Tamil Leader News
முக்கியம்
தேசியப் பூங்காக்களில் பிகினி பிடிப்பு: சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் பாரிய இடைவெளி!●காவன்திஸ்ஸ துயரம்: யானையின் வயிற்றில் ஈயக் குண்டுகள்; விசாரணைகள் CID வசம்!●வீட்டுவசதி நெருக்கடியால் 14 ஆண்டுகளுக்குப் பின் ஸ்பெயினில் மாபெரும் பொது வேலைநிறுத்தம்!●நாடு திரும்புகிறார் அனோஜன் சிவராசா; சவூதியில் மரண தண்டனையிலிருந்து  பூரண விடுதலை!●1990 சுவசரிய சேவைக்கு இந்தியாவிலிருந்து மேலும் 100 நோயாளர் காவு வண்டிகள்; வருகை நேரம் 10 நிமிடங்களாகக் குறைகிறது!●நிதித்துறையில் எழுந்துள்ள புதிய அபாயங்கள் குறித்து மத்திய வங்கியிடமிருந்து விசேட எச்சரிக்கை!●6 மாதங்களில் 271 மில்லியன் நட்டம்: அரச ஊடகங்களுக்கு என்ன நேர்ந்தது?●DIGInote: 2027 வரவு-செலவுத் திட்டம் இன்று நாடாளுமன்றத்தில் - மூலதனச் செலவு 2 ட்ரில்லியன்!●2027 வரவு செலவுத் திட்டம்: இலக்கங்களின் ஸ்திரத்தன்மை மக்களின் பாக்கெட்டுக்குத் தெரியுமா?●இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●
செய்திகள்

அரச ஊழியர் ஒருவரை அங்கஜன் இராமநாதன் அறைந்ததாக பகிரப்படும் போலிச் செய்தி!

T

The Leader Desk

அக்டோபர் 17, 2024 • 7:35 AM

அரச ஊழியர் ஒருவரை அங்கஜன் இராமநாதன் அறைந்ததாக பகிரப்படும் போலிச் செய்தி!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • தலைவரும் பாராளுமன்ற தேர்தல் வேட்பாளருமான அங்கஜன் இராமநாதன், அரச ஊழியர் ஒருவரை அறைந்ததாக கூறும் காணொளி ஒன்று சமூக வலைதளங்களில் பகிரப்படுவதை FactSeeker இனால் அவதானிக்க முடிந்தது.
  • இக் காணொளியை google reverse image search மூலம் ஆராய்ந்ததில் இது இந்தியாவின் மஹாராஷ்டிரா மாநிலத்தின் வருட் நகரில் இடம்பெற்ற சம்பவம் ஒன்றின் காணொளி என்பதை உறுதிப்படுத்த முடிந்தது.
  • இது குறித்த செய்தி இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 14ஆம் திகதி ” The Indian express” செய்தி தளத்தில் வெளியாகியுள்ளது.
  • செய்தி இணைப்பு https://shorturl.at/jLGwu https://www.facebook.com/watch/?ref=search&v=940678707884913&external_log_id=5919a87a-f2a7-46bc-902f-d7329f2329fe&q=Corrupted%20Jaffna%20MP%20Angajan%20Ramanathan%20slapping%20a%20government%20servant.
எழுத்து அளவு:

தலைவரும் பாராளுமன்ற தேர்தல் வேட்பாளருமான அங்கஜன் இராமநாதன், அரச ஊழியர் ஒருவரை அறைந்ததாக கூறும் காணொளி ஒன்று சமூக வலைதளங்களில் பகிரப்படுவதை FactSeeker இனால் அவதானிக்க முடிந்தது.

“பா. உ என்றால் அரச உத்தியோகத்தரை கன்னத்தில் அறையலாமா?”, “ஊழல் செய்த யாழ் பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் அரச ஊழியரை அறைந்துள்ளார்” போன்ற பதிவுகளுடனேயே இக் காணொளி பகிரப்பட்டு வருகின்றது.
 
இது குறித்து இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழுவிலும் முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ள நிலையில், இதன் உண்மைத்தன்மை குறித்து factseeker ஆராய்ந்து பார்த்தது.
 
இக் காணொளியை google reverse image search மூலம் ஆராய்ந்ததில் இது இந்தியாவின் மஹாராஷ்டிரா மாநிலத்தின் வருட் நகரில் இடம்பெற்ற சம்பவம் ஒன்றின் காணொளி என்பதை உறுதிப்படுத்த முடிந்தது.
 
இக் காணொளி “ஸ்வாபிமானி ஷேத்காரி சங்கதனா” சங்கத்தின் இளைஞர் பிரிவுத் தலைவர் மயூர் போர்டே என்பவர் மஹாராஷ்டிரா வங்கியின் கிளை தலைவரை அறைந்த காணொளி என்பதை கண்டறிய முடிந்தது. இது குறித்த செய்தி இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 14ஆம் திகதி ” The Indian express” செய்தி தளத்தில் வெளியாகியுள்ளது.
 
ஆகவே, ஜனநாயக தேசிய கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற தேர்தல் வேட்பாளருமான அங்கஜன் இராமநாதன், அரச ஊழியர் ஒருவரை அறைந்ததாக சமூக வலைதளங்களில் பகிரப்படும் காணொளியில் இருப்பது அங்கஜன் இராமநாதன் அல்ல என்பதையும், இது உண்மையில் ஸ்வாபிமானி ஷேத்காரி சங்கதனா சங்கத்தின் இளைஞர் பிரிவுத் தலைவர் மயூர் போர்டே என்பவர் மஹாராஷ்டிரா வங்கியின் கிளை தலைவரை அறைந்த காணொளி என்பதையும் Factseeker உறுதிப்படுத்துகின்றது.
 
செய்தி இணைப்பு
 
 
 
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...