Tamil Leader News
முக்கியம்
தேசியப் பூங்காக்களில் பிகினி பிடிப்பு: சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் பாரிய இடைவெளி!●காவன்திஸ்ஸ துயரம்: யானையின் வயிற்றில் ஈயக் குண்டுகள்; விசாரணைகள் CID வசம்!●வீட்டுவசதி நெருக்கடியால் 14 ஆண்டுகளுக்குப் பின் ஸ்பெயினில் மாபெரும் பொது வேலைநிறுத்தம்!●நாடு திரும்புகிறார் அனோஜன் சிவராசா; சவூதியில் மரண தண்டனையிலிருந்து  பூரண விடுதலை!●1990 சுவசரிய சேவைக்கு இந்தியாவிலிருந்து மேலும் 100 நோயாளர் காவு வண்டிகள்; வருகை நேரம் 10 நிமிடங்களாகக் குறைகிறது!●நிதித்துறையில் எழுந்துள்ள புதிய அபாயங்கள் குறித்து மத்திய வங்கியிடமிருந்து விசேட எச்சரிக்கை!●6 மாதங்களில் 271 மில்லியன் நட்டம்: அரச ஊடகங்களுக்கு என்ன நேர்ந்தது?●DIGInote: 2027 வரவு-செலவுத் திட்டம் இன்று நாடாளுமன்றத்தில் - மூலதனச் செலவு 2 ட்ரில்லியன்!●2027 வரவு செலவுத் திட்டம்: இலக்கங்களின் ஸ்திரத்தன்மை மக்களின் பாக்கெட்டுக்குத் தெரியுமா?●இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●
செய்திகள்

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் பாதுகாப்பு நட்சத்திர அந்தஸ்து குறைக்கப்பட்டது!

T

The Leader Desk

அக்டோபர் 19, 2024 • 6:26 AM

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் பாதுகாப்பு நட்சத்திர அந்தஸ்து குறைக்கப்பட்டது!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • (AirlineRatings.com) ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் பாதுகாப்பு மதிப்பீட்டை ஏழிலிருந்து ஆறு நட்சத்திரங்களாக தரமிறக்கியுள்ளது.
  • செப்டம்பர் 21 ஆம் திகதி அன்று சிட்னியில் இருந்து கொழும்பு நோக்கிப் பறந்து கொண்டிருந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானமான UL 607 விமானத்தின் விமானி அறை பூட்டப்பட்டதை மிகவும் பாரதூரமான சம்பவம் என்றும் இந்த நிறுவனம் விபரிக்கிறது.
  • AirlineRatings.com அதன் அறிக்கையை சமீபத்தில் வெளியிட்டது.
எழுத்து அளவு:

(AirlineRatings.com) ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் பாதுகாப்பு மதிப்பீட்டை ஏழிலிருந்து ஆறு நட்சத்திரங்களாக தரமிறக்கியுள்ளது.

செப்டம்பர் 21  ஆம் திகதி அன்று சிட்னியில் இருந்து கொழும்பு நோக்கிப் பறந்து கொண்டிருந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானமான UL 607 விமானத்தின் விமானி அறை பூட்டப்பட்டதை மிகவும் பாரதூரமான சம்பவம் என்றும் இந்த நிறுவனம் விபரிக்கிறது.
 
இது தொடர்பில் இலங்கை விசாரணைகளை மேற்கொண்டுள்ள போதிலும், இந்தச் சம்பவத்தின் மூலம் ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சர்வதேச ரீதியில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
 
AirlineRatings.com அதன்  அறிக்கையை சமீபத்தில் வெளியிட்டது.
 
ஏவியேஷன் ஹெரால்ட் (AV) நிறுவன அறிக்கையின்படி, சம்பந்தப்பட்ட விமானி தனது துணை விமானியை விமானியின் அறைக்குள் திரும்ப விடாமல் தடுத்தார், மேலும் விமானம் கொழும்பில் தரையிறங்கிய பின்னர், விமானி மற்றும்  துணை விமானிக்கும் இடையே ஏற்பட்ட தகராறே இந்தச. சம்பவத்துக்கு காரணம் என்று  முறைப்பாடு செய்யப்பட்டது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இதேவேளை, UL 607 விமானத்தின் விமானி அறையை பூட்டியமை தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டிருந்த விமானி சேவையில் இருந்து இராஜினாமா செய்த போதிலும், அவருக்கு எதிராக நடத்தப்படும் எந்தவொரு விசாரணைக்கும் இடையூறு விளைவிக்காது, அது தொடர்பான அனைத்து விசாரணைகளும் சுயாதீனமாக மேற்கொள்ளப்படும் என ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் தெரிவித்துள்ளது.
 
இரண்டு விசாரணைகள் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸால் நடத்தப்படும் என்றும் மற்றுமொரு விசாரணை சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபையால் நடத்தப்படும் என்றும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் பொதுத் தொடர்பாடல் முகாமையாளர் தீபால் பெரேரா தெரிவித்தார்.
 
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...