Tamil Leader News
முக்கியம்
தேசியப் பூங்காக்களில் பிகினி பிடிப்பு: சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் பாரிய இடைவெளி!●காவன்திஸ்ஸ துயரம்: யானையின் வயிற்றில் ஈயக் குண்டுகள்; விசாரணைகள் CID வசம்!●வீட்டுவசதி நெருக்கடியால் 14 ஆண்டுகளுக்குப் பின் ஸ்பெயினில் மாபெரும் பொது வேலைநிறுத்தம்!●நாடு திரும்புகிறார் அனோஜன் சிவராசா; சவூதியில் மரண தண்டனையிலிருந்து  பூரண விடுதலை!●1990 சுவசரிய சேவைக்கு இந்தியாவிலிருந்து மேலும் 100 நோயாளர் காவு வண்டிகள்; வருகை நேரம் 10 நிமிடங்களாகக் குறைகிறது!●நிதித்துறையில் எழுந்துள்ள புதிய அபாயங்கள் குறித்து மத்திய வங்கியிடமிருந்து விசேட எச்சரிக்கை!●6 மாதங்களில் 271 மில்லியன் நட்டம்: அரச ஊடகங்களுக்கு என்ன நேர்ந்தது?●DIGInote: 2027 வரவு-செலவுத் திட்டம் இன்று நாடாளுமன்றத்தில் - மூலதனச் செலவு 2 ட்ரில்லியன்!●2027 வரவு செலவுத் திட்டம்: இலக்கங்களின் ஸ்திரத்தன்மை மக்களின் பாக்கெட்டுக்குத் தெரியுமா?●இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●
செய்திகள்

'இது எவ்வளவு பெரிய வெற்றியாக இருந்தாலும் போரின் முடிவு அல்ல!' - இஸ்ரேல் பிரதமர்

T

The Leader Desk

அக்டோபர் 18, 2024 • 5:15 AM

'இது எவ்வளவு பெரிய வெற்றியாக இருந்தாலும் போரின் முடிவு அல்ல!' - இஸ்ரேல் பிரதமர்

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • யாஹ்யா சின்வார், தெற்கு காசா பகுதியில் இஸ்ரேலிய இராணுவத்தினரால் கொல்லப்பட்டதை இஸ்ரேல் உறுதி செய்துள்ளது.
  • இது குறித்து கருத்து தெரிவித்துள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, இராணுவ வீரர்களை பாராட்டி, இது எவ்வளவு பெரிய வெற்றியாக இருந்தாலும், அது போரின் முடிவு அல்ல என்று கூறியுள்ளார்.
  • சின்வார் 2017 ஆம் ஆண்டு முதல் காசா பகுதியில் ஹமாஸ் போராளிக் குழுவை வழிநடத்தி வருகிறார், மேலும் அவர் அக்டோபர் 7 ஆம் திகதி இஸ்ரேல் மீதான தாக்குதலுக்கு மூளையாக செயற்பட்டதாக அமெரிக்கா மற்றும் பிரிட்டனால் குற்றம் சாட்டப்பட்டார்.
எழுத்து அளவு:

யாஹ்யா சின்வார், தெற்கு காசா பகுதியில் இஸ்ரேலிய இராணுவத்தினரால் கொல்லப்பட்டதை இஸ்ரேல் உறுதி செய்துள்ளது.

காசா பகுதியில் ஹமாஸுக்கு எதிரான போரில் இதுவரை இஸ்ரேல் பெற்ற மிகப்பெரிய வெற்றி இது என இஸ்ரேல் கூறுகிறது.
 
அவர் திட்டமிட்ட சிறப்புப் படை நடவடிக்கையில் கொல்லப்படவில்லை என்றும், தெற்கு காசாவில் உள்ள ரஃபாவில் இஸ்ரேலியப் படைகளுடன்   மோதலில் அவர் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் கூறியுள்ளது.
 
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, இராணுவ வீரர்களை பாராட்டி, இது எவ்வளவு பெரிய வெற்றியாக இருந்தாலும், அது போரின் முடிவு அல்ல என்று கூறியுள்ளார்.
 
தீமையை நல்லது வெல்லும் என்பதை மீண்டும் ஒருமுறை உலகிற்கு எடுத்துக்காட்டியதாக இஸ்ரேல் பிரதமர் கூறுகிறார்.
 
பெஞ்சமின் நெதன்யாகு மேலும் கூறுகையில், ஹமாஸ் தலைவர் கொல்லப்பட்டது ஓராண்டு கால காசா போரின் முடிவைக் காட்டிலும் "இறுதியின் ஆரம்பம்" என்று கூறினார்.
 
சின்வார் 2017 ஆம் ஆண்டு முதல் காசா பகுதியில் ஹமாஸ் போராளிக் குழுவை வழிநடத்தி வருகிறார், மேலும் அவர் அக்டோபர் 7 ஆம் திகதி இஸ்ரேல் மீதான தாக்குதலுக்கு மூளையாக செயற்பட்டதாக அமெரிக்கா மற்றும் பிரிட்டனால் குற்றம் சாட்டப்பட்டார்.
 
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...