Tamil Leader News
முக்கியம்
தேசியப் பூங்காக்களில் பிகினி பிடிப்பு: சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் பாரிய இடைவெளி!●காவன்திஸ்ஸ துயரம்: யானையின் வயிற்றில் ஈயக் குண்டுகள்; விசாரணைகள் CID வசம்!●வீட்டுவசதி நெருக்கடியால் 14 ஆண்டுகளுக்குப் பின் ஸ்பெயினில் மாபெரும் பொது வேலைநிறுத்தம்!●நாடு திரும்புகிறார் அனோஜன் சிவராசா; சவூதியில் மரண தண்டனையிலிருந்து  பூரண விடுதலை!●1990 சுவசரிய சேவைக்கு இந்தியாவிலிருந்து மேலும் 100 நோயாளர் காவு வண்டிகள்; வருகை நேரம் 10 நிமிடங்களாகக் குறைகிறது!●நிதித்துறையில் எழுந்துள்ள புதிய அபாயங்கள் குறித்து மத்திய வங்கியிடமிருந்து விசேட எச்சரிக்கை!●6 மாதங்களில் 271 மில்லியன் நட்டம்: அரச ஊடகங்களுக்கு என்ன நேர்ந்தது?●DIGInote: 2027 வரவு-செலவுத் திட்டம் இன்று நாடாளுமன்றத்தில் - மூலதனச் செலவு 2 ட்ரில்லியன்!●2027 வரவு செலவுத் திட்டம்: இலக்கங்களின் ஸ்திரத்தன்மை மக்களின் பாக்கெட்டுக்குத் தெரியுமா?●இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●
செய்திகள்

தமிழரசுக் கட்சியில் தும்புத் தடியை நிறுத்தினாலும் மக்கள் வாக்களிப்பர் என்ற சிந்தனை மலையேறிவிட்டது! - வைத்தியர் இராஜகுமார் பிரகாஷ்

T

The Leader Desk

அக்டோபர் 28, 2024 • 11:42 AM

தமிழரசுக் கட்சியில் தும்புத் தடியை நிறுத்தினாலும் மக்கள் வாக்களிப்பர் என்ற சிந்தனை மலையேறிவிட்டது! - வைத்தியர்  இராஜகுமார் பிரகாஷ்

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • அகதிகளாக வைத்திருக்க வேண்டாம்.
  • நாங்கள் கடந்த 25 வருடங்களாக மக்களோடு மக்களாக பயணிப்பவர்கள்.
  • எங்களுக்கு ஒரு சந்தர்ப்பத்தை தாருங்கள்.எப்போதும் தமிழரசுக் கட்சியுடன் இணைந்து பயணிக்க தயாராக உள்ளோம்.எமது தமிழ் மக்களை பிழையாக வழிநடத்த வேண்டாம் என்று இரு கரம் கூப்பி எமது அரசியல்வாதிகளிடம் வேண்டுகின்றேன்.
எழுத்து அளவு:
அகதிகளாக வைத்திருக்க வேண்டாம். நினைவேந்தலுக்கு ஒரு விளக்கும் கூட கொளுத்தாதவர்கள் இன்று தேர்தலில் நிற்கிறார்கள்.இலங்கை தமிழரசுக் கட்சியில் தும்புத் தடியை நிறுத்தினாலும் மக்கள் வாக்களிப்பார்கள் என்ற மடைமைத்தனமான சிந்தனை இன்று மலையேறிவிட்டது. இம்முறை தேர்தல் அதற்கு சாட்சி பகரும் என  ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பில் அம்பாறை மாவட்டத்தில் போட்டியிடும் வைத்தியர்  இராஜகுமார் பிரகாஷ் தெரிவித்தார்.
 
அம்பாறை ஊடக மையத்தில் பொதுத்தேர்தல் மற்றும் சமகால அரசியல் தொடர்பில் நடைபெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
 
மேலும் அங்கு கருத்து தெரிவிக்கையில்
 
எங்களை சொந்த நாட்டினுள் அகதிகளாக வைத்திருக்க வேண்டாம்.எங்களுக்கும் இந்த நாட்டில் வாழ்வதற்கு உரிமை உள்ளது.இந்த நாட்டில் நாங்களும் ஏனையோர் போன்று உரிமைகளைப் பெற வேண்டும்.
 
நாங்கள் கடந்த 25 வருடங்களாக மக்களோடு மக்களாக பயணிப்பவர்கள். அரசியலுக்கு நாங்கள் புதிதாக குதித்தவர்கள் அல்லர்.கோடிக்கணக்கில் பணத்தை நாங்கள் செலவழிக்கவில்லை. அதற்கு எம்மிடம் பணமும் இல்லை. எங்களுக்கு ஒரு சந்தர்ப்பத்தை தாருங்கள்.எப்போதும் தமிழரசுக் கட்சியுடன் இணைந்து பயணிக்க தயாராக உள்ளோம்.எமது தமிழ் மக்களை பிழையாக வழிநடத்த வேண்டாம் என்று இரு கரம் கூப்பி எமது அரசியல்வாதிகளிடம் வேண்டுகின்றேன்.
 
தமிழரசுக்கட்சியை நாங்கள் விமர்சிக்க வரவில்லை.அக்கட்சி எமது தாயக கட்சி.தமிழ் தேசிய கொள்கையை எமது உள்ளம் ஏற்று ஏக்கத்துடன் பயணிக்கிறது. அக்கட்சியை ஒரு சில நபர்கள் பிழையாக வழிநடத்துகின்றார்கள். அவர்களது தலைக்கணத்தை உடைப்பதற்கே அணியாக நாங்கள் ஒன்று சேர்ந்துள்ளோம். நாங்கள் காலில் விழாத குறையாத எந்த ஒரு விட்டுக்கொடுப்புடனும் அக்கட்சியுடன் அம்பாறை மாவட்டத்தில் இணைந்து பயணிக்க தயாராகத் தான் இருந்தோம். ஆனால் வீட்டில் ஒரு தும்புத்தடியை நிறுத்தினாலும் வெல்வோம் என்ற மடைமைத்தனமான சிந்தனையை வைத்துக் கொண்டு சிலர் பயணிக்கின்றனர்.
 
தந்தை செல்வநாயகம் விதைத்த தமிழ் தமிழ் தேசியம் இன்னும் எங்களது உள்ளத்தில் ஏக்கத்துடன் காணப்படுகிறது .நாங்கள் அக்கட்சியை விமர்சிக்கவில்லை. ஆனால் அதில் உள்ள ஓரிரு தலைவர்களின் செயற்பாடுகள்தான் இன்று அது இந்தளவு மோசமாக நிலைமைக்கு போனதுக்கு காரணம் என்றார்.
 
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

தமிழரசுக் கட்சியில் தும்புத் தடியை நிறுத்தினாலும் மக்கள் வாக்களிப்பர் என்ற சிந்தனை மலையேறிவிட்டது! - வைத்தியர் இராஜகுமார் பிரகாஷ் | Tamil Leader | We Lead the Nation