்கப்படும், அதற்கான உத்தரவாதத்தை வழங்குவோம் என அரச ஊழியர்களிடம் தெளிவாக கூறுகிறோம். திகதியை எம்மால் கூற முடியாது என்றார்.
 
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...