Tamil Leader News
முக்கியம்
தேசியப் பூங்காக்களில் பிகினி பிடிப்பு: சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் பாரிய இடைவெளி!●காவன்திஸ்ஸ துயரம்: யானையின் வயிற்றில் ஈயக் குண்டுகள்; விசாரணைகள் CID வசம்!●வீட்டுவசதி நெருக்கடியால் 14 ஆண்டுகளுக்குப் பின் ஸ்பெயினில் மாபெரும் பொது வேலைநிறுத்தம்!●நாடு திரும்புகிறார் அனோஜன் சிவராசா; சவூதியில் மரண தண்டனையிலிருந்து  பூரண விடுதலை!●1990 சுவசரிய சேவைக்கு இந்தியாவிலிருந்து மேலும் 100 நோயாளர் காவு வண்டிகள்; வருகை நேரம் 10 நிமிடங்களாகக் குறைகிறது!●நிதித்துறையில் எழுந்துள்ள புதிய அபாயங்கள் குறித்து மத்திய வங்கியிடமிருந்து விசேட எச்சரிக்கை!●6 மாதங்களில் 271 மில்லியன் நட்டம்: அரச ஊடகங்களுக்கு என்ன நேர்ந்தது?●DIGInote: 2027 வரவு-செலவுத் திட்டம் இன்று நாடாளுமன்றத்தில் - மூலதனச் செலவு 2 ட்ரில்லியன்!●2027 வரவு செலவுத் திட்டம்: இலக்கங்களின் ஸ்திரத்தன்மை மக்களின் பாக்கெட்டுக்குத் தெரியுமா?●இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●
செய்திகள்

வங்குரோத்து நிலையிலிருந்து நாட்டை மீட்பதே நமது நோக்கமாக இருக்க வேண்டும்! - சஜித் பிரேமதாச

T

The Leader Desk

அக்டோபர் 22, 2024 • 5:40 AM

வங்குரோத்து நிலையிலிருந்து நாட்டை மீட்பதே நமது நோக்கமாக இருக்க வேண்டும்! - சஜித் பிரேமதாச

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • அரசாங்கம் தற்போதைய ஜனாதிபதியுடன் கைகோர்த்து IMF உடன்படிக்கையில் திருத்தம் செய்து மக்களுக்கு நன்மை பயக்கும் வகையில் அதனை முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.
  • இந்த நாட்டை வங்குரோத்து நிலையில் இருந்து மீட்பதே நமது நோக்கமாக இருக்க வேண்டும். இந்த வங்குரோத்து நிலையால் பாதிக்கப்பட்ட மற்றும் துயரத்தில் உள்ள அனைவரையும் பலப்படுத்தி பாதுகாப்பது நமது பொறுப்பாக இருக்க வேண்டும்.
  • IMF 2033 இல் இருந்து கடனை கட்டலாம் என்று கூறி இருந்த போதும் அரசாங்கம் அதை 2028 ஆக குறைத்துள்ளது.
எழுத்து அளவு:

அரசாங்கம் தற்போதைய ஜனாதிபதியுடன் கைகோர்த்து IMF உடன்படிக்கையில் திருத்தம் செய்து மக்களுக்கு நன்மை பயக்கும் வகையில் அதனை முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.

ஐக்கிய மக்கள் சக்தி எதிர்க்கட்சியில் இருந்து கொண்டே சர்வதேச நாணய நிதியத்துடன் பல சுற்று பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு பல புரிதல்களை எட்டியது. 
 
தற்போதைய ஆட்சியாளர்களாலும் இந்த இணக்கப்பாட்டை மாற்ற முடியாது போனாலும், ஐக்கிய மக்கள் சக்தியால் அதனைச் செய்ய முடியும் என ஐக்கிய மக்கள் சக்தி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். 
 
தேர்தல் நடைமுறை என்பது ஒரு ஜனநாயக நாட்டின் முக்கிய அம்சமாகும். தேர்தல்கள் மூலம் நாட்டு மக்கள் ஜனாதிபதிக்கு, பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு, மாகாண சபை உறுப்பினர்களுக்கு மற்றும் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கு அதிகாரத்தை வழங்குகின்றனர். இந்த பெறுமதியான செயற்பாடு பாதுகாக்கப்பட்டு ஜனநாயகம் பேணப்பட வேண்டும். இந்த முறைமையினால் சாதாரண மக்களின் குரலுக்கு உரிய பெறுமதி கிடைக்கும் எனவும் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
 
ஐக்கிய மக்கள் சக்தியின் பொரலை தேர்தல் தொகுதி கட்சி செயற்பாட்டாளர்களுடனான சந்திப்பொன்று ஐக்கிய மக்கள் சக்தியினதும் ஐக்கிய மக்கள் கூட்டணியினதும் தலைவரான சஜித் பிரேமதாச தலைமையில்  அண்மையில் பொரல்லையில் இடம்பெற்றது. 
 
ஐக்கிய மக்கள் சக்தியின் பொரல்ல தேர்தல் தொகுதி அமைப்பாளர் ஜனக நந்தகுமார ஏற்பாடு செய்யப்பட்ட இச்சந்திப்பில் கட்சி செயற்பாட்டாளர்கள் பலர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே போதே சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார். 
 
எந்த தேர்தலை நடத்தினாலும் வங்குரோத்து நிலையில் கடனை அடைக்க முடியாத நாடாக இருந்து வருகிறோம். இந்த நாட்டை வங்குரோத்து நிலையில் இருந்து மீட்பதே நமது நோக்கமாக இருக்க வேண்டும். 
 
இந்த வங்குரோத்து நிலையால் பாதிக்கப்பட்ட மற்றும் துயரத்தில் உள்ள அனைவரையும் பலப்படுத்தி பாதுகாப்பது நமது பொறுப்பாக இருக்க வேண்டும். நாட்டை வங்குரோத்து நிலையில் இருந்து மீட்பதற்கு சிறந்த வேலைத்திட்டமும் சிறந்த தொலைநோக்கு பார்வை கொண்ட கட்சியும், குழுவும் யாருடன் உள்ளனர் என்பதை இந்த ஆண்டு பொதுத் தேர்தலில் மக்கள் சிந்திக்க வேண்டும். 
 
2028 ஆம் ஆண்டு முதல் கடனை செலுத்துவதற்கான ஒப்பந்தங்களில் முன்னாள் ஜனாதிபதியும் அரசாங்கமும் கைச்சாத்திட்டுள்ளனர். IMF 2033 இல் இருந்து கடனை கட்டலாம் என்று கூறி இருந்த போதும் அரசாங்கம் அதை 2028 ஆக குறைத்துள்ளது. 2028 முதல் கடனை செலுத்த, போதுமான அந்நிய செலாவணி கையிருப்பு இங்கு இருக்க வேண்டும். ஆனால் இன்று ஒரு நாடாக நாம் கடினமான நிலையில் இருக்கிறோம். பொருளாதாரம் சுருங்கி, மக்களின் வாழ்வாதாரம் அழிந்து, நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதம் நலிவடைந்துள்ள நிலையில், விரைவான பொருளாதார வளர்ச்சியை எட்ட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
 
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

வங்குரோத்து நிலையிலிருந்து நாட்டை மீட்பதே நமது நோக்கமாக இருக்க வேண்டும்! - சஜித் பிரேமதாச | Tamil Leader | We Lead the Nation