Tamil Leader News
முக்கியம்
தேசியப் பூங்காக்களில் பிகினி பிடிப்பு: சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் பாரிய இடைவெளி!●காவன்திஸ்ஸ துயரம்: யானையின் வயிற்றில் ஈயக் குண்டுகள்; விசாரணைகள் CID வசம்!●வீட்டுவசதி நெருக்கடியால் 14 ஆண்டுகளுக்குப் பின் ஸ்பெயினில் மாபெரும் பொது வேலைநிறுத்தம்!●நாடு திரும்புகிறார் அனோஜன் சிவராசா; சவூதியில் மரண தண்டனையிலிருந்து  பூரண விடுதலை!●1990 சுவசரிய சேவைக்கு இந்தியாவிலிருந்து மேலும் 100 நோயாளர் காவு வண்டிகள்; வருகை நேரம் 10 நிமிடங்களாகக் குறைகிறது!●நிதித்துறையில் எழுந்துள்ள புதிய அபாயங்கள் குறித்து மத்திய வங்கியிடமிருந்து விசேட எச்சரிக்கை!●6 மாதங்களில் 271 மில்லியன் நட்டம்: அரச ஊடகங்களுக்கு என்ன நேர்ந்தது?●DIGInote: 2027 வரவு-செலவுத் திட்டம் இன்று நாடாளுமன்றத்தில் - மூலதனச் செலவு 2 ட்ரில்லியன்!●2027 வரவு செலவுத் திட்டம்: இலக்கங்களின் ஸ்திரத்தன்மை மக்களின் பாக்கெட்டுக்குத் தெரியுமா?●இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●
செய்திகள்

ஜோன்ஸ்டனைக் கைது செய்ய சிஐடியினர் குருணாகலுக்கு சென்றனர்

T

The Leader Desk

அக்டோபர் 23, 2024 • 1:40 AM

ஜோன்ஸ்டனைக் கைது செய்ய சிஐடியினர்  குருணாகலுக்கு சென்றனர்

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • (தயாரிக்கப்பட்ட) செய்யப்பட்ட சொகுசு BMW கார் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் சம்பவத்தின் சந்தேக நபரான முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை கைது செய்வதற்காக குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் விசேட அதிகாரிகள் குழு நேற்று (22) கொழும்பில் இருந்து குருணாகலுக்கு சென்றுள்ளது.
  • இச்சம்பவம் தொடர்பில் இதுவரையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் மூலம் தெரிய வந்துள்ள உண்மைகளின்படி, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ என்ற சந்தேக நபர் இலங்கை தண்டனைச் சட்டம் மற்றும் மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் தண்டனைக்குரிய குற்றங்களைச் செய்துள்ளதாகத் தெரிய வந்துள்ளது.
  • முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் முறையான விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் கோட்டை நீதிவானிடம் தெரிவித்துள்ளனர்.
எழுத்து அளவு:

(தயாரிக்கப்பட்ட)  செய்யப்பட்ட சொகுசு BMW கார் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் சம்பவத்தின் சந்தேக நபரான முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை கைது செய்வதற்காக குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் விசேட அதிகாரிகள் குழு நேற்று (22) கொழும்பில் இருந்து குருணாகலுக்கு சென்றுள்ளது.

மோட்டார் போக்குவரத்து  திணைக்களத்தில் பதிவு செய்யாது வரி ஏய்ப்புச் செய்து சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டு வரப்பட்டு, சட்டவிரோதமான முறையில் அசெம்பிள் செய்து வாகனத்தைப் பயன்படுத்தியமை, போலி இலக்கத் தகட்டைப் பொருத்தியமை மற்றும் கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் மறைத்து வைக்குமாறு உத்தரவிட்டமை உள்ளிட்ட  குற்றச்சாட்டுக்களின் கீழ் முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக குற்றப் புலனாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
 
இச்சம்பவம் தொடர்பில் இதுவரையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் மூலம் தெரிய வந்துள்ள உண்மைகளின்படி, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ என்ற சந்தேக நபர் இலங்கை தண்டனைச் சட்டம் மற்றும் மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் தண்டனைக்குரிய குற்றங்களைச் செய்துள்ளதாகத் தெரிய வந்துள்ளது.
 
முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் முறையான விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் கோட்டை நீதிவானிடம் தெரிவித்துள்ளனர்.
 
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...