Tamil Leader News
முக்கியம்
தேசியப் பூங்காக்களில் பிகினி பிடிப்பு: சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் பாரிய இடைவெளி!●காவன்திஸ்ஸ துயரம்: யானையின் வயிற்றில் ஈயக் குண்டுகள்; விசாரணைகள் CID வசம்!●வீட்டுவசதி நெருக்கடியால் 14 ஆண்டுகளுக்குப் பின் ஸ்பெயினில் மாபெரும் பொது வேலைநிறுத்தம்!●நாடு திரும்புகிறார் அனோஜன் சிவராசா; சவூதியில் மரண தண்டனையிலிருந்து  பூரண விடுதலை!●1990 சுவசரிய சேவைக்கு இந்தியாவிலிருந்து மேலும் 100 நோயாளர் காவு வண்டிகள்; வருகை நேரம் 10 நிமிடங்களாகக் குறைகிறது!●நிதித்துறையில் எழுந்துள்ள புதிய அபாயங்கள் குறித்து மத்திய வங்கியிடமிருந்து விசேட எச்சரிக்கை!●6 மாதங்களில் 271 மில்லியன் நட்டம்: அரச ஊடகங்களுக்கு என்ன நேர்ந்தது?●DIGInote: 2027 வரவு-செலவுத் திட்டம் இன்று நாடாளுமன்றத்தில் - மூலதனச் செலவு 2 ட்ரில்லியன்!●2027 வரவு செலவுத் திட்டம்: இலக்கங்களின் ஸ்திரத்தன்மை மக்களின் பாக்கெட்டுக்குத் தெரியுமா?●இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●
செய்திகள்

உதய கம்மன்பிலக்கு எதிரான வழக்கில் மேல்நீதிமன்றின் உத்தரவு!

T

The Leader Desk

அக்டோபர் 24, 2024 • 9:12 AM

உதய கம்மன்பிலக்கு எதிரான வழக்கில் மேல்நீதிமன்றின் உத்தரவு!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இதன்போது, ​​குற்றஞ்சாட்டப்பட்ட உதய கம்மன்பில நீதிமன்றில் முன்னிலையாகியதுடன், மற்றைய குற்றஞ்சாட்டப்பட்ட சிட்னி ஜயரத்னவ சுகயீனமடைந்துள்ளதாக அவரது சட்டத்தரணி நீதிமன்றத்துக்கு அறிவித்தார்.
  • சமர்ப்பிக்கப்பட்ட உண்மைகளை பரிசீலித்த நீதிமன்றம், இந்த வழக்கு தொடர்பான எழுத்துபூர்வ ஆட்சேபனைகளை நவம்பர் 25 ஆம் திகதி சமர்ப்பிக்குமாறு தரப்பினருக்கு உத்தரவிட்டது.
  • ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 26 ஆம் திகதி முதல் 1997 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 25 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் இந்த குற்றத்தை செய்ததாக உதய கம்மன்பில உள்ளிட்ட இரு பிரதிவாதிகளுக்கு எதிராக சட்டமா அதிபர் இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளார்.
எழுத்து அளவு:

21 மில்லியன் ரூபா பெறுமதியான நிறுவனப் பங்குகளை போலியான அதிகாரத்தை முன்வைத்து முறைகேடாகப் பயன்படுத்திய வழக்கில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில உள்ளிட்ட இரண்டு பிரதிவாதிகளுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில் எழுத்துமூல ஆட்சேபனைகளை சமர்ப்பிக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (24) உத்தரவிட்டுள்ளது. 

இந்த வழக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி பிரதீப் அபேரத்ன முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது.
 
இதன்போது, ​​குற்றஞ்சாட்டப்பட்ட உதய கம்மன்பில நீதிமன்றில் முன்னிலையாகியதுடன், மற்றைய குற்றஞ்சாட்டப்பட்ட சிட்னி ஜயரத்னவ சுகயீனமடைந்துள்ளதாக அவரது சட்டத்தரணி நீதிமன்றத்துக்கு அறிவித்தார்.
 
சமர்ப்பிக்கப்பட்ட  உண்மைகளை பரிசீலித்த நீதிமன்றம், இந்த வழக்கு தொடர்பான எழுத்துபூர்வ ஆட்சேபனைகளை நவம்பர் 25 ஆம் திகதி சமர்ப்பிக்குமாறு தரப்பினருக்கு உத்தரவிட்டது.
 
1996 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 26 ஆம் திகதி முதல் 1997 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 25 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் இந்த குற்றத்தை செய்ததாக உதய கம்மன்பில உள்ளிட்ட இரு பிரதிவாதிகளுக்கு எதிராக சட்டமா அதிபர் இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளார்.
 
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...