Tamil Leader News
முக்கியம்
தேசியப் பூங்காக்களில் பிகினி பிடிப்பு: சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் பாரிய இடைவெளி!●காவன்திஸ்ஸ துயரம்: யானையின் வயிற்றில் ஈயக் குண்டுகள்; விசாரணைகள் CID வசம்!●வீட்டுவசதி நெருக்கடியால் 14 ஆண்டுகளுக்குப் பின் ஸ்பெயினில் மாபெரும் பொது வேலைநிறுத்தம்!●நாடு திரும்புகிறார் அனோஜன் சிவராசா; சவூதியில் மரண தண்டனையிலிருந்து  பூரண விடுதலை!●1990 சுவசரிய சேவைக்கு இந்தியாவிலிருந்து மேலும் 100 நோயாளர் காவு வண்டிகள்; வருகை நேரம் 10 நிமிடங்களாகக் குறைகிறது!●நிதித்துறையில் எழுந்துள்ள புதிய அபாயங்கள் குறித்து மத்திய வங்கியிடமிருந்து விசேட எச்சரிக்கை!●6 மாதங்களில் 271 மில்லியன் நட்டம்: அரச ஊடகங்களுக்கு என்ன நேர்ந்தது?●DIGInote: 2027 வரவு-செலவுத் திட்டம் இன்று நாடாளுமன்றத்தில் - மூலதனச் செலவு 2 ட்ரில்லியன்!●2027 வரவு செலவுத் திட்டம்: இலக்கங்களின் ஸ்திரத்தன்மை மக்களின் பாக்கெட்டுக்குத் தெரியுமா?●இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●
செய்திகள்

எல்பிட்டிய தேர்தல் பின்னடைவு பாராளுமன்ற தேர்தலிலும் ஏற்படும்: இராதாகிருஷ்ணன்!

T

The Leader Desk

அக்டோபர் 28, 2024 • 11:58 AM

எல்பிட்டிய தேர்தல் பின்னடைவு பாராளுமன்ற தேர்தலிலும் ஏற்படும்: இராதாகிருஷ்ணன்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • மக்களிடையே அதிருப்தி ஏற்பட்டிருப்பதை எல்பிட்டிய தேர்தல் முடிவுகள் வெளிகாட்டுகின்றன.
  • ஆனால் ஜனாதிபதி தேர்தல் முடிவடைந்து ஒரு மாதத்தின் பின்பு நடைபெற்ற உள்ளுராட்சி மன்ற தேர்தலில் 50 வீதத்திற்கு அதிகமான வாக்குகளை பெற முடியாமல் இருக்கின்ற ஒரு நிலைமை ஏற்பட்டுள்ளது.
  • ஜனாதிபதி எதிர்கட்சியில் இருந்த போது தான் பதவிக்கு வந்தால் 48 மணித்தியாலயத்தில் பல மாற்றங்கள் செய்வதாக கூறினார்.
  • ஆனால் இப்பொழுது நான் மந்திரவாதியோ, தந்திரவாதியோ இல்லை என கூறுகினார்.
எழுத்து அளவு:

மக்களிடையே அதிருப்தி ஏற்பட்டிருப்பதை எல்பிட்டிய தேர்தல் முடிவுகள் வெளிகாட்டுகின்றன. இதே நிலை பாராளுமன்ற தேர்தலிலும் ஏற்படும் என மலையக மக்கள் முன்னணி தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் இணைத்தலைவரும், ஐக்கிய மக்கள் கூட்டணியின் நுவரெலியா மாவட்ட வேட்பாளருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

பொதுவாக இலங்கை அரசியலில் ஜனாதிபதி தேர்தல் முடிவடைந்து அதில் வெற்றிப்பெறும் ஜனாதிபதி மற்றும் அவருடைய கட்சி அடுத்து வருகின்ற அனைத்து தேர்தல்களிலும் பாரியளவில் வெற்றிப்பெறுவதை நாம் கடந்த காலங்களில் பார்த்திருக்கின்றோம்.

ஆனால் ஜனாதிபதி தேர்தல் முடிவடைந்து ஒரு மாதத்தின் பின்பு நடைபெற்ற உள்ளுராட்சி மன்ற தேர்தலில் 50 வீதத்திற்கு அதிகமான வாக்குகளை பெற முடியாமல் இருக்கின்ற ஒரு நிலைமை ஏற்பட்டுள்ளது.

அதற்கு காரணம் இந்த ஜனாதிபதியின் மீதும், அரசாங்கத்தின் மீதும் அதிருப்தி ஏற்பட்டிருப்பது காட்டுகின்றது.

ஜனாதிபதி எதிர்கட்சியில் இருந்த போது தான் பதவிக்கு வந்தால் 48 மணித்தியாலயத்தில் பல மாற்றங்கள் செய்வதாக கூறினார்.

பல அதிசயங்கள் செய்யக்கூடிய திறமை என்னிடமும் தனது குழுவினரிடமும் இருப்பதாக கூறினார்.

ஆனால் இப்பொழுது நான் மந்திரவாதியோ, தந்திரவாதியோ இல்லை என கூறுகினார். இது தான் உண்மையான நிலைமை பதவிக்கு வருவதற்கு முன்பும் எதிர்கட்சியில் இருந்துக் கொண்டும் எதை வேண்டுமானாலும் பேசலாம். ஆனால் நாட்காலியில் அமர்ந்தவுடன் தான் கூறியதை நடைமுறைப்படுத்துவதில் எவ்வளவு சிக்கல்கள் இருக்கின்றது என்பதை அப்பொழுது தான் புரிந்துக் கொள்ள முடியும்.

எனவே, நிதானமாக சிந்தித்து செய்யக்கூடிய விடயங்களை மாத்திரம் மக்களிடம் கூற வேண்டும்.

அதனையே ஐக்கிய மக்கள் சக்தி தலைவரும், ஏனைய அங்கத்தவர்களும் செய்கின்றார்கள்.

இதனடிப்படையில் நாங்கள் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் பெரும்பான்மை பாராளுமன்ற உறுப்பினர்களின் வெற்றிகளை கொண்டு புதிய அரசாங்கத்தை அமைக்க கூடிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...