Tamil Leader News
முக்கியம்
தேசியப் பூங்காக்களில் பிகினி பிடிப்பு: சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் பாரிய இடைவெளி!●காவன்திஸ்ஸ துயரம்: யானையின் வயிற்றில் ஈயக் குண்டுகள்; விசாரணைகள் CID வசம்!●வீட்டுவசதி நெருக்கடியால் 14 ஆண்டுகளுக்குப் பின் ஸ்பெயினில் மாபெரும் பொது வேலைநிறுத்தம்!●நாடு திரும்புகிறார் அனோஜன் சிவராசா; சவூதியில் மரண தண்டனையிலிருந்து  பூரண விடுதலை!●1990 சுவசரிய சேவைக்கு இந்தியாவிலிருந்து மேலும் 100 நோயாளர் காவு வண்டிகள்; வருகை நேரம் 10 நிமிடங்களாகக் குறைகிறது!●நிதித்துறையில் எழுந்துள்ள புதிய அபாயங்கள் குறித்து மத்திய வங்கியிடமிருந்து விசேட எச்சரிக்கை!●6 மாதங்களில் 271 மில்லியன் நட்டம்: அரச ஊடகங்களுக்கு என்ன நேர்ந்தது?●DIGInote: 2027 வரவு-செலவுத் திட்டம் இன்று நாடாளுமன்றத்தில் - மூலதனச் செலவு 2 ட்ரில்லியன்!●2027 வரவு செலவுத் திட்டம்: இலக்கங்களின் ஸ்திரத்தன்மை மக்களின் பாக்கெட்டுக்குத் தெரியுமா?●இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●
செய்திகள்

ஈஸ்டர் தின தாக்குதலுக்குப் பின் முஸ்லிம்களை பயமுறுத்த வீதியில் இறங்கியவர்தான் கம்மன்பில என குற்றச்சாட்டு!

T

The Leader Desk

அக்டோபர் 22, 2024 • 3:33 AM

ஈஸ்டர் தின தாக்குதலுக்குப் பின் முஸ்லிம்களை பயமுறுத்த வீதியில் இறங்கியவர்தான் கம்மன்பில என குற்றச்சாட்டு!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • பார்ப்பதற்காக நாட்டு மக்கள் இந்த அரசாங்கத்தை தெரிவு செய்யவில்லை என இலங்கை தொழிலாளர் மக்கள் முன்னணியின் தலைவர் சமீர பெரேரா தெரிவித்தார்.
  • இன, மத பிரச்சினைகளை விதைத்து கோட்டாபய ராஜபக்க்ஷவை ஆட்சிக்கு கொண்டு வந்து பலம் வாய்ந்த அமைச்சுப் பதவியை வகித்த போது கிராம மக்கள் உறங்கிக் கொண்டிருந்தார்களா?
  • ஹட்டனில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே சமீர பெரேரா இவ்வாறு தெரிவித்தார்.
எழுத்து அளவு:

பார்ப்பதற்காக நாட்டு மக்கள்  இந்த அரசாங்கத்தை தெரிவு செய்யவில்லை என இலங்கை தொழிலாளர் மக்கள் முன்னணியின் தலைவர் சமீர பெரேரா தெரிவித்தார்.

ஹட்டனில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே சமீர பெரேரா இவ்வாறு தெரிவித்தார்.

இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் மேலும் கருத்து தெரிவித்த  அவர், ஈஸ்டர் தாக்குதல் அரசியல் உதைபந்தாட்டமாக மாறியுள்ளது, காலம் முழுக்க அதனை நாம் பார்த்து வருகிறோம், சமீபத்தில் வெளிவந்தது கம்மன்பிலவின் ரிலா நடனமாகும்

கம்மன்பிலவின்  நடனங்களை பார்க்க நாட்டு மக்கள் அரசாங்கத்தை நியமிக்கவில்லை, உதய கம்மன்பில ஓர் அரசியல் அனாதை, அவர் ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்குவதற்காக இதைச் செய்யவில்லை, இது அவரது தேர்தல் பிரசாரம்.

ஈஸ்டர் தாக்குதலைச் இனவாதத்தைப் பரப்பிய ராஜபக்க்ஷ குண்டர் இவர், ஈஸ்டர் தாக்குதலுக்குப் பிறகு முஸ்லிம்களை பயமுறுத்துவதற்காக வீதியில் அலைந்தவர்கள் இவர்கள்.

இன, மத பிரச்சினைகளை விதைத்து கோட்டாபய ராஜபக்க்ஷவை ஆட்சிக்கு கொண்டு வந்து பலம் வாய்ந்த அமைச்சுப் பதவியை வகித்த போது கிராம மக்கள் உறங்கிக் கொண்டிருந்தார்களா?

கோட்டாய ராஜபக்க்ஷவிடம் விசாரணை நடத்திய அதிகாரிகள் அங்கும் இங்கும் இழுத்துச் செல்லும்போது அவர் தூங்கிக் கொண்டிருந்தாரா? அப்போது பேச முடியவில்லை.

எந்தவொரு அறிக்கையையும் மறைக்கத் தேவையில்லை, அவை மக்களுக்கு வெளிப்படுத்தப்பட வேண்டும், மேலும் இந்த தாக்குதலால் நாட்டு மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...