Tamil Leader News
முக்கியம்
தேசியப் பூங்காக்களில் பிகினி பிடிப்பு: சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் பாரிய இடைவெளி!●காவன்திஸ்ஸ துயரம்: யானையின் வயிற்றில் ஈயக் குண்டுகள்; விசாரணைகள் CID வசம்!●வீட்டுவசதி நெருக்கடியால் 14 ஆண்டுகளுக்குப் பின் ஸ்பெயினில் மாபெரும் பொது வேலைநிறுத்தம்!●நாடு திரும்புகிறார் அனோஜன் சிவராசா; சவூதியில் மரண தண்டனையிலிருந்து  பூரண விடுதலை!●1990 சுவசரிய சேவைக்கு இந்தியாவிலிருந்து மேலும் 100 நோயாளர் காவு வண்டிகள்; வருகை நேரம் 10 நிமிடங்களாகக் குறைகிறது!●நிதித்துறையில் எழுந்துள்ள புதிய அபாயங்கள் குறித்து மத்திய வங்கியிடமிருந்து விசேட எச்சரிக்கை!●6 மாதங்களில் 271 மில்லியன் நட்டம்: அரச ஊடகங்களுக்கு என்ன நேர்ந்தது?●DIGInote: 2027 வரவு-செலவுத் திட்டம் இன்று நாடாளுமன்றத்தில் - மூலதனச் செலவு 2 ட்ரில்லியன்!●2027 வரவு செலவுத் திட்டம்: இலக்கங்களின் ஸ்திரத்தன்மை மக்களின் பாக்கெட்டுக்குத் தெரியுமா?●இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●
செய்திகள்

தமிழரசுக் கட்சியும் முஸ்லிம் காங்கிரஸூம் கள்ளத் திருமணம்!

T

The Leader Desk

அக்டோபர் 25, 2024 • 4:54 AM

தமிழரசுக் கட்சியும் முஸ்லிம் காங்கிரஸூம் கள்ளத் திருமணம்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • ஹரீஸை மட்டும் சொல்ல முடியாது.
  • சமகால அரசியல் தொடர்பில் அம்பாறை ஊடக அமையத்தில் வியாழக்கிழமை(24) மாலை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
  • எனவே அவர்களுக்கு அளிக்கும் உங்களது வாக்குகள் தமிழ் மகனை வெற்றியடையச் செய்யப் போவதில்லை.
  • அப்படிப் பார்த்தால் 1994 ஆம் ஆண்டிலே மாவை சேனாதிராசா இங்கு வந்து பிரதிநிதித்துவத்தை இழக்கச் செய்தார்.
எழுத்து அளவு:
ஹரீஸை மட்டும் சொல்ல முடியாது. அவர்தான் வடக்கு பிரதேச செயலகத்தை தர முயர்த்த விரும்பாதவர் என்றும் கூற முடியாது. ஆனால் அவருக்காக வாக்களிக்கின்றவர்களும் குறித்த பிரதேச செயலகத்தை தரமுயர்த்த விரும்பாதவர்கள் என்றே கூற முடியும்.
 
இதேவேளை, முன்னாள் எம்.பியான ஹரீஸூக்கு அவரது கட்சி இம்முறை இத்தேர்தலில் வேட்புமனு கொடுக்காமைக்கு காரணம் தற்போதைய ஜனாதிபதியின் செயற்பாடாகவும் இருக்கக் கூடும் என ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் அம்பாறை மாவட்ட வேட்பாளரும் கல்முனை ஐக்கிய வணிக சங்கத் தலைவரும் பாண்டிருப்பு அனைத்து ஆலயங்களின் ஒன்றிய நிர்வாக சபை உறுப்பினருமான கிருஷ்ணபிள்ளை லிங்கேஸ்வரன் தெரிவித்தார்.
 
சமகால அரசியல் தொடர்பில்  அம்பாறை ஊடக அமையத்தில் வியாழக்கிழமை(24) மாலை    நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு  மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
 
மேலும் அவர் தெரிவித்ததாவது
 
கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தொடர்பில் போராடுவதற்கு ஆர்வமுள்ளவர்கள் இதயசுத்தியுடன் போராடாமல் இருந்தால் அச்செயலகத்துககுரிய அதிகாரத்தை பெற முடியாது என்பது உண்மை.
 
மேலும் இலங்கை தமிழரசுக் கட்சியும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸூம் திருமணம் முடித்து வேறு கள்ளக்காதலில் ஈடுபட்ட நிலையில்,  அம்பாறை மாவட்ட கல்முனை தமிழ் மக்களது வாக்குகளை பெறுவதற்காக பிச்சைக்காரனின் புண்ணாக இவ்விடயத்தை பயன்படுத்துகின்றனர்.எனவே அம்பாறை மாவட்ட  வாக்காளர்கள் சிந்திக்க வேண்டும் என்றார்.
 
1995 க்கு பின்னர் பிறந்த எமது இளைஞர்கள்  இம்முறை தேசிய அரசியலின் பக்கம் இருப்பதாக கூறப்படுகிறது.இது ஏனைய மாவட்டங்களுக்கு அல்லது ஏனைய இனங்களுக்கு பொருந்தலாம். ஆனால் அம்பாறை மாவட்ட தமிழ் வாலிப வாக்காளர்களுக்கு ஒருபோதும் பொருந்தாது.அவர்கள் சிந்திக்க வேண்டும்.
 
தேசிய மக்கள் சக்தி ஒருவேளை மூன்று ஆசனங்கள் எடுத்தாலும் அம்பாறை மாவட்டத்தில்  அந்த அணியில் கேட்கின்ற தமிழர் ஒரு போதும் வரவே முடியாது .அப்படி வந்தாலும் அவரால் தமிழருக்காக குரல் கொடுக்கவும் முடியாது. அபிவிருத்தி செய்யவும் முடியாது.
 
எனவே அவர்களுக்கு அளிக்கும் உங்களது வாக்குகள்  தமிழ் மகனை வெற்றியடையச் செய்யப் போவதில்லை. மாறாக மாற்றின பிரதிநிதியைத்தான் வரவைக்கும் என்பதை தமிழ் வாலிப வாக்காளர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும் . 
 
எனவே பொன்னான வாக்குகளை வீணாக்காமல் வெற்றி பெறும் அணிக்கு வாக்களித்து தமிழ் பிரதிநிதி வர ஒத்துழைப்பு நல்குங்கள்.
 
கடந்த முறை தமிழ் பிரதிநிதித்துவம் அம்பாறை மாவட்டத்தில் இழக்கப்பட்டதற்கு கருணா காரணம் இல்லை .கூட வாக்கெடுப்பதை விட குறைவாக வாக்கெடுத்து வாக்குகளை பிரிப்பவன் தான் அதற்கு காரணமாக இருக்க முடியும். அப்படிப் பார்த்தால் 1994 ஆம் ஆண்டிலே மாவை சேனாதிராசா இங்கு வந்து பிரதிநிதித்துவத்தை இழக்கச் செய்தார். இதனை தமிழரசுக் கட்சி ஏற்றுக்கொள்ள வேண்டும் .
 
நாங்கள் திருகோணமலை மாவட்டத்திலே சம்பந்தன் பிறந்த நகர் என்பதால் அங்கு வீட்டுக்கு விட்டுக் கொடுத்தோம். ஆனால் அம்பாறை மாவட்டத்தில் அவர்கள் தேவையற்ற சாட்டுகளை சொல்லி ஒற்றுமையில் இருந்து தவறி விட்டார்கள். அதன் விளைவாக நாங்கள் சங்குச் சின்னத்தில் கேட்க நிர்ப்பந்திக்கப்பட்டோம் .கடந்த காலங்களில் இந் தமிழரசுக் கட்சி அம்பாறை மாவட்ட தமிழர்களுக்கு செய்த துரோகம் கொஞ்சம் நெஞ்சம் இல்லை.
 
2015இல் கிழக்கு மாகாண சபையை தாரை வார்த்து கொடுத்தது.2019ல் நாம் உண்ணாவிரதம் இருந்த போது எத்தனையோ பொன்னான வாய்ப்புகள்  இருந்தும் கல்முனை தமிழ் பிரதேச செயலகத்தை வேண்டும் என்று கிடப்பில் போட்டது.இவை எல்லாம் வரலாற்றில் அழிக்க முடியாத துரோகங்கள் .இன்று அவர்கள் புனிதர்களாக வலம் வருவதாக கூறுகிறார்கள் .புதிய அரசாங்கம் ஊழலை  ஒழிக்க வேண்டும் என்று செயற்பட்டு வருகின்றது. அதைத்தான் நானும் விரும்புகிறேன் என்றார்.
 
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

தமிழரசுக் கட்சியும் முஸ்லிம் காங்கிரஸூம் கள்ளத் திருமணம்! | Tamil Leader | We Lead the Nation