Tamil Leader News
முக்கியம்
தேசியப் பூங்காக்களில் பிகினி பிடிப்பு: சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் பாரிய இடைவெளி!●காவன்திஸ்ஸ துயரம்: யானையின் வயிற்றில் ஈயக் குண்டுகள்; விசாரணைகள் CID வசம்!●வீட்டுவசதி நெருக்கடியால் 14 ஆண்டுகளுக்குப் பின் ஸ்பெயினில் மாபெரும் பொது வேலைநிறுத்தம்!●நாடு திரும்புகிறார் அனோஜன் சிவராசா; சவூதியில் மரண தண்டனையிலிருந்து  பூரண விடுதலை!●1990 சுவசரிய சேவைக்கு இந்தியாவிலிருந்து மேலும் 100 நோயாளர் காவு வண்டிகள்; வருகை நேரம் 10 நிமிடங்களாகக் குறைகிறது!●நிதித்துறையில் எழுந்துள்ள புதிய அபாயங்கள் குறித்து மத்திய வங்கியிடமிருந்து விசேட எச்சரிக்கை!●6 மாதங்களில் 271 மில்லியன் நட்டம்: அரச ஊடகங்களுக்கு என்ன நேர்ந்தது?●DIGInote: 2027 வரவு-செலவுத் திட்டம் இன்று நாடாளுமன்றத்தில் - மூலதனச் செலவு 2 ட்ரில்லியன்!●2027 வரவு செலவுத் திட்டம்: இலக்கங்களின் ஸ்திரத்தன்மை மக்களின் பாக்கெட்டுக்குத் தெரியுமா?●இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●
செய்திகள்

ரவி செனவிரத்னவின் கீழான உயிர்த்த ஞாயிறு விசாரணையை ஏற்றுக் கொள்ள முடியாது! நீதிமன்றில் மனுத்தாக்கல்

T

The Leader Desk

அக்டோபர் 24, 2024 • 3:14 AM

ரவி செனவிரத்னவின் கீழான உயிர்த்த ஞாயிறு விசாரணையை ஏற்றுக் கொள்ள முடியாது! நீதிமன்றில் மனுத்தாக்கல்

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • செயலாளர் ரவி செனவிரத்னவின் கீழ் உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளை ஏற்றுக் கொள்ள முடியாது என சம்பவத்தில் பாதிக்கப்பட்ட தரப்பினர் சார்பில் நீதிமன்றில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
  • உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் குறித்து வெளியிடப்பட்டுள்ள பி அறிக்கை தொடர்பான ஆவணங்களை ஒருவர் பெற்றுக் கொண்ட விதம் பிரச்சினைக்குரியது எனவும் அதில் திருப்திப்பட முடியாது எனவும் சட்டத்தரணி நீதிமன்றில் தலையிடுமாறு கோரியுள்ளார்.
  • இந்தக் கோரிக்கையை பரிசீலித்த நீதவான், எதிர்வரும் நவம்பர் மாதம் 13ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு அழைப்பாணை அனுப்ப உத்தரவிட்டார்.
எழுத்து அளவு:

செயலாளர் ரவி செனவிரத்னவின் கீழ் உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளை ஏற்றுக் கொள்ள முடியாது என சம்பவத்தில் பாதிக்கப்பட்ட தரப்பினர் சார்பில் நீதிமன்றில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக நியமிக்கப்பட்ட விசாரணை அறிக்கையில் ரவி செனவிரத்ன சந்தேக நபராக குறிப்பிடப்பட்டமையால் இந்த மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம்  தொடர்பான மூன்று ஆணைக்குழு அறிக்கைகளையும் வரவழைத்து விசாரணைகளில் தலையிடுமாறும் பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணி நீதிமன்றத்தை கோரியுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் குறித்து வெளியிடப்பட்டுள்ள பி அறிக்கை தொடர்பான ஆவணங்களை ஒருவர் பெற்றுக் கொண்ட விதம் பிரச்சினைக்குரியது எனவும் அதில் திருப்திப்பட முடியாது எனவும் சட்டத்தரணி நீதிமன்றில் தலையிடுமாறு கோரியுள்ளார்.

இந்தக் கோரிக்கையை பரிசீலித்த நீதவான், எதிர்வரும் நவம்பர் மாதம் 13ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு அழைப்பாணை அனுப்ப உத்தரவிட்டார்.

மனு ஒன்றை தாக்கல் செய்து இந்தக் கோரிக்கையை முன்வைத்த சட்டத்தரணி, தாக்குதல் தொடர்பான அறிக்கைகளை நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறும் கோரியுள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...