Tamil Leader News
முக்கியம்
தேசியப் பூங்காக்களில் பிகினி பிடிப்பு: சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் பாரிய இடைவெளி!●காவன்திஸ்ஸ துயரம்: யானையின் வயிற்றில் ஈயக் குண்டுகள்; விசாரணைகள் CID வசம்!●வீட்டுவசதி நெருக்கடியால் 14 ஆண்டுகளுக்குப் பின் ஸ்பெயினில் மாபெரும் பொது வேலைநிறுத்தம்!●நாடு திரும்புகிறார் அனோஜன் சிவராசா; சவூதியில் மரண தண்டனையிலிருந்து  பூரண விடுதலை!●1990 சுவசரிய சேவைக்கு இந்தியாவிலிருந்து மேலும் 100 நோயாளர் காவு வண்டிகள்; வருகை நேரம் 10 நிமிடங்களாகக் குறைகிறது!●நிதித்துறையில் எழுந்துள்ள புதிய அபாயங்கள் குறித்து மத்திய வங்கியிடமிருந்து விசேட எச்சரிக்கை!●6 மாதங்களில் 271 மில்லியன் நட்டம்: அரச ஊடகங்களுக்கு என்ன நேர்ந்தது?●DIGInote: 2027 வரவு-செலவுத் திட்டம் இன்று நாடாளுமன்றத்தில் - மூலதனச் செலவு 2 ட்ரில்லியன்!●2027 வரவு செலவுத் திட்டம்: இலக்கங்களின் ஸ்திரத்தன்மை மக்களின் பாக்கெட்டுக்குத் தெரியுமா?●இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●
செய்திகள்

முஸ்லிம்கள் பிரச்சினைகளை எதிர்கொண்டபோது துணிச்சலாக களமிறங்கி எதிர்த்தவர்கள் நாம்! - ரவூப் ஹக்கீம்

T

The Leader Desk

அக்டோபர் 27, 2024 • 7:52 AM

முஸ்லிம்கள்  பிரச்சினைகளை எதிர்கொண்டபோது துணிச்சலாக களமிறங்கி எதிர்த்தவர்கள் நாம்! - ரவூப் ஹக்கீம்

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • எதிர்கொண்ட பல்வேறு பிரச்சினைகளின்போது துணிச்சலாக களம் இறங்கி எதிர்த்து நின்று, சமூகத்தைப் பாதுகாப்பதில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை முஸ்லிம் காங்கிரஸ் செய்துள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும்,கண்டி மாவட்ட ஐக்கிய மக்கள் சக்தி வேட்பாளருமான ரவூப் ஹக்கீம் குறிப்பிட்டார்.
  • ஹமீத் இந்த மாவட்டத்தில் 40 வருடங்களாக அரசியல் செய்தவர்.
  • இல் தேசியப் பட்டியலில் பாராளுமன்றத்திற்கு நான் தெரிவு செய்யப்பட்ட பின்னர் ,2000 ஆம் ஆண்டு முதன்முதலாக கண்டி மாவட்டத்தில் தேர்தலில் போட்டியிட்டபோது, துரதிர்ஷ்டவசமாக அதற்கு முந்திய வருடம் அவர் காலம் சென்றிருந்தார்.
  • நான் 30 வருடங்களாக பாராளுமன்றத்தில் உறுப்பினராக இருக்கிறேன்.
எழுத்து அளவு:

எதிர்கொண்ட பல்வேறு பிரச்சினைகளின்போது துணிச்சலாக களம் இறங்கி எதிர்த்து நின்று, சமூகத்தைப் பாதுகாப்பதில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை முஸ்லிம் காங்கிரஸ் செய்துள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும்,கண்டி மாவட்ட ஐக்கிய மக்கள் சக்தி வேட்பாளருமான ரவூப் ஹக்கீம் குறிப்பிட்டார்.

கண்டி, இனிகலையில் நடைபெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் தேர்தல் பிரசார ஒன்றுகூடலில் கலந்துகொண்டு உரையாற்றும் போது அவர் இதனைக் கூறினார்.

அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர் மேலும் தெரிவித்ததாவது,

முன்னாள் அமைச்சர் ஏ.சி.எஸ். ஹமீத் இந்த மாவட்டத்தில் 40 வருடங்களாக அரசியல் செய்தவர். 1994 இல் தேசியப் பட்டியலில் பாராளுமன்றத்திற்கு நான் தெரிவு செய்யப்பட்ட பின்னர் ,2000 ஆம் ஆண்டு முதன்முதலாக கண்டி மாவட்டத்தில் தேர்தலில் போட்டியிட்டபோது, துரதிர்ஷ்டவசமாக அதற்கு முந்திய வருடம் அவர் காலம் சென்றிருந்தார்.

2000ஆம் ஆண்டில் நான் கண்டி மாவட்டத்தில் மரச் சின்னத்தில் போட்டியிட்டபோது நான் வெற்றி பெறுவேன் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.

இறைவனின் உதவியால் அந்தத் தேர்தலில் நான் வெற்றி பெற்ற போதும் எங்கள் கட்சியின் ஸ்தாபகத் தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரப் ஹெலிகொப்டரில் பயணித்துக் கொண்டிருந்தபோது மரணிக்க நேர்ந்தது. அந்த பெரும் தலைவர்கள் இருவரும் இரண்டு வருடங்களுக்குள் மரணித்தமை பெரும் மனப்பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது.

நான் 30 வருடங்களாக பாராளுமன்றத்தில் உறுப்பினராக இருக்கிறேன். இந்த 30 வருடங்களில் நான் கண்டி மாவட்டத்துக்கு எதையுமே செய்யவில்லை என்று சிலர் பொய் குற்றம் சாட்டுகின்றனர். நான்செய்த வேலைகளை குறிப்பிடுவதாக இருந்தால் பெரிய பட்டியல் ஒன்றே போடலாம்.

அதில் ஒன்றை மட்டும் குறிப்பிடுவதாக இருந்தால், நீர்வழங்கல் அமைச்சராக நான் இருந்தபோது, 52 ஆயிரம் மில்லியன் ரூபா சீனாவிடம் இருந்து கடன் பெற்று, ஆரம்பிக்கப்பட்டு, அன்றைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவைக் கொண்டு திறந்துவைத்த குஹாகொடை நீர்சுத்திகரிப்பு நிலையத்தைக் குறிப்பிடலாம். இது அக்குறணைக்கும் அப்பால் அங்கும்புறை வரை குடிநீர் வழங்கும் ஆற்றலைக் கொண்டது. இப்பிரதேசத்தில் குடிநீர் வசதியே அற்ற குக்கிராமங்கள் வரை குடிநீர் வழங்கல் திட்டங்களை நடைமுறைப்படுத்தியுள்ளேன். சுமார் 16 நீர் வழங்கல் திட்டங்களை நான் கண்டி மாவட்டத்தில் மாத்திரம் நடைமுறைப்படுத்தி யுள்ளேன். இவ்வாறாக அமைச்சுப் பதவியில் இருந்த காலங்களில் நான் ஏராளமான செயற்திட்டங்களை இப்பகுதியில் முன்னெடுத்துள்ளேன் என்றார்.

 
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...