Tamil Leader News
முக்கியம்
தேசியப் பூங்காக்களில் பிகினி பிடிப்பு: சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் பாரிய இடைவெளி!●காவன்திஸ்ஸ துயரம்: யானையின் வயிற்றில் ஈயக் குண்டுகள்; விசாரணைகள் CID வசம்!●வீட்டுவசதி நெருக்கடியால் 14 ஆண்டுகளுக்குப் பின் ஸ்பெயினில் மாபெரும் பொது வேலைநிறுத்தம்!●நாடு திரும்புகிறார் அனோஜன் சிவராசா; சவூதியில் மரண தண்டனையிலிருந்து  பூரண விடுதலை!●1990 சுவசரிய சேவைக்கு இந்தியாவிலிருந்து மேலும் 100 நோயாளர் காவு வண்டிகள்; வருகை நேரம் 10 நிமிடங்களாகக் குறைகிறது!●நிதித்துறையில் எழுந்துள்ள புதிய அபாயங்கள் குறித்து மத்திய வங்கியிடமிருந்து விசேட எச்சரிக்கை!●6 மாதங்களில் 271 மில்லியன் நட்டம்: அரச ஊடகங்களுக்கு என்ன நேர்ந்தது?●DIGInote: 2027 வரவு-செலவுத் திட்டம் இன்று நாடாளுமன்றத்தில் - மூலதனச் செலவு 2 ட்ரில்லியன்!●2027 வரவு செலவுத் திட்டம்: இலக்கங்களின் ஸ்திரத்தன்மை மக்களின் பாக்கெட்டுக்குத் தெரியுமா?●இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●
செய்திகள்

யாழில் தமிழ் மக்கள் கூட்டணியினர் மீது தாக்குதல் - பெண் உள்ளிட்ட மூவர் வைத்தியசாலையில்

T

The Leader Desk

அக்டோபர் 26, 2024 • 4:03 PM

யாழில் தமிழ் மக்கள் கூட்டணியினர் மீது தாக்குதல் - பெண் உள்ளிட்ட மூவர் வைத்தியசாலையில்

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் தமிழ் மக்கள் கூட்டணியின் யாழ் .
  • தேர்தல் மாவட்ட முதன்மை வேட்பாளரான சட்டத்தரணி வி.
  • மணிவண்ணன் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
எழுத்து அளவு:

பரப்புரையில் ஈடுபட்டிருந்த தமிழ் மக்கள் கூட்டணியின் ஆதரவாளர்கள் மீது ஒரு குழுவினர் தாக்குதல் நடத்தியதில் , பெண்ணொருவர் உள்ளிட்ட மூவர் காயமடைந்துள்ளனர். 

கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கரந்தன் பகுதியில் இன்று (26) தமிழ் மக்கள் கூட்டணியினர் பிரசார நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது முச்சக்கர வண்டியில் வந்த நால்வர் பிரசசாரத்தில் ஈடுபட்டிருந்தவர்களுடன் முரண்பட்டு அவர்களை தாக்கியுள்ளனர். 

பின்னர் அங்கிருந்து சென்ற அவர்கள் மீண்டும் 20க்கும் மேற்பட்ட நபர்களுடன் அஅங்கு வந்து , பிரச்சார பணிகளில் ஈடுபட்டிருந்த ஆண்கள் பெண்கள் மீது தாக்குதல் நடாத்தி விட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர். 

சம்பவத்தில் பெண்ணொருவர் உள்ளிட்ட மூவர் காயமடைந்த நிலையில், அங்கிருந்து  யாழ் . போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

சம்பவம் தொடர்பில் தமிழ் மக்கள் கூட்டணியின் யாழ் . தேர்தல் மாவட்ட முதன்மை வேட்பாளரான சட்டத்தரணி வி. மணிவண்ணன் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். 

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...