Tamil Leader News
முக்கியம்
தேசியப் பூங்காக்களில் பிகினி பிடிப்பு: சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் பாரிய இடைவெளி!●காவன்திஸ்ஸ துயரம்: யானையின் வயிற்றில் ஈயக் குண்டுகள்; விசாரணைகள் CID வசம்!●வீட்டுவசதி நெருக்கடியால் 14 ஆண்டுகளுக்குப் பின் ஸ்பெயினில் மாபெரும் பொது வேலைநிறுத்தம்!●நாடு திரும்புகிறார் அனோஜன் சிவராசா; சவூதியில் மரண தண்டனையிலிருந்து  பூரண விடுதலை!●1990 சுவசரிய சேவைக்கு இந்தியாவிலிருந்து மேலும் 100 நோயாளர் காவு வண்டிகள்; வருகை நேரம் 10 நிமிடங்களாகக் குறைகிறது!●நிதித்துறையில் எழுந்துள்ள புதிய அபாயங்கள் குறித்து மத்திய வங்கியிடமிருந்து விசேட எச்சரிக்கை!●6 மாதங்களில் 271 மில்லியன் நட்டம்: அரச ஊடகங்களுக்கு என்ன நேர்ந்தது?●DIGInote: 2027 வரவு-செலவுத் திட்டம் இன்று நாடாளுமன்றத்தில் - மூலதனச் செலவு 2 ட்ரில்லியன்!●2027 வரவு செலவுத் திட்டம்: இலக்கங்களின் ஸ்திரத்தன்மை மக்களின் பாக்கெட்டுக்குத் தெரியுமா?●இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●
செய்திகள்

தற்போதைய ஜனாதிபதி தனது தேர்தல் வாக்குறுதிகளை கூட மீறியுள்ளார் என சஜித் பிரேமதாச குற்றச்சாட்டு!

T

The Leader Desk

அக்டோபர் 28, 2024 • 11:03 AM

தற்போதைய ஜனாதிபதி தனது தேர்தல் வாக்குறுதிகளை கூட மீறியுள்ளார் என சஜித் பிரேமதாச குற்றச்சாட்டு!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • தமது வாழ்க்கையை நடத்தி வரும் மக்களுக்கு தேர்தலில் வாக்குறுதியளித்தபடி மக்கள் எதிர்கொண்டு வரும் அழுத்தங்களை குறைப்பதாக தற்போதைய ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் உறுதியளித்தது.
  • பொதுத் தேர்தலை இலக்காக் கொண்டு ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு கொழும்பு கொலன்னாவ கட்சி செயற்பாட்டாளர்களுடனான சந்திப்பொன்று ஐக்கிய மக்கள் சக்தியினதும் ஐக்கிய மக்கள் கூட்டணியினதும் தலைவரான சஜித் பிரேமதாச தலைமையில் (27) கொலன்னாவ பிரதேசத்தில் இடம்பெற்றது.
  • இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தற்போது அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதோடு, தேங்காய்களுக்கு வரிசையும் காணப்படுகின்றன.
  • அவ்வாறு இல்லை என்றால் 2028 ஆம் ஆண்டு நாடு மீண்டும் வங்குரோத்து நிலைக்குத் தள்ளப்படும் என சஜித் பிரேமதாச மேலும் தெரிவித்தார்.
எழுத்து அளவு:

தமது வாழ்க்கையை நடத்தி வரும் மக்களுக்கு தேர்தலில் வாக்குறுதியளித்தபடி மக்கள் எதிர்கொண்டு வரும் அழுத்தங்களை குறைப்பதாக தற்போதைய ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் உறுதியளித்தது. என்றாலும் இந்த மாற்றங்களை செய்ய முடியாத ஜே.வி.பிக்கு பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை வழங்காதீர்கள்.

ஐக்கிய மக்கள் சக்திக்கு அந்த பெரும்பான்மை வழங்கப்பட வேண்டும். இது தான் நாட்டிற்கு பொருத்தமான தெரிவாக இருக்கும். ஜனாதிபதி தேர்தல் மேடைகளில் அநுர குமார திஸாநாயக்க கூறியது போல் அதிகாரத்திற்கு வந்தும் நேரடி மற்றும் மறைமுக வரிகளை அவரால் குறைக்க முடியாதுபோயுள்ளது. சர்வதேச நாணய நிதியத்துடன் கலந்தாலோசித்து உடன்படிக்கையை மாற்றியமைப்பேன் என்று தெரிவித்தார். என்ற போதிலும், அவரால் இன்று மாற்றியமைக்க முடியவில்லை என சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

2024 பொதுத் தேர்தலை இலக்காக் கொண்டு ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு கொழும்பு கொலன்னாவ கட்சி செயற்பாட்டாளர்களுடனான சந்திப்பொன்று ஐக்கிய மக்கள் சக்தியினதும் ஐக்கிய மக்கள் கூட்டணியினதும் தலைவரான சஜித் பிரேமதாச தலைமையில் (27) கொலன்னாவ பிரதேசத்தில் இடம்பெற்றது. ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட வேட்பாளர் எஸ்.எம்.மரிக்கார் அவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட இச்சந்திப்பில் கட்சி செயற்பாட்டாளர்கள் பலர் கலந்து கொண்டனர். இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

தற்போது அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதோடு, தேங்காய்களுக்கு வரிசையும் காணப்படுகின்றன. 2028 ஆம் ஆண்டு முதல் கடனை அடைப்பதாக முன்னாள் ஜனாதிபதி நாட்டையே சிக்கலில் தள்ளியுள்ளார். இதற்கு இன்னும் நான்கு வருடங்கள் மட்டுமே உள்ளது என சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

தற்போதைய பொருளாதாரத்தை வைத்துக் கொண்டு இந்த கடனை செலுத்த முடியாது. இதற்கு விரைவான பொருளாதார வளர்ச்சி அவசியமாகும். இந்தக் கடனை திருப்பிச் செலுத்த, பெரும்பான்மையான ஐக்கிய மக்கள் சக்தி எம்.பி.க்கள் நாடாளுமன்றத்துக்கு நியமிக்கப்பட வேண்டும். அவ்வாறு இல்லை என்றால் 2028 ஆம் ஆண்டு நாடு மீண்டும் வங்குரோத்து நிலைக்குத் தள்ளப்படும் என சஜித் பிரேமதாச மேலும் தெரிவித்தார்.

IMF உடன் பேச்சுவார்த்தை நடத்தி மக்களுக்கு ஏற்ற இணக்கப்பாட்டில் ஐக்கிய மக்கள் சக்தியால் கையெழுத்திடலாம். வரிசை யுகத்திற்கு பதிலாக அபிவிருத்தி யுகத்தை உருவாக்கும் நாட்டை ஐக்கிய மக்கள் சக்தியால் கட்டியெழுப்ப முடியும் என சஜித் பிரேமதாச மேலும் தெரிவித்தார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...