Tamil Leader News
முக்கியம்
தேசியப் பூங்காக்களில் பிகினி பிடிப்பு: சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் பாரிய இடைவெளி!●காவன்திஸ்ஸ துயரம்: யானையின் வயிற்றில் ஈயக் குண்டுகள்; விசாரணைகள் CID வசம்!●வீட்டுவசதி நெருக்கடியால் 14 ஆண்டுகளுக்குப் பின் ஸ்பெயினில் மாபெரும் பொது வேலைநிறுத்தம்!●நாடு திரும்புகிறார் அனோஜன் சிவராசா; சவூதியில் மரண தண்டனையிலிருந்து  பூரண விடுதலை!●1990 சுவசரிய சேவைக்கு இந்தியாவிலிருந்து மேலும் 100 நோயாளர் காவு வண்டிகள்; வருகை நேரம் 10 நிமிடங்களாகக் குறைகிறது!●நிதித்துறையில் எழுந்துள்ள புதிய அபாயங்கள் குறித்து மத்திய வங்கியிடமிருந்து விசேட எச்சரிக்கை!●6 மாதங்களில் 271 மில்லியன் நட்டம்: அரச ஊடகங்களுக்கு என்ன நேர்ந்தது?●DIGInote: 2027 வரவு-செலவுத் திட்டம் இன்று நாடாளுமன்றத்தில் - மூலதனச் செலவு 2 ட்ரில்லியன்!●2027 வரவு செலவுத் திட்டம்: இலக்கங்களின் ஸ்திரத்தன்மை மக்களின் பாக்கெட்டுக்குத் தெரியுமா?●இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●
செய்திகள்

மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தை அண்மித்தாக கைதானோர் குருணாகலை சேர்ந்தோரே!

T

The Leader Desk

அக்டோபர் 23, 2024 • 12:37 PM

மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தை அண்மித்தாக கைதானோர் குருணாகலை சேர்ந்தோரே!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • அண்மித்த பகுதியில் சந்தேகத்துக்கிடமாக நடமாடிய சந்தேகத்தில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
  • குருணாகல் சேர்ந்த குறித்த நபர்களான வயது 35, 25 உடைய இருவரையே இன்று (23) கைதுசெய்துள்ளதாக மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸார் தெரிவித்தனர்.
  • இதனையடுத்து நோய்க்குள்ளானவரும் அவருக்கு உதவியாக இருந்தவருமான இருவரும் குருணாலிலிருந்து இன்று காலை மட்டக்களப்பை சென்றடைந்து சீயோன் தேவாலயத்துக்குச் சென்று அப்பகுதியில் நடமாடிக் கொண்டிருந்தனர்.
எழுத்து அளவு:

அண்மித்த பகுதியில் சந்தேகத்துக்கிடமாக நடமாடிய  சந்தேகத்தில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குருணாகல் சேர்ந்த குறித்த நபர்களான வயது 35, 25 உடைய இருவரையே இன்று (23) கைதுசெய்துள்ளதாக மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸார் தெரிவித்தனர்.
 
குருணாகலைச் சேர்ந்த முஸ்லிம் ஒருவருக்கு கண்ணில் ஏற்பட்டுள்ள வெண்படல நோயைக் குணப்படுத்துவதற்காக மட்டக்களப்பு மென்ராசா வீதியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள சீயோன் தேவாலயத்தில் போதகருடன் தொடர்பு கொண்டுள்ளார்.
 
இதனையடுத்து நோய்க்குள்ளானவரும் அவருக்கு உதவியாக இருந்தவருமான இருவரும் குருணாலிலிருந்து இன்று காலை மட்டக்களப்பை சென்றடைந்து சீயோன் தேவாலயத்துக்குச் சென்று அப்பகுதியில் நடமாடிக் கொண்டிருந்தனர்.
 
இந்நிலையில், இவர்கள் சந்தேகத்துக்கு இடமாக நடமாடியதை அவதானித்த பொதுமக்கள் பொலிஸ் அவசர தொலைபேசி இலக்கத்துக்கு  தெரிவித்ததையடுத்து பொலிஸார் அந்த இடத்துக்குச் சென்று இருவரையும் கைது செய்தனர்.
 
சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட இருவரதும் கைவிரல் அடையாளம் பெற்று விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகப் பொலிஸார் தெரிவித்தனர். 
 
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...