Tamil Leader News
முக்கியம்
தேசியப் பூங்காக்களில் பிகினி பிடிப்பு: சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் பாரிய இடைவெளி!●காவன்திஸ்ஸ துயரம்: யானையின் வயிற்றில் ஈயக் குண்டுகள்; விசாரணைகள் CID வசம்!●வீட்டுவசதி நெருக்கடியால் 14 ஆண்டுகளுக்குப் பின் ஸ்பெயினில் மாபெரும் பொது வேலைநிறுத்தம்!●நாடு திரும்புகிறார் அனோஜன் சிவராசா; சவூதியில் மரண தண்டனையிலிருந்து  பூரண விடுதலை!●1990 சுவசரிய சேவைக்கு இந்தியாவிலிருந்து மேலும் 100 நோயாளர் காவு வண்டிகள்; வருகை நேரம் 10 நிமிடங்களாகக் குறைகிறது!●நிதித்துறையில் எழுந்துள்ள புதிய அபாயங்கள் குறித்து மத்திய வங்கியிடமிருந்து விசேட எச்சரிக்கை!●6 மாதங்களில் 271 மில்லியன் நட்டம்: அரச ஊடகங்களுக்கு என்ன நேர்ந்தது?●DIGInote: 2027 வரவு-செலவுத் திட்டம் இன்று நாடாளுமன்றத்தில் - மூலதனச் செலவு 2 ட்ரில்லியன்!●2027 வரவு செலவுத் திட்டம்: இலக்கங்களின் ஸ்திரத்தன்மை மக்களின் பாக்கெட்டுக்குத் தெரியுமா?●இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●
செய்திகள்

முன்னாள் எம்பி ஸ்ரீரங்காவைத் தேடும் கொழும்பு குற்றப் பிரிவு பொலிஸார்!

T

The Leader Desk

அக்டோபர் 22, 2024 • 4:05 AM

முன்னாள் எம்பி ஸ்ரீரங்காவைத் தேடும் கொழும்பு குற்றப் பிரிவு பொலிஸார்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • அவமதிக்கும் வகையில் கொழும்பு நகரில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்ட சம்பவத்தின் மூளையாக சந்தேகிக்கப்படும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜே.
  • ஸ்ரீ ரங்கா வீட்டை விட்டு தலைமறைவாகியுள்ளார் என கொழும்பு குற்றப்பிரிவு நேற்று (21) கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றில் அறிவித்தது.
  • ஸ்ரீரங்காவை கைது செய்ய மேலதிக விசாரணைகள் நடத்தப்படும் என தெரிவித்த கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகள், அவர் பம்பலப்பிட்டி பகுதியில் உள்ள தனது வீட்டிலிருந்து வெளியேறிச் சென்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
  • இந்தச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 8 சந்தேக நபர்களில் 4 பேரை பிணையில் விடுவிக்குமாறு உத்தரவிட்ட பிரதம நீதவான், வழக்கை நவம்பர் 4 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.
எழுத்து அளவு:

அவமதிக்கும் வகையில் கொழும்பு நகரில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்ட சம்பவத்தின் மூளையாக சந்தேகிக்கப்படும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜே. ஸ்ரீ ரங்கா வீட்டை விட்டு தலைமறைவாகியுள்ளார் என கொழும்பு குற்றப்பிரிவு நேற்று (21) கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றில் அறிவித்தது.

பிரதான சந்தேக நபரைக் கைது செய்வதற்காகவே இந்த விசாரணை மேற்கொள்ளப்பட்டதா என கொழும்பு பிரதான நீதிவான் திலின கமகே வினவியபோதே கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகள் இவ்வாறு தெரிவித்தனர்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜே. ஸ்ரீரங்காவை கைது செய்ய மேலதிக விசாரணைகள் நடத்தப்படும் என தெரிவித்த கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகள், அவர் பம்பலப்பிட்டி பகுதியில் உள்ள தனது வீட்டிலிருந்து வெளியேறிச் சென்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர்கள் முன்னாள் எம்பி ஸ்ரீரங்கா வழங்கிய அறிவுறுத்தல்களை பின்பற்றியதாக தெரிவித்துள்ளதாக கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.

சந்தேக நபர்கள் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி மைத்திரி குணரத்ன, சம்பவம் தொடர்பில் சாட்சியமளித்தவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டினார்.

வழக்குகளில் சாட்சிகளாக இருக்க வேண்டியவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டால், பொலிஸாரால் வழக்குகளை நிரூபிக்க முடியாது என ஜனாதிபதி சட்டத்தரணி மைத்திரி குணரத்ன சுட்டிக்காட்டினார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 8 சந்தேக நபர்களில் 4 பேரை பிணையில் விடுவிக்குமாறு உத்தரவிட்ட பிரதம நீதவான், வழக்கை நவம்பர் 4 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...