Tamil Leader News
முக்கியம்
தேசியப் பூங்காக்களில் பிகினி பிடிப்பு: சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் பாரிய இடைவெளி!●காவன்திஸ்ஸ துயரம்: யானையின் வயிற்றில் ஈயக் குண்டுகள்; விசாரணைகள் CID வசம்!●வீட்டுவசதி நெருக்கடியால் 14 ஆண்டுகளுக்குப் பின் ஸ்பெயினில் மாபெரும் பொது வேலைநிறுத்தம்!●நாடு திரும்புகிறார் அனோஜன் சிவராசா; சவூதியில் மரண தண்டனையிலிருந்து  பூரண விடுதலை!●1990 சுவசரிய சேவைக்கு இந்தியாவிலிருந்து மேலும் 100 நோயாளர் காவு வண்டிகள்; வருகை நேரம் 10 நிமிடங்களாகக் குறைகிறது!●நிதித்துறையில் எழுந்துள்ள புதிய அபாயங்கள் குறித்து மத்திய வங்கியிடமிருந்து விசேட எச்சரிக்கை!●6 மாதங்களில் 271 மில்லியன் நட்டம்: அரச ஊடகங்களுக்கு என்ன நேர்ந்தது?●DIGInote: 2027 வரவு-செலவுத் திட்டம் இன்று நாடாளுமன்றத்தில் - மூலதனச் செலவு 2 ட்ரில்லியன்!●2027 வரவு செலவுத் திட்டம்: இலக்கங்களின் ஸ்திரத்தன்மை மக்களின் பாக்கெட்டுக்குத் தெரியுமா?●இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●
செய்திகள்

போலிக் கணக்குகளை காட்டி ஏமாற்ற முற்பட்டால் ஏறாவூர் மக்களாலும் ஹிஸ்புல்லாஹ விரட்டப்படுவார்! -எம்.எஸ்.சுபைர்

T

The Leader Desk

அக்டோபர் 27, 2024 • 3:15 AM

போலிக் கணக்குகளை காட்டி ஏமாற்ற முற்பட்டால் ஏறாவூர் மக்களாலும் ஹிஸ்புல்லாஹ  விரட்டப்படுவார்! -எம்.எஸ்.சுபைர்

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • முன்னெடுத்துவரும் ஹிஸ்புல்லாவுக்கு மக்கள் இம்முறையும் பாடம் புகட்டுவர் : வேட்பாளர் சுபைர் தெரிவிப்பு காத்தான்குடி மக்களிடத்தில் செல்வாக்கிழந்து பலவீனமடைந்துள்ள ஹிஸ்புல்லா ஏறாவூர் எல்லைக் கிராமங்களிலும் பொய்களைக் கூறி வாக்குகளை சூறையாட முயற்சித்து வருகிறார்.
  • தோல்வியில் இருந்து மீள்வதற்காக கடும் பிரயத்தனங்களை மேற்கொண்டுவரும் ஹிஸ்புல்லா, ஏறாவூர் ஓட்டமாவடி எல்லைக் கிராமங்களுக்குள் ஊடுருவி தான் வெற்றி பெறுவதாகவும் ஏனையவர்கள் தோல்வியடைவதாகவும் சிறுபிள்ளை போன்று கணக்குகளை காட்டுகிறார்.
  • அவருடைய மோசமான அரசியல் செயற்பாட்டிலிருந்து ஏறாவூர் மண்ணையும் மக்கயையும் பாதுகாப்பதற்கு ஏறாவூரின் சிரேஷ்ட அரசியல் தலைவர்கள் முன்வர வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர் கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.சுபைர் தெரிவித்தார்.
எழுத்து அளவு:

முன்னெடுத்துவரும் ஹிஸ்புல்லாவுக்கு மக்கள் இம்முறையும் பாடம் புகட்டுவர் : வேட்பாளர் சுபைர் தெரிவிப்பு

காத்தான்குடி மக்களிடத்தில் செல்வாக்கிழந்து பலவீனமடைந்துள்ள ஹிஸ்புல்லா ஏறாவூர் எல்லைக் கிராமங்களிலும் பொய்களைக் கூறி வாக்குகளை சூறையாட முயற்சித்து வருகிறார். அவருடைய மோசமான அரசியல் செயற்பாட்டிலிருந்து ஏறாவூர் மண்ணையும் மக்கயையும் பாதுகாப்பதற்கு ஏறாவூரின் சிரேஷ்ட அரசியல் தலைவர்கள் முன்வர வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர் கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.சுபைர் தெரிவித்தார்.
 
ஏறாவூர் மிச்நகரில்  இடம்பெற்ற இளைஞர்களுடனான சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
 
இம்முறை நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி மட்டக்களப்பு மாவட்டத்தை வென்று இரண்டு ஆசனங்களை பெறுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. இந்த தேர்தலில் ஏறாவூரின் சிரேஷ்ட அரசியல் தலைவர்கள் போட்டியிடாத நிலையில் எமதூரின் பிரதிநிதித்துவத்தை தக்கவைப்பதற்கான நல்லதொரு சந்தர்ப்பம் காணப்படுகிறது.
 
ஹிஸ்புல்லாவின் அரசியல்  வங்குரோத்து நிலையை அடைந்ததனால் தான் அவர் இலகுவில் பாராளுமன்றம் செல்லலாம் என நினைத்துக்கொண்டு முஸ்லிம் காங்கிரஸிக்கு தாவினார். அக்கட்சியில் இருந்த ஏறாவூரின் சிரேஷ்ட அரசியல் தலைவர்கள் கட்சியை விட்டு வெளியேறியதனால் இப்போது ஹிஸ்புல்லாவின் பாராளுமன்ற கனவு கேள்விக்குறியாகியுள்ளது.
 
தோல்வியில் இருந்து மீள்வதற்காக கடும் பிரயத்தனங்களை மேற்கொண்டுவரும் ஹிஸ்புல்லா, ஏறாவூர் ஓட்டமாவடி எல்லைக் கிராமங்களுக்குள் ஊடுருவி தான் வெற்றி பெறுவதாகவும் ஏனையவர்கள் தோல்வியடைவதாகவும் சிறுபிள்ளை போன்று கணக்குகளை காட்டுகிறார்.
 
அவர் மக்களை ஏமாற்றி வாக்கு தேடுகின்ற இந்த போலிப் பிரசாரத்தினால் ஓட்டமாவடி இளைஞர்களால் விரட்டியடிக்கப்பட்டார். ஏறாவூர் மக்கள் ஒன்றுபட்டுள்ள நிலையில் இங்கும் வந்து போலிக் கணக்குகளை காட்டி மக்களை ஏமாற்ற முற்பட்டால் ஏறாவூர் மக்களாலும் விரட்டப்படுவார் என நினைக்கின்றேன். 
 
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை அழிப்பதற்கும் அக்கட்சியின் தலைவரையும் கடந்த காலங்களில் மிகக்கேவலமாக விமர்சித்து வந்த ஹிஸ்புல்லா இன்று அந்தக் கட்சியையும் தலைவரையும் புகழ்பாடுவது வேடிக்கையாகவுள்ளது. அவர் அரசியல் அதிகாரத்தில் இருந்த போது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் போராளிகளுக்கும் பல்வேறு அநியாயங்களைச் செய்தார். இப்போது கட்சியினதும் தலைவரினதும் விசுவாசியாக மாறியிருக்கிறார். 
 
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் வளர்ச்சிக்கு உழைத்த ஏறாவூரின் சிரேஷ்ட அரசியல் தலைவர்கள் இன்று அந்தக் கட்சியின் தலைவரால் விரட்டப்பட்டுள்ளனர். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸினதும் ஹிஸ்புல்லாஹ்வினதும் போலி அரசியல் செயற்பாடுகள் இந்தப் பிரதேசத்துக்கு ஆபத்தாகும். இது துடைத்தெறியப்பட வேண்டும். 
 
தரகர்களை வைத்துக்கொண்டு ஏறாவூரை அரசியல் அநாதையாக்க முயலும் ஹிஸ்புல்லா சூழ்ச்சி முறியடிக்கப்பட வேண்டும். பல்லாண்டு காலமாக பாதுக்கப்பட்டு வந்த எமது பிரதிநிதித்துவம் இம்முறையும் பாதுகாக்கப்பட வேண்டும். அதற்காக ஏறாவூரின் சிரேஷ்ட அரசியல் தலைவர்கள், உலமாக்கள், கல்வியலாளர்கள், இளைஞர்கள் முன்னினன்று உழைக்க வேண்டும் என்றார்.
 
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...