Tamil Leader News
முக்கியம்
தேசியப் பூங்காக்களில் பிகினி பிடிப்பு: சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் பாரிய இடைவெளி!●காவன்திஸ்ஸ துயரம்: யானையின் வயிற்றில் ஈயக் குண்டுகள்; விசாரணைகள் CID வசம்!●வீட்டுவசதி நெருக்கடியால் 14 ஆண்டுகளுக்குப் பின் ஸ்பெயினில் மாபெரும் பொது வேலைநிறுத்தம்!●நாடு திரும்புகிறார் அனோஜன் சிவராசா; சவூதியில் மரண தண்டனையிலிருந்து  பூரண விடுதலை!●1990 சுவசரிய சேவைக்கு இந்தியாவிலிருந்து மேலும் 100 நோயாளர் காவு வண்டிகள்; வருகை நேரம் 10 நிமிடங்களாகக் குறைகிறது!●நிதித்துறையில் எழுந்துள்ள புதிய அபாயங்கள் குறித்து மத்திய வங்கியிடமிருந்து விசேட எச்சரிக்கை!●6 மாதங்களில் 271 மில்லியன் நட்டம்: அரச ஊடகங்களுக்கு என்ன நேர்ந்தது?●DIGInote: 2027 வரவு-செலவுத் திட்டம் இன்று நாடாளுமன்றத்தில் - மூலதனச் செலவு 2 ட்ரில்லியன்!●2027 வரவு செலவுத் திட்டம்: இலக்கங்களின் ஸ்திரத்தன்மை மக்களின் பாக்கெட்டுக்குத் தெரியுமா?●இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●
செய்திகள்

யாழ்ப்பாணம் நீதிமன்றத்தை தவிர எங்கு சென்றும் சாட்சியமளிக்க தயார்! - கோட்டாபய ராஜபக்‌ஷ

T

The Leader Desk

அக்டோபர் 22, 2024 • 7:57 PM

யாழ்ப்பாணம் நீதிமன்றத்தை தவிர  எங்கு சென்றும் சாட்சியமளிக்க தயார்! - கோட்டாபய ராஜபக்‌ஷ

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இந்த மனு பிரிதி பத்மன் சூரசேன, ஷிரான் குணரத்ன மற்றும் அச்சல வெங்கப்புலி ஆகிய மூவரடங்கிய உயர் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
  • ஆனால், யாழ்ப்பாணம் நீதிமன்றத்தைத் தவிர வேறு நீதிமன்றங்களில் சாட்சியமளிக்கத் தயாராக இருப்பதாகவும் ஜனாதிபதி சட்டத்தரணி குறிப்பிட்டார். இந்நிலையில், இந்த மனுவை எதிர்வரும் மார்ச் மாதம் 18ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ள நீதிமன்றம் உத்தரவிட்டது.
  • அப்போது, ​​கோட்டாபய ராஜபக்க்ஷ சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா, குறித்த வழக்கு தொடர்பாக யாழ்ப்பாணம் நீதிமன்றில் சாட்சியமளிக்க முடியாது என தமது கட்சிக்காரரின் நிலைப்பாட்டை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தினார்.
எழுத்து அளவு:

மனித உரிமை  செயற்பாட்டாளர்களான லலித் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் தொடர்பான வழக்கு விசாரணையின் சாட்சியாளராக பெயரிடப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ, யாழ் நீதிவான் நீதிமன்றத்தைத் தவிர்ந்த  நாட்டிலுள்ள வேறு எந்த நீதிமன்றத்திலும் சாட்சியமளிக்கத் தயார் என அவரது சட்டத்தரணி ஊடாக உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். 

யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் இடம்பெற்ற வழக்கு விசாரணையில் சாட்சியமளிக்க முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷவை அழைக்க முடியாது என மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் தாக்கல் செய்யப்பட்ட மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. 
 
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா இதனை நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.
 
இந்த மனு பிரிதி பத்மன் சூரசேன, ஷிரான் குணரத்ன மற்றும் அச்சல வெங்கப்புலி ஆகிய மூவரடங்கிய உயர் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
 
அப்போது, ​​கோட்டாபய ராஜபக்க்ஷ சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா, குறித்த வழக்கு தொடர்பாக யாழ்ப்பாணம் நீதிமன்றில் சாட்சியமளிக்க முடியாது என தமது கட்சிக்காரரின் நிலைப்பாட்டை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தினார்.
 
ஆனால், யாழ்ப்பாணம் நீதிமன்றத்தைத் தவிர வேறு நீதிமன்றங்களில் சாட்சியமளிக்கத் தயாராக இருப்பதாகவும் ஜனாதிபதி சட்டத்தரணி குறிப்பிட்டார். 
 
இந்நிலையில், இந்த மனுவை எதிர்வரும் மார்ச் மாதம் 18ஆம் திகதி  விசாரணைக்கு எடுத்துக் கொள்ள நீதிமன்றம் உத்தரவிட்டது.
 
லலித் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் ஆகியோர் 2011 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 10 ஆம் திகதி காணாமல் போனமை தொடர்பில் அவர்களது உறவினர்களினால் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட ஆட்கொணர்வு மனு தொடர்பில் சாட்சியமளிக்க 2019 ஆம் ஆண்டு செப்டம்பர் 27 ஆம் திகதி ஆஜராகுமாறு அப்போதைய பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்க்ஷவுக்கு அறிவிக்கப்பட்டது.
 
தமது உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதால் சாட்சியமளிக்க யாழ்ப்பாண நீதிவான் நீதிமன்றத்துக்குச் செல்ல முடியாது எனவும் எனவே, குறித்த அழைப்பாணையை செல்லுபடியற்றதாக்கி உத்தரவு பிறப்பிக்குமாறும் கோரி கோட்டாபய ராஜபக்க்ஷ 2019 ஆம் ஆண்டு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுவொன்றை சமர்ப்பித்திருந்தார்.
 
அந்தக் கோரிக்கையை பரிசீலித்த மேன்முறையீட்டு நீதிமன்றம் ஜனாதிபதியாக செயற்படுவதால் கோட்டாபய ராஜபக்க்ஷவை சாட்சியமளிக்க அழைக்க முடியாது என அப்போது உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.
 
மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பு சட்டத்துக்கு முரணானது எனவும், கோட்டாபய ராஜபக்க்ஷ தற்போது ஜனாதிபதி பதவியை இராஜினாமா செய்துள்ளதால் அவரை சாட்சியமளிக்க அழைக்குமாறும் கோரி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் உயர் நீதிமன்றில் இந்த மனுவை சமர்ப்பித்துள்ளனர்
 
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...