Tamil Leader News
முக்கியம்
தேசியப் பூங்காக்களில் பிகினி பிடிப்பு: சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் பாரிய இடைவெளி!●காவன்திஸ்ஸ துயரம்: யானையின் வயிற்றில் ஈயக் குண்டுகள்; விசாரணைகள் CID வசம்!●வீட்டுவசதி நெருக்கடியால் 14 ஆண்டுகளுக்குப் பின் ஸ்பெயினில் மாபெரும் பொது வேலைநிறுத்தம்!●நாடு திரும்புகிறார் அனோஜன் சிவராசா; சவூதியில் மரண தண்டனையிலிருந்து  பூரண விடுதலை!●1990 சுவசரிய சேவைக்கு இந்தியாவிலிருந்து மேலும் 100 நோயாளர் காவு வண்டிகள்; வருகை நேரம் 10 நிமிடங்களாகக் குறைகிறது!●நிதித்துறையில் எழுந்துள்ள புதிய அபாயங்கள் குறித்து மத்திய வங்கியிடமிருந்து விசேட எச்சரிக்கை!●6 மாதங்களில் 271 மில்லியன் நட்டம்: அரச ஊடகங்களுக்கு என்ன நேர்ந்தது?●DIGInote: 2027 வரவு-செலவுத் திட்டம் இன்று நாடாளுமன்றத்தில் - மூலதனச் செலவு 2 ட்ரில்லியன்!●2027 வரவு செலவுத் திட்டம்: இலக்கங்களின் ஸ்திரத்தன்மை மக்களின் பாக்கெட்டுக்குத் தெரியுமா?●இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●
செய்திகள்

இன்று தேங்காய்க்குக் கூட வரிசை கட்டி நிற்கும் நிலை! -சஜித் பிரேமதாச

T

The Leader Desk

அக்டோபர் 25, 2024 • 11:26 AM

இன்று தேங்காய்க்குக் கூட வரிசை கட்டி நிற்கும் நிலை! -சஜித் பிரேமதாச

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • வரிசை கட்டி நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
  • இதன் காரணமாக மக்களின் அதிருப்தி அதிகரித்து காணப்படுவதாக சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
  • ஐக்கிய மக்கள் சக்தியின் மத்திய கொழும்பு தேர்தல் தொகுதியில் இடம்பெற்ற மற்றுமொரு கட்சி செயற்பாட்டாளர்களுடனான சந்திப்பில் நேற்று(24) கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஐக்கிய மக்கள் சக்தியினதும் ஐக்கிய மக்கள் கூட்டணியினதும் தலைவரான சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.
எழுத்து அளவு:

வரிசை கட்டி நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை கூட அதிகரித்துள்ளன. மக்களுக்கு நிவாரணம் தருகிறோம் என்று சொன்ன இந்த அரசால் கூட IMF-யுடன் பேச்சுவார்த்தை நடத்தி VAT உள்ளிட்ட வரிச்சுமையை குறைக்க முடியாது போயுள்ளது. ஆனாலும் ஐக்கிய மக்கள் அரசாங்கத்தில் வரிகளை குறைக்கும் சர்வதேச நாணய நிதியம் உடன்படிக்கையை எட்டுவோம் என்று சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

ஜனாதிபதி தேர்தலுக்கு பல மாதங்களுக்கு முன்னரே சர்வதேச நாணய நிதியத்துடன் நாம் பேச்சுவார்த்தை நடத்தினோம். வரிச்சுமையை மக்களால் சுமக்க முடியாது என்று குறித்த பேச்சுவார்த்தைகளின் போது நாம் அவர்களுக்கு சுட்டிக்காட்டினோம். மக்கள் கையில் புழங்கும் பணம் கூட வரி என்ற பெயரில் திருடப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக மக்களின் அதிருப்தி அதிகரித்து காணப்படுவதாக சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
 
சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வரிச்சுமையை குறைக்க தற்போதைய அரசால் இன்னும் முடியவில்லை. ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சியில் வரிசையில் நிற்கும் காலம் ஒழிக்கப்பட்டு, வரிச்சுமை குறைந்த, பணம் புழக்கம் இருக்கும் பொது மக்கள் யுகமொன்றுக்கு தலைமைத்துவம் வழங்க நாம் தயார். எனவே, இந்த பொதுத் தேர்தலில் எரிவாயு சிலின்டருக்கு வாக்களித்த அனைத்து ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களுக்கும் ஐக்கிய மக்கள் சக்தியின் கதவுகள் திறந்தே காணப்படுகின்றன. ரணில் விக்கிரமசிங்க மக்களை அனாதையாக்கிவிட்டுள்ளார் என என சஜித் பிரேமதாச இங்கு மேலும் தெரிவித்தார்.
 
ஐக்கிய மக்கள் சக்தியின் மத்திய கொழும்பு தேர்தல் தொகுதியில் இடம்பெற்ற மற்றுமொரு கட்சி செயற்பாட்டாளர்களுடனான சந்திப்பில் நேற்று(24) கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஐக்கிய மக்கள் சக்தியினதும் ஐக்கிய மக்கள் கூட்டணியினதும் தலைவரான சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார். ஐக்கிய மக்கள் சக்தியின் மத்திய கொழும்பு தேர்தல் தொகுதி அமைப்பாளர் முஜிபுர் ரஹ்மான் அவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட இச்சந்திப்பில் கட்சி செயற்பாட்டாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.
 
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

இன்று தேங்காய்க்குக் கூட வரிசை கட்டி நிற்கும் நிலை! -சஜித் பிரேமதாச | Tamil Leader | We Lead the Nation