Tamil Leader News
முக்கியம்
தேசியப் பூங்காக்களில் பிகினி பிடிப்பு: சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் பாரிய இடைவெளி!●காவன்திஸ்ஸ துயரம்: யானையின் வயிற்றில் ஈயக் குண்டுகள்; விசாரணைகள் CID வசம்!●வீட்டுவசதி நெருக்கடியால் 14 ஆண்டுகளுக்குப் பின் ஸ்பெயினில் மாபெரும் பொது வேலைநிறுத்தம்!●நாடு திரும்புகிறார் அனோஜன் சிவராசா; சவூதியில் மரண தண்டனையிலிருந்து  பூரண விடுதலை!●1990 சுவசரிய சேவைக்கு இந்தியாவிலிருந்து மேலும் 100 நோயாளர் காவு வண்டிகள்; வருகை நேரம் 10 நிமிடங்களாகக் குறைகிறது!●நிதித்துறையில் எழுந்துள்ள புதிய அபாயங்கள் குறித்து மத்திய வங்கியிடமிருந்து விசேட எச்சரிக்கை!●6 மாதங்களில் 271 மில்லியன் நட்டம்: அரச ஊடகங்களுக்கு என்ன நேர்ந்தது?●DIGInote: 2027 வரவு-செலவுத் திட்டம் இன்று நாடாளுமன்றத்தில் - மூலதனச் செலவு 2 ட்ரில்லியன்!●2027 வரவு செலவுத் திட்டம்: இலக்கங்களின் ஸ்திரத்தன்மை மக்களின் பாக்கெட்டுக்குத் தெரியுமா?●இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●
செய்திகள்

மாத்தறையில் ரிவோல்வர் தயாரிக்குமிடம் சுற்றிவளைப்பு!

T

The Leader Desk

அக்டோபர் 25, 2024 • 3:48 AM

மாத்தறையில் ரிவோல்வர் தயாரிக்குமிடம் சுற்றிவளைப்பு!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • சட்டவிரோதமான முறையில் ரிவோல்வர் ரக துப்பாக்கிகள் தயாரிக்கப்படும் இடம் சுற்றிவளைக்கப்பட்டு சந்தேகத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
  • நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி, 9 மி.மீ ரவைகள் கொண்ட 5 தோட்டாக்கள், 1 வெல்டிங் இயந்திரம் மற்றும் சில உபகரணங்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
  • குறித்த ஆயுதங்களை கொள்வனவு செய்ததாக கூறப்படும் இரு சந்தேக நபர்களையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
  • அஹங்கம பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்ட இவர்கள் 47 மற்றும் 54 வயதுடையவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.
எழுத்து அளவு:

சட்டவிரோதமான முறையில் ரிவோல்வர் ரக துப்பாக்கிகள் தயாரிக்கப்படும் இடம் சுற்றிவளைக்கப்பட்டு சந்தேகத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மாத்தறை குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைய இந்தச் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி, 9 மி.மீ ரவைகள் கொண்ட 5 தோட்டாக்கள், 1 வெல்டிங் இயந்திரம் மற்றும் சில உபகரணங்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு தயாரிக்கப்பட்ட இரண்டு துப்பாக்கிகளை சந்தேக நபர், ஒரு தொகைக்கு விற்பனை செய்துள்ளதாக ஆரம்பககட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

குறித்த ஆயுதங்களை கொள்வனவு செய்ததாக கூறப்படும் இரு சந்தேக நபர்களையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அஹங்கம பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்ட இவர்கள் 47 மற்றும் 54 வயதுடையவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.

சந்தேக நபர்களுடன்  ஆயுதங்களும் மாத்தறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது. மேலதிக விசாரணைகளை மாத்தறை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...