Tamil Leader News
முக்கியம்
தேசியப் பூங்காக்களில் பிகினி பிடிப்பு: சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் பாரிய இடைவெளி!●காவன்திஸ்ஸ துயரம்: யானையின் வயிற்றில் ஈயக் குண்டுகள்; விசாரணைகள் CID வசம்!●வீட்டுவசதி நெருக்கடியால் 14 ஆண்டுகளுக்குப் பின் ஸ்பெயினில் மாபெரும் பொது வேலைநிறுத்தம்!●நாடு திரும்புகிறார் அனோஜன் சிவராசா; சவூதியில் மரண தண்டனையிலிருந்து  பூரண விடுதலை!●1990 சுவசரிய சேவைக்கு இந்தியாவிலிருந்து மேலும் 100 நோயாளர் காவு வண்டிகள்; வருகை நேரம் 10 நிமிடங்களாகக் குறைகிறது!●நிதித்துறையில் எழுந்துள்ள புதிய அபாயங்கள் குறித்து மத்திய வங்கியிடமிருந்து விசேட எச்சரிக்கை!●6 மாதங்களில் 271 மில்லியன் நட்டம்: அரச ஊடகங்களுக்கு என்ன நேர்ந்தது?●DIGInote: 2027 வரவு-செலவுத் திட்டம் இன்று நாடாளுமன்றத்தில் - மூலதனச் செலவு 2 ட்ரில்லியன்!●2027 வரவு செலவுத் திட்டம்: இலக்கங்களின் ஸ்திரத்தன்மை மக்களின் பாக்கெட்டுக்குத் தெரியுமா?●இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●
செய்திகள்

பொத்துவில் - அறுகம்பே பகுதியில் வீதித்தடைகள், சோதனைகள்! ( பிந்திய நிலைவரத் தகவல்கள்)

T

The Leader Desk

அக்டோபர் 23, 2024 • 8:35 AM

பொத்துவில் - அறுகம்பே பகுதியில் வீதித்தடைகள், சோதனைகள்! ( பிந்திய நிலைவரத் தகவல்கள்)

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • அறுகம்பை பகுதி சுற்றுலா இடங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்படக் கூடும் எனவும் அங்கு செல்வதை தவிர்க்குமாறும் அமெரிக்க பிரஜைகளுக்கு அந்நாட்டு தூதரகம் கடும் அறிவுறுத்தல் விடுத்துள்ள நிலையில் பாதுகாப்பு பலப்படுத்தபட்டுள்ளது.
  • பயண ஆலோசனையை வெளியிட்டு, அமெரிக்க தூதரகம் சந்தேகப்படும்படியான எதையும் கண்டால் 119 என்ற எண்ணுக்கு அழைக்குமாறு தெரிவித்துள்ளது.
  • இதேவேளை, கொழும்பில் அல்லது வேறு எந்த பிரதேசத்திலும் இவ்வாறான நிலைமை தொடர்பில் புலனாய்வுத் தகவல்கள் எதுவும் கிடைக்கப்பெறவில்லை எனவும், மக்கள் தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்த வேண்டாம் எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
எழுத்து அளவு:
அறுகம்பை பகுதி சுற்றுலா இடங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்படக் கூடும் எனவும் அங்கு செல்வதை தவிர்க்குமாறும் அமெரிக்க பிரஜைகளுக்கு அந்நாட்டு தூதரகம் கடும் அறிவுறுத்தல் விடுத்துள்ள நிலையில் பாதுகாப்பு பலப்படுத்தபட்டுள்ளது.
 
அப்பகுதியில் உள்ள பிரபல சுற்றுலா தலங்கள் மீது தாக்குதல் நடத்தப்படலாம் என நம்பகமான தகவல் கிடைத்துள்ளதாக தூதரகம் தெரிவித்துள்ளது.
 
பயண ஆலோசனையை வெளியிட்டு, அமெரிக்க தூதரகம் சந்தேகப்படும்படியான எதையும் கண்டால் 119 என்ற எண்ணுக்கு அழைக்குமாறு தெரிவித்துள்ளது.
 
z 27
 
இன்று (24) அதிகாலை அப்பகுதிக்கு விரைந்த முப்படையினர் உள்ளிட்ட பொலிஸார் சுற்றுலா முக்கியத்துவ இடங்கள் சந்தேகத்துக்கிடமான வாகனங்களை இடைமறித்து சோதனை செய்வதுடன் தற்காலிக வீதி தடைகளையும் ஏற்படுத்தி அப்பகுதியால் செல்லும் வாகனங்களையும் பதிவு செய்து வருகின்றனர்.அறுகம்பே பிரதேசத்தில் பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.
 
அறுகம்பே மற்றும் பொத்துவில் பிரதேசங்களில் இஸ்ரேலியர்கள் அதிகமாக அலைச்சறுக்கு (Surfing) நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகவும், எனவே அவர்களுக்கு ஆபத்து நேரிடலாம் என கடந்த சில நாட்களுக்கு முன்னர் தமக்கு தகவல் கிடைத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.
 
asp 1
 
இதேவேளை, கொழும்பில் அல்லது வேறு எந்த பிரதேசத்திலும் இவ்வாறான நிலைமை தொடர்பில் புலனாய்வுத் தகவல்கள் எதுவும் கிடைக்கப்பெறவில்லை எனவும், மக்கள் தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்த வேண்டாம் எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
 
பொத்துவில் அறுகம்பே பிரதேசத்தில் பயங்கரவாத தாக்குதல் ஒன்றுக்கான சாத்தியம் இருப்பதாக அமெரிக்கா எச்சரித்துள்ள நிலையில் இவ்வாறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
 
பொத்துவில் பிரதேசத்துக்கு வருகை தரும் இஸ்ரேலியப் பிரஜைகளை இலக்கு வைத்தே இந்தத் தாக்குதல்கள் நடைபெற இருந்ததாக மேலும் தெரிய வந்துள்ளது.
 
இதேவேளை, அறுகம்பை பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது தாக்குதல் நடத்தப்படலாம் என்ற அச்சுறுத்தல் காரணமாக இலங்கை பொலிஸாரின் அறிவுறுத்தலுக்கமைய செயற்படுமாறு தங்களது நாட்டு பிரஜைகளுக்கு ரஷ்ய தூதரகமும் அறிவுறுத்தல் விடுத்துள்ளது.
 
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...