Tamil Leader News
முக்கியம்
தேசியப் பூங்காக்களில் பிகினி பிடிப்பு: சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் பாரிய இடைவெளி!●காவன்திஸ்ஸ துயரம்: யானையின் வயிற்றில் ஈயக் குண்டுகள்; விசாரணைகள் CID வசம்!●வீட்டுவசதி நெருக்கடியால் 14 ஆண்டுகளுக்குப் பின் ஸ்பெயினில் மாபெரும் பொது வேலைநிறுத்தம்!●நாடு திரும்புகிறார் அனோஜன் சிவராசா; சவூதியில் மரண தண்டனையிலிருந்து  பூரண விடுதலை!●1990 சுவசரிய சேவைக்கு இந்தியாவிலிருந்து மேலும் 100 நோயாளர் காவு வண்டிகள்; வருகை நேரம் 10 நிமிடங்களாகக் குறைகிறது!●நிதித்துறையில் எழுந்துள்ள புதிய அபாயங்கள் குறித்து மத்திய வங்கியிடமிருந்து விசேட எச்சரிக்கை!●6 மாதங்களில் 271 மில்லியன் நட்டம்: அரச ஊடகங்களுக்கு என்ன நேர்ந்தது?●DIGInote: 2027 வரவு-செலவுத் திட்டம் இன்று நாடாளுமன்றத்தில் - மூலதனச் செலவு 2 ட்ரில்லியன்!●2027 வரவு செலவுத் திட்டம்: இலக்கங்களின் ஸ்திரத்தன்மை மக்களின் பாக்கெட்டுக்குத் தெரியுமா?●இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●
செய்திகள்

விபத்துக்குள்ளான லொகன் ரத்வத்தவின் டிபென்டரை வீடியோ எடுத்த இளைஞர் கைது!

T

The Leader Desk

அக்டோபர் 28, 2024 • 4:18 AM

விபத்துக்குள்ளான லொகன் ரத்வத்தவின் டிபென்டரை வீடியோ எடுத்த இளைஞர் கைது!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • வாகன விபத்தில் சிக்கிய முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொகன் ரத்வத்தவுக்குச் சொந்தமானது என கூறப்படும் டிஃபென்டர் வாகனத்தை வீடியோ எடுத்த இளைஞர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
  • பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டிலேயே இந்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
  • முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவுக்கு சொந்தமானது என கூறப்படும் டிஃபென்டர் ரக ஜீப் ஒன்று கடந்த 26 ஆம் திகதி வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானது.
எழுத்து அளவு:

வாகன விபத்தில் சிக்கிய முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொகன் ரத்வத்தவுக்குச்  சொந்தமானது என கூறப்படும் டிஃபென்டர் வாகனத்தை வீடியோ எடுத்த இளைஞர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டிலேயே இந்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இச்சம்பவம் தொடர்பில் சமூக வலைத்தளங்களில் பரவி வரும் காணொளி ஒன்றில் வாரியபொல பொலிஸ் போக்குவரத்துப் பிரிவின் நிலைய பொறுப்பதிகாரி என தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ளும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் குறித்த இடத்தில் படம் எடுக்க முற்பட்ட இளைஞரை அச்சுறுத்தும் வகையில் எச்சரிக்கும் காட்சி இடம்பெற்றுள்ளது.

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவுக்கு சொந்தமானது என கூறப்படும் டிஃபென்டர் ரக ஜீப் ஒன்று கடந்த 26 ஆம் திகதி வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

விபத்துக்குள்ளான லொகன் ரத்வத்தவின் டிபென்டரை வீடியோ எடுத்த இளைஞர் கைது! | Tamil Leader | We Lead the Nation