Tamil Leader News
முக்கியம்
தேசியப் பூங்காக்களில் பிகினி பிடிப்பு: சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் பாரிய இடைவெளி!●காவன்திஸ்ஸ துயரம்: யானையின் வயிற்றில் ஈயக் குண்டுகள்; விசாரணைகள் CID வசம்!●வீட்டுவசதி நெருக்கடியால் 14 ஆண்டுகளுக்குப் பின் ஸ்பெயினில் மாபெரும் பொது வேலைநிறுத்தம்!●நாடு திரும்புகிறார் அனோஜன் சிவராசா; சவூதியில் மரண தண்டனையிலிருந்து  பூரண விடுதலை!●1990 சுவசரிய சேவைக்கு இந்தியாவிலிருந்து மேலும் 100 நோயாளர் காவு வண்டிகள்; வருகை நேரம் 10 நிமிடங்களாகக் குறைகிறது!●நிதித்துறையில் எழுந்துள்ள புதிய அபாயங்கள் குறித்து மத்திய வங்கியிடமிருந்து விசேட எச்சரிக்கை!●6 மாதங்களில் 271 மில்லியன் நட்டம்: அரச ஊடகங்களுக்கு என்ன நேர்ந்தது?●DIGInote: 2027 வரவு-செலவுத் திட்டம் இன்று நாடாளுமன்றத்தில் - மூலதனச் செலவு 2 ட்ரில்லியன்!●2027 வரவு செலவுத் திட்டம்: இலக்கங்களின் ஸ்திரத்தன்மை மக்களின் பாக்கெட்டுக்குத் தெரியுமா?●இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●
செய்திகள்

ராஜபக்க்ஷவின் சித்தாந்தத்தை ஜே.வி.பி.யினர் கைவிட வேண்டும் மு.கா.தலைவர் ஹக்கீம் கோரிக்கை

T

The Leader Desk

அக்டோபர் 22, 2024 • 3:56 PM

ராஜபக்க்ஷவின் சித்தாந்தத்தை ஜே.வி.பி.யினர் கைவிட வேண்டும் மு.கா.தலைவர் ஹக்கீம் கோரிக்கை

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • தொடர்பில்( ஜே.வி.பி.யினர் ராஜபக்ஷக்களின் சித்தாந்தத்தை பின்பற்றுவதை முழுமையாக கைவிட வேண்டும் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், கண்டி மாவட்ட முதன்மை வேட்பாளருமான ரவூப் ஹக்கீம் பகிரங்க கோரிக்கை விடுத்துள்ளார்.
  • ஜே.வி.பி.யின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா, அதிகாரப்பகிர்வு, 13ஆவது திருத்தச்சட்டம் சம்பந்தமாக வெளியிட்டுள்ள கருத்துக்கு பதிலளிக்கும் வகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
  • அதன் பின்னர் இந்திய, இலங்கை ஒப்பந்தத்துக்கு 13ஆவது திருத்தச்சட்டத்துக்கு எதிர்ப்பினை வெளியிட்டு போராடினார்கள்.
  • அந்த சித்தாந்தம் ஜே.வி.பிக்குள் தற்போது எட்டிப் பார்க்கின்றது. தற்போது நாட்டின் அனைத்து மக்களும் ஐக்கிய இலங்கைக்குள் வாழவேண்டும் என்பதை தெளிவாக வெளிப்படுத்தியுள்ளார்கள்.
எழுத்து அளவு:
தொடர்பில்( ஜே.வி.பி.யினர் ராஜபக்ஷக்களின் சித்தாந்தத்தை பின்பற்றுவதை முழுமையாக கைவிட வேண்டும் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், கண்டி மாவட்ட முதன்மை வேட்பாளருமான ரவூப் ஹக்கீம் பகிரங்க கோரிக்கை விடுத்துள்ளார்.
 
ஜே.வி.பி.யின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா, அதிகாரப்பகிர்வு, 13ஆவது திருத்தச்சட்டம் சம்பந்தமாக வெளியிட்டுள்ள கருத்துக்கு பதிலளிக்கும் வகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
 
அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஜே.வி.பியினர் மார்க்சிச இடதுசாரித்துவக் கொள்கையைக் கொண்டவர்கள். அவர்கள் இரண்டு கிளர்ச்சிகளைச் செய்ததன் பின்னர் மீண்டும் ஜனநாயக வழிக்கு வந்தார்கள். அதன் பின்னர் இந்திய, இலங்கை ஒப்பந்தத்துக்கு 13ஆவது திருத்தச்சட்டத்துக்கு எதிர்ப்பினை வெளியிட்டு போராடினார்கள்.
 
பின்னர் அவற்றையெல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு, மாகாண சபைகளுக்கான தேர்தலில் பங்கேற்று உறுப்புரிமைகளையும் பெற்றுக்கொண்டார்கள். இந்தச் செயற்பாடானது அவர்களின் முற்போக்கான வரவேற்கக் கூடியதொரு பிரதிபலிப்பாகக் காணப்பட்டது. 
 
அதுமட்டுமன்றி நடைபெற்று நிறைவடைந்த ஜனாதிபதி தேர்தலில் ஜே.வி.பி.தலைமையிலான தேசிய மக்கள் சக்தியினர், மாகாண சபை முறைமையை அமுலாக்கப் போவதாகவே அறிவித்திருந்தனர். 
 
இருப்பினும் தற்போது அவர்கள் 13ஆவது திருத்தச்சட்டத்துக்கு எதிரான நிலைப்பாடுகளையும், அதிகாரப்பகிர்வு அவசியமில்லை என்ற தோற்றப்பாட்டிலும் கருத்துக்களை பகிர்ந்துள்ளார்கள்.
 
உண்மையில், அதிகாரப்பகிர்வு தேவையில்லை, அபிவிருத்தி தான் அவசியம் என்பது ராஜபக்க்ஷக்களின் சித்தாந்தம். அந்த சித்தாந்தம் ஜே.வி.பிக்குள் தற்போது எட்டிப் பார்க்கின்றது. 
தற்போது நாட்டின் அனைத்து மக்களும் ஐக்கிய இலங்கைக்குள் வாழவேண்டும் என்பதை தெளிவாக வெளிப்படுத்தியுள்ளார்கள்.
 
இவ்வாறான நிலையில் அந்தந்த இனங்களுக்குரிய தனித்துவம் பாதுகாக்கப்பட்டு சுயாட்சி அளிக்கப்பட வேண்டும். 
தங்களைத் தாங்களே ஆளுகின்ற வகையில் அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும். அதன் மூலமாகத்தான் நாட்டில் உள்ள இனங்களுக்கு இடையிலான நீண்டகால முரண்பாடுகளுக்கு தீர்வினை எட்ட முடியும்.
 
ஆகவே ஜே.வி.பி.அதிகாரப்பகிர்வு சம்பந்தமான தமது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள வேண்டும். அவர்கள் மாற்றத்தினை ஏற்படுத்துவதாக இருந்தால் முதலில் அவர்களின் கொள்கையில் மாற்றம் ஏற்படுவது அவசியமாகும். அதிகாரங்கள் பகிரப்படாமல் உண்மையான மாற்றத்தினை அடைவது கடினமான காரியமாகும். 
 
அதுமட்டுமன்றி, அவர்கள் முன்னுக்குப் பின்னாக தமது கொள்கைகளை மாற்றி மாற்றி வெளிப்படுத்துவதை தவிர்க்க வேண்டும். தங்களுடைய நிலைப்பாட்டை தெளிவாகக் கூட வேண்டியது அவசியமாகின்றது என்றார். (நன்றி வீரகேசரி வாரவெளியீடு)
 
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...