Tamil Leader News
முக்கியம்
தேசியப் பூங்காக்களில் பிகினி பிடிப்பு: சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் பாரிய இடைவெளி!●காவன்திஸ்ஸ துயரம்: யானையின் வயிற்றில் ஈயக் குண்டுகள்; விசாரணைகள் CID வசம்!●வீட்டுவசதி நெருக்கடியால் 14 ஆண்டுகளுக்குப் பின் ஸ்பெயினில் மாபெரும் பொது வேலைநிறுத்தம்!●நாடு திரும்புகிறார் அனோஜன் சிவராசா; சவூதியில் மரண தண்டனையிலிருந்து  பூரண விடுதலை!●1990 சுவசரிய சேவைக்கு இந்தியாவிலிருந்து மேலும் 100 நோயாளர் காவு வண்டிகள்; வருகை நேரம் 10 நிமிடங்களாகக் குறைகிறது!●நிதித்துறையில் எழுந்துள்ள புதிய அபாயங்கள் குறித்து மத்திய வங்கியிடமிருந்து விசேட எச்சரிக்கை!●6 மாதங்களில் 271 மில்லியன் நட்டம்: அரச ஊடகங்களுக்கு என்ன நேர்ந்தது?●DIGInote: 2027 வரவு-செலவுத் திட்டம் இன்று நாடாளுமன்றத்தில் - மூலதனச் செலவு 2 ட்ரில்லியன்!●2027 வரவு செலவுத் திட்டம்: இலக்கங்களின் ஸ்திரத்தன்மை மக்களின் பாக்கெட்டுக்குத் தெரியுமா?●இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●
செய்திகள்

சில அரசியல்வாதிகள் தொடர்பில் சிலாகித்த ஜனாதிபதி அநுரகுமார!

T

The Leader Desk

அக்டோபர் 28, 2024 • 2:08 PM

சில அரசியல்வாதிகள் தொடர்பில் சிலாகித்த ஜனாதிபதி அநுரகுமார!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • கூறுவதற்கு விடயங்கள் இல்லாதவர்கள் பழைய கதைகளையே மீண்டும் கூறத்தொடங்கியுள்ளனர்.
  • பாராளுமன்றத்திற்குள் பிரவேசிக்கிறவர்களை நன்றாக பரிசோதிக்கிறார்கள்.
  • புதியவர்களுக்கு அனுபவம் கிடையாதெனவும், பழக்கப்பட்டவர்களையே அனுப்பிவைக்குமாறும் அவர்கள் கூறுகிறார்கள்.
எழுத்து அளவு:

கூறுவதற்கு விடயங்கள் இல்லாதவர்கள் பழைய கதைகளையே மீண்டும் கூறத்தொடங்கியுள்ளனர்.

புதியவர்களுக்கு அனுபவம் கிடையாதெனவும், பழக்கப்பட்டவர்களையே அனுப்பிவைக்குமாறும் அவர்கள் கூறுகிறார்கள். இவர்கள் கூறுகின்ற பழையவர்கள் திருட்டுகளுக்கு பழக்கப்பட்ட, சட்டத்தை முற்றாகவே மதிக்காமல் செயலாற்றுபவர்கள் என்பது ஏற்கெனவே அம்பலமாகி உள்ளது என காலியில் இடம்பெற்ற கூட்டத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.
 
தொடர்ந்து உரையாற்றிய அவர்,
 
சாதாரண மனிதர் ஒருவரின் வாகன இலக்கத்தகடு வீழ்ந்திருந்தால், வீதியில் மிகவும் விழிப்புடன் கவனமாகவே பயணிப்பார்கள். ஆனால் அரசியல்வாதிகள் இங்கிலாந்தில் இருந்து கள்ளத்தனமாக கொண்டுவந்து திருட்டு இலக்கத் தகடுகளுடன் வாகனங்கள் செலுத்திநமை அம்பலமாகி உள்ளது. 
 
அதைப்போலவே கோடிக்கணக்கான  பெறுமதி வாய்ந்த வாகனங்களை இனந்தெரியாதவர்கள் கொண்டு வந்து முற்றத்தில் வைத்து விட்டுச் செல்வது இடம்பெற்று வருகிறது.  அவர்கள் இதுவரை சட்டத்துடன் தொடர்பு இல்லாதவர்களைப் போன்றே இவர்கள் செயற்பட்டுள்ளார்கள்.
 
பொதுமக்கள் வாகனங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும். ஆனால் அவர்களுக்கோ கள்ளத்தனமாக ஓட்டுவதற்கான ஆற்றல் இருக்கின்றது.  அவர்கள் தற்போது மேடைகளில் கூறுகின்ற அனுபவம் அதுபோன்ற விடயங்களாகவே உள்ளன.
 
குற்றச் செயல்களைப் புரிந்து தலைமறைவாக இருப்பதற்கான, திருடி தப்பித்துக் கொள்வதற்கான, பொதுமக்களுக்கு மேலானவர்களாக இருப்பதற்கான அனுபவம் அவர்களிடம் உள்ளது.  
 
இப்படிப்பட்டவர்கள் இருந்த பாராளுமன்றத்தையே மக்கள் வெறுக்கிறார்கள். பாராளுமன்றத்திற்குள் பிரவேசிக்கிறவர்களை நன்றாக பரிசோதிக்கிறார்கள். ஆனால் கள்ளத்தனமாக கத்திகள், மிளகாய்த்தூள் கொண்டுவர முடியும்.  பாராளுமன்றத்தில் கதிரைகளைத் தூக்கி அடிக்கலாம். மக்களுக்கெதிரான சட்டங்களுக்காக கைகளை உயர்த்தலாம். 
 
இவ்வாறான செயல்களுக்கே அவர்கள் பழகி இருக்கிறார்கள். சட்டத்துக்கு மேலாக இருந்துகொண்டு, பொதுப்பணத்தைக் கோடிக்கணக்கில் மோசடி செய்யவும் மக்களைவிட அதிகமான சிறப்புரிமைகளை அனுபவிக்கவும் அவர்கள் அனுபவம் பெற்றிருக்கிறார்கள்.
 
அத்தகைய பழக்கங்களைக் கொண்டுள்ளவர்களை மக்கள் அறவே வெறுத்திருக்கிறார்கள்.  பழக்கப்பட்டவர்களை பாராளுமன்றம் அனுப்பி வைக்குமாறு முன்னாள் ஜனாதிபதி இன்றும் கூறியிருக்கிறார். நல்லவர்களால் பாராளுமன்றத்தை நிரப்புமாறே  நாங்கள் கூறுகிறோம்.  
 
தேசிய மக்கள்  சக்தியின் சார்பாக முன்வந்துள்ளவர்கள் பாராளுமன்றத்திற்கு புதியவர்களாக இருந்தபோதிலும் அரசியலுக்கு புதியவர்கள் அல்ல. எந்தவொரு நேரத்திலும்  நாடு அனர்த்தமொன்றை சந்திக்க நேரிட்டால் அதற்காக முன்னிற்பவர்கள். மக்களின் பணத்தை திருடியதற்கு எதிராக குரலெழுப்பியவர்களே இருக்கிறார்கள். 
 
இந்த நாட்டின் வளங்கள் விற்பனை செய்யப்படுவதற்கு எதிராக அவற்றை பாதுகாத்துக் கொள்வதற்காக எந்தவொரு தருணத்திலும் முன்வந்தவர்களே இருக்கிறார்கள்.  இந்த நாட்டில் எங்கேயாவது ஓரிடத்தில் அநீதி ஏற்படுமானால் அதனை எதிர்த்து அரசியல் புரிந்தவர்களே என தெரிவித்தார்
 
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

சில அரசியல்வாதிகள் தொடர்பில் சிலாகித்த ஜனாதிபதி அநுரகுமார! | Tamil Leader | We Lead the Nation