Tamil Leader News
முக்கியம்
தேசியப் பூங்காக்களில் பிகினி பிடிப்பு: சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் பாரிய இடைவெளி!●காவன்திஸ்ஸ துயரம்: யானையின் வயிற்றில் ஈயக் குண்டுகள்; விசாரணைகள் CID வசம்!●வீட்டுவசதி நெருக்கடியால் 14 ஆண்டுகளுக்குப் பின் ஸ்பெயினில் மாபெரும் பொது வேலைநிறுத்தம்!●நாடு திரும்புகிறார் அனோஜன் சிவராசா; சவூதியில் மரண தண்டனையிலிருந்து  பூரண விடுதலை!●1990 சுவசரிய சேவைக்கு இந்தியாவிலிருந்து மேலும் 100 நோயாளர் காவு வண்டிகள்; வருகை நேரம் 10 நிமிடங்களாகக் குறைகிறது!●நிதித்துறையில் எழுந்துள்ள புதிய அபாயங்கள் குறித்து மத்திய வங்கியிடமிருந்து விசேட எச்சரிக்கை!●6 மாதங்களில் 271 மில்லியன் நட்டம்: அரச ஊடகங்களுக்கு என்ன நேர்ந்தது?●DIGInote: 2027 வரவு-செலவுத் திட்டம் இன்று நாடாளுமன்றத்தில் - மூலதனச் செலவு 2 ட்ரில்லியன்!●2027 வரவு செலவுத் திட்டம்: இலக்கங்களின் ஸ்திரத்தன்மை மக்களின் பாக்கெட்டுக்குத் தெரியுமா?●இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●
செய்திகள்

அநுரகுமார அரசின் மீது அடுக்கடுக்காக குற்றச்சாட்டுக்கள்!

T

The Leader Desk

அக்டோபர் 20, 2024 • 5:21 AM

அநுரகுமார அரசின் மீது அடுக்கடுக்காக குற்றச்சாட்டுக்கள்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • பதவியேற்றவுடன் உடனடியாக நிறைவேற்றப்படும் என தேர்தல் பிரசாரத்தின்போது வழங்கப்பட்ட வாக்குறுதிகள் எதனையும் இதுவரை நிறைவேற்றவில்லை என எதிர்க்கட்சி பிரதிநிதிகள் தற்போதைய அரசாங்கத்துக்கு எதிராக குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளனர்.
  • மேலும், முன்னாள் ஜனாதிபதியுடன் ஒத்துழைத்து மில்லியன் கணக்கில் பரவலாக்கப்பட்ட நிதியைப் பெற்ற எதிர்க்கட்சி எம்.பி.க்களின் பட்டியலை வெளியிடவும் உறுதியளித்ததாக அவர்கள் தெரிவித்தனர்.
  • முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஆட்சியில் மதுபானம் விற்பனை உரிமம் பெற்ற முன்னாள் அமைச்சர்களின் பெயர்களை வெளியிடுவதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மற்றும் அந்தக் கட்சியின் தலைவர்கள் இருவரும் மக்களுக்கு உறுதியளித்தனர்.
எழுத்து அளவு:

பதவியேற்றவுடன் உடனடியாக நிறைவேற்றப்படும் என தேர்தல் பிரசாரத்தின்போது வழங்கப்பட்ட வாக்குறுதிகள் எதனையும் இதுவரை நிறைவேற்றவில்லை என எதிர்க்கட்சி பிரதிநிதிகள் தற்போதைய அரசாங்கத்துக்கு எதிராக குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளனர்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஆட்சியில் மதுபானம் விற்பனை உரிமம் பெற்ற முன்னாள் அமைச்சர்களின் பெயர்களை வெளியிடுவதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மற்றும் அந்தக் கட்சியின் தலைவர்கள் இருவரும் மக்களுக்கு உறுதியளித்தனர். ஆனால், இந்த வாக்குறுதி நிறைவேற்றப்படாமல் இருப்பதாக அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

மேலும், முன்னாள் ஜனாதிபதியுடன் ஒத்துழைத்து மில்லியன் கணக்கில் பரவலாக்கப்பட்ட நிதியைப் பெற்ற எதிர்க்கட்சி எம்.பி.க்களின் பட்டியலை வெளியிடவும் உறுதியளித்ததாக அவர்கள் தெரிவித்தனர். ஆனால் இந்தப் பட்டியல் இதுவரை பகிரங்கப்படுத்தப்படவில்லை.

ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்ததும் தவறு செய்தவர்களுக்கு உடனடியாக தண்டனை வழங்குவதாக உறுதியளித்த போதிலும், கடந்த அரசாங்கத்தில் இடம்பெற்ற பாரிய மோசடிகள் அல்லது ஊழல்கள் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்படவில்லை எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஒரு சில விசாரணைகள் ஆரம்பிக் கப்பட்டாலும், கடுமையான ஊழல் வழக்குகள் தொடர்பாக அரசாங்கம் எந்த அர்த்தமுள்ள நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று அவர்கள் வாதிடுகின்றனர்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...